(Reading time: 36 - 71 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 15 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

ந்த வீடு தான் மாமா உள்ள வாங்க நீங்களும் வாங்க அத்தை என்றாள் அருந்ததி

வினோத்தும் அபர்ணாவும் யார் இவர்கள் என்று விழித்து கொண்டு இருந்தனர்

அப்போது தான் மூவரும் அவளுக்கு பின்னால் வந்த விமலாவையும் சேதுராமையும் பார்த்தார்கள்

அவர்களை பார்த்தவுடன் தான் கீர்த்தி தன் நிலைக்கு வந்தாள் உள்ள வாங்க என்று அவர்களை பார்த்து சொன்னாள்

உக்காருங்க என்று சொல்லி வினோத் அருகில் இருந்த சோபாவை காமித்தாள்

யார் கீர்த்தி இவங்க என்று வினோத் கேக்க வந்தான் அதுக்குள் விமலாவே பேச ஆரம்பித்தார்

எப்படி இருக்க மா

நல்லா இருக்கேன்

இவங்க யாரு

இது என் அண்ணன் வினோத் அது அபர்ணா என் பிரண்ட்

அருந்ததி சும்மா கிடக்காம உன் பிரண்ட் எதுக்கு உங்க அண்ணன் கூட இருக்கா என்றாள்

மூவரும் அவளை கொலை வெறியோடு பார்த்தார்கள் அவ அம்மா மாதிரியே பேசுது பாரு கீர்த்தி பல்லை கடித்து கொண்டு என்னோட பிரண்ட் தான் எங்க அண்ணாவை கல்யாணம் செஞ்சிருக்கா பின்ன ஒண்ணா இல்லாம தனியாவா இருப்பாங்க என்றாள்

அருந்ததி வாயை மூடி கொண்டாள்

கீர்த்தி வினோத்தை அண்ணா என்று அழைத்தாள் அவன் வினோதமாக அவளை பார்த்தான்

இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாமல் முழிச்சு வைப்பான் இவங்க போகட்டும் உனக்கு இருக்கு என்று நினைத்து கொண்டவள் அண்ணா இவங்க மாமா வோட சொந்த காரங்க அப்பு நீ காபி போடு நான் மாமாவை கூட்டிட்டு வரேன் அண்ணா நீ இவங்க கிட்ட பேசிட்டு இரு இதோ வரேன் என்று சொல்லி விட்டு மேலே போனாள்

வினோத் கிழே என்ன பேச என்று தெரியாமல் முழித்து கொண்டு அவர்கள் எதிரில் அமர்ந்தான்

மாமா மாமா என்ற கூச்சலோடு அறைக்குள் வந்தவளை அணைத்து கொண்டான் கார்த்திக்

என்ன கீர்த்தி ஏன் இப்படி ஓடி வர பேயை பார்த்த மாதிரி

பேயே தான்

என்ன

ஆமா அருந்ததி பேய்

அது படம் ஆச்சே என்ன விஷயம் டி

கீழ கீழ

கீழ என்ன

விமலா ஆண்ட்டி அப்புறம் சேதுராம் சார் வந்துருக்காங்க

அவன் முகம் ஒரு நொடி சுருங்கி பின் இயல்பானது அவங்க ஏன் கீர்த்தி இங்க வந்துருக்காங்க தெரியலை மாமா அப்புவை காபி குடுக்க சொல்லிட்டு வந்துருக்கேன் வாங்க

இரண்டு அடி எடுத்து வைத்தவனை இழுத்து அணைத்தாள்

என்ன டி

என்னது இது என்று அவன் போட்டிருந்த உள் பனியனை காட்டினாள்

அம்மா அப்பா தான் டி அப்புறம் என்ன புரியாமல் விழித்தவனிடம் சட்டையை எடுத்து கொடுத்து இத போட்டுட்டு வாங்க கூட அந்த கொல்லி கண்ணு அருந்ததி வந்துருக்கா என்றாள்

உம்மா டீ செல்ல குட்டி வா என்று அவளையும் அழைத்து சென்றான் கொஞ்சிய நேரத்தை பாரு என்ற படியே அவனுடன் சென்றாள்

கிழே போனதும் வினோத் அருகில் அமர்ந்தவன் எப்படி இருக்கீங்க அம்மா அப்பா என்றான் அப்போது அங்கு காபி யோடு வந்த அபர்ணாவுக்கும் வினோத்துக்கு அதிர்ச்சி யார் இந்த புது அம்மா அப்பா என்று முழித்தார்கள்

கீர்த்தி அவள் கையில் இருந்த காபியை வாங்கி கொடுத்தாள்

இவளுக்கு எல்லாம் காபி கொடுக்கணும்னு கீர்த்தியும் இவ கொடுக்கும் காபியை நான் குடிக்கணுமான்னு அருந்ததியும் நினைத்து கொண்டார்கள் மத்தவர்களுக்காய் அதை வாங்கினாள்

கீர்த்தி அபர்ணாவின் அருகில் நின்று கொண்டு அவர்கள் பேச்சை கேட்டாள்

நாங்க நல்லா இருக்கோம் கார்த்திக் இங்க ஒரு கல்யாணம் அதுக்கு வந்தோம் அப்ப தான் உன்ன பாத்துட்டு போலாம்னு தோணுச்சு அதான் வந்தோம் நீ எப்படி இருக்க

நாங்க நல்லா இருக்கோம் என்று எல்லாரையும் சேர்த்து சொன்னான்

இது யாரு வீடு பா உன்னோட வீடு தான

இல்ல மா இது வாடகை வீடு தான் கீழ வினோத்தும் மேல நாங்களும் இருக்கோம் ஆனா சாப்பாடு எல்லாம் கீழ தான் ஒரே வீடு ஒரே வாடகை தான் நாங்க ஒண்ணா தான் இருக்கோம்

என்ன பா இது கோடி கணக்கான சொத்துக்கு வாரிசா இருந்து கிட்டு வாடகை வீடு சொல்றியே என்றார் சேது ராம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.