(Reading time: 36 - 71 minutes)

நீ சும்மா இரு வினோத் எல்லாத்துலயும் இவளுக்கு விளையாட்டு தான் சொல்லு டி ஒழுங்கா எங்க போன பதில் சொல்லு கீர்த்தி

....

அபர்ணா காலேஜ் முடிஞ்சு பசியோட வாரா நாங்க வேலை முடிஞ்சு வரோம் அவளுக்கு பசிக்குமேனு கொஞ்சமாவது யோசிச்சியா

நீ வெட்டியா வீட்ல இருக்கானு தான நாங்க சாவி எடுக்காம போறோம் நீ எங்க ஊரை சுத்த போன அதுவும் போன் ஆப் பண்ணி வச்சு

எல்லாரையும் ஒரு முறை பார்த்தவள் சாரி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி விட்டு வீட்டுக்குள் ஓடி விட்டாள்

பாவம் டா எவ்வளவு சந்தோசமா வந்தா

ஆமா அண்ணா போய் சமாதான படுத்துங்க நான் டீ போடறேன்

மேலே சென்றவன் கண்களில் பட்டது அவள் மூடிய அறை மட்டுமே

ஒவரா திமிர் ஏறிட்டு இவளுக்கு எப்ப பாத்தாலும் விளையாட்டு தான் தன் அறைக்குள் சென்றவன் குளித்து விட்டு வெளியே வந்தான் அப்போதும் பூட்டி தான் இருந்தது

போ இவளை போய் கெஞ்சணுமோ கிழே வந்தான்

என்னனா செய்றா

தெரியலை ரூம் பூட்டி இருக்கு நல்லா தூங்கும் நீ டீ குடு மா

இந்தாங்க அண்ணா நான் போய் அவளை கூட்டிட்டு வாறேன்

போனவள் சிறிது நேரத்தில் வந்தாள் துறக்க மாட்டிக்கா அண்ணா கால் பண்ணாலும் சுட் பண்றா

விடு அப்பு பசிச்சா தன்னாலே வருவா

இரவு உணவு சாப்பிடவும் வர வில்லை என்றவுடன் எல்லாருக்கும் கவலை ஆகியது ஒருவர் மாற்றி ஒருவர் கூப்பிட்டும் அவள் கதவை திறக்க வில்லை

அண்ணா 9 மணி ஆக போகுது நீங்க ரெண்டு பேரும் முதலில் சாப்பிடுங்க அப்புறம் எல்லாரும் சேர்ந்து அவளை சாப்பிட வைப்போம் என்றாள் அபர்ணா

அவர்கள் சாப்பிட உக்காரவும் ராஜு தாத்தா கார்த்திக்கை அழைக்கவும் சரியாக இருந்தது

எப்படி இருக்க தாத்தா அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க

எல்லாரும் நல்லா இருக்கோம் ஆமா கீர்த்திக்கு என்ன கிபிட் குடுத்த

என்னது கிப்ட்டா எதுக்கு கிப்ட் அவளுக்கு பிறந்த நாள் கூட இல்லையே

அப்ப அவ உங்கிட்ட சொல்லவே இல்லையா கார்த்திக் சரி அவ எங்க அவ கிட்ட கொடு

அவ மேல ரூம்ல இருக்கா தாத்தா நான் கீழ சாப்பிட வந்தேன் என்ன சொல்லலையா சொல்லு தாத்தா

நீ மட்டும் சாபிடறியா ஏன் அவ ஏன் இப்ப மேல இருக்கா

அது வந்து தாத்தா அவளை அடிச்சிட்டேன் தாத்தா நடந்ததை சொன்னான்

நீ என்ன லூசா டா இத்தனை நாள் எங்கயாட்டும் வெளிய போனாளா இல்ல தான அப்ப என்ன விவரம்னு கேக்காம கை நீட்டிருவியா

என்ன ஆச்சோன்னு பயந்துட்டேன் தாத்தா

இனியொரு தரம் இப்படி செய்யாத என் அப்பு டார்லிங் கிட்ட போன் கொடு

நான் குடுக்கேன் ஆனா நீ சொல்லு அவ ஏதும் சொல்லலையானு ஏன் கேட்ட

அவளை வேலைக்கு போன்னு கொடுமை படுத்துனல்ல

வேலைக்கு போக சொன்னா கொடுமையா தாத்தா

முழுசா கேளுடா ஸ்ப்ரிங் மண்டையா

தாத்தா என்று பல்லை கடித்தான்

சரி சரி கேளு அன்னைக்கு ஊருக்கு வந்து மேடம் ஒரே பீல் அப்ப தான் நான் ஒரு ஐடியா குடுத்தேன் அது சக்ஸஸ் ஆகி விட்டது அந்த சந்தோசத்தை உங்கிட்ட சொல்ல தான் வந்தா நீ அடிச்சிருக்க

என்ன ஐடியா

நான் சொல்ல மாட்டேன் அடிச்சதுக்கு தண்டனை நீ அப்பு கிட்ட போன் கொடு

எப்படி இருக்கீங்க தாத்தா

நான் நல்ல இருக்கேன் மா நீ எப்படி இருக்க அந்த தேவாங்கு உன்ன நல்லா பாத்துக்குறானா

தேவாங்கு பக்கத்துல தான் தாத்தா இருக்கு கொடுக்குறேன்

நான் உங்களுக்கு தேவாங்கா தாத்தா இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்

உன்ட நான் பேசவே வரலையே ஏன்டா டார்லிங் கிட்ட இருந்து போன் பிடுங்குன குடுடா அவ கிட்ட எருமை மாடு தடி மாடு

போயா கிழவா ரொம்ப கொஞ்சாத இந்தா அப்பு உங்கிட்ட தான் பேசணுமாம்

சொல்லுங்க தாத்தா

அப்பு நீ கீர்த்தி கிட்ட போய் தாத்தா எல்லாத்தையும் சொன்னாங்க இவ்வளவு பெரிய விஷயம் செஞ்சிருக்க எங்களுக்கு தெரியாம எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா ஏன் எங்க கிட்ட சொல்லல நாங்க எதிர் பார்க்கவே இல்ல தெரியுமா எங்களுக்கும் அதை பத்தி சொல்லு கார்த்திக் வேற ரொம்ப சந்தோசமா இருக்கான் இந்த மாதிரி அவ கிட்ட சொல்லு அவ பேசுவா

சரி தாத்தா சொல்றேன் ஆனா அவ என்ன தான் செஞ்சா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.