(Reading time: 36 - 71 minutes)

என்னால இல்லை கூமுட்டை உன் மூளையை அடகு வச்சிருந்த நான் மீட்டு எடுத்திருக்கேன் கார்த்திக்கிட்ட சொல்லிட்டியா

சும்மா சொன்னா எப்படி தாத்தா புக்கோட போய் நின்னா எப்படி இருக்கும்

சரி மா அங்க ஆஃபிஸ் விக்க போறான்னு சொன்னார்களா என்ன ஆனது

நான் இன்னும் அக்காகிட்ட கேக்கல தாத்தா கேட்டுட்டு நைட் பேசுறேன்

சரி மா வச்சிரு

அக்கா ஆபீஸ் விக்க போறான்னு சொன்னிங்க என்ன ஆச்சு

தெரிஞ்ச வங்க கிட்ட கேட்டுட்டு இருக்கேன் மா அப்படியே உழைப்பை குடுக்கணும்ல சும்மா குடுத்து அவங்க பேரை கெடுக்க கூடாது பாக்கலாம்

சார் எப்ப வருவாரு

5 மணிக்கு வந்துரணு சொன்னாங்க இன்னும் வரல மணி 5.30 ஆகிட்டு பாப்போம் 

அவர் வந்தாரு வந்தாரு 6 மணிக்கு வீட்டுக்கு போறதுக்குள்ள எல்லாரும் வந்துருவாங்க செத்தேன் போன் பண்ணி சொல்லிறலாமா வேண்டாம் வேண்டாம் சர்பரைஸ் கொடுக்கலாம் சுவிட்ச் ஆப் செய்தாள்

அவள் பெயரிட பட்ட புக் வாங்கி பார்த்து அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது

என்ன கீர்த்தி அழுகை உன் புக் படிச்சு மித்தவங்க தான் நலனும் என்றாள் மைதிலி

அக்கா அதெல்லாம் நல்லா தான் இருக்கும் கிண்டல் பண்ணாதீங்க நீங்க படிச்சிட்டு எனக்கு சொல்லணும் நான் கிளம்புறேன் சரியாய் ரொம்ப நன்றி அப்புறம் சீனி சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி

பாத்து போ போய்ட்டு போன் பண்ணு

சரிக்கா பை

அடுத்து இவள் பஸ்காக நின்று பஸ் வராமல் கடைசியில் ஆட்டோ பிடித்து கிளம்பினாள்

5 மணிக்கு கல்லூரி விட்டு வந்த அபர்ணா கீர்த்தியை காணாமல் திகைத்தாள் அதை விட சாவி எடுத்துட்டு போகாத தன் முட்டாள் தனத்தை நினைத்து சோர்ந்தாள்

இந்த மங்கி இருப்பான்னு நான் எடுக்காம போனேன் எங்க பொண்னு தெரியலையே வாசலில் அமர்ந்தாள்

ஆறு மணிக்கு அலுவலகம் விட்டு வந்த கார்த்திக்கும் வினோத்தும் வாசலில் அமர்ந்திருந்த அபர்ணாவை பார்த்து திகைத்தனர்

என்ன ஆச்சு அப்பு இங்க உக்காந்துருக்க

இல்லை வினோ கீர்த்தியை காணும் நான் சாவி எடுத்துட்டு போகலை

எங்க போனா கடைக்கு எங்கயும் போயிருப்பா கார்த்திக் அவளுக்கு போன் பண்ணு

பண்றேன் டா ஒரு மணி நேரமா வாசலில் தான் உக்காந்துருக்கியா அப்பு

ஆமா அண்ணா நீங்க ரெண்டு பெரும் கி எடுத்துட்டு போலனு தெரியும் அதன் உங்களையும் கூப்பிடல அவளுக்கு கால் பண்ணேன் சுவிட்ச் ஆப் னு வருது எதுக்கும் இப்ப நீங்களும் பண்ணுங்க

சுவிட்ச் ஆபா என்னடா வினோத் இந்த லூசு எங்க போச்சு

தெரில டா போன் பானு

இப்பவும் சுவிட்ச் ஆப் தான் டா வருது

வினோ

என்ன அப்பு

இங்க பக்கத்துல எதாவது ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரியா பசிக்கிது என்றாள் அபர்ணா அதை கேட்டு

கார்த்திக் செம எரிச்சல் ஆனான்

பாவம் அபர்ணா பாசிலை வந்துருக்கா இந்த லூசு எங்க விளையாட போச்சோ தெரியலையே கோபத்தின் உச்சிக்கே சென்றான்

வினோத் ஸ்னாக்ஸ் வாங்கி கொடுத்து சாப்பிட்ட பின்னும் அவள் வந்து சேர வில்லை

சிறிது நேரத்தில் பதட்டமும் வந்தது தனியா எங்கயும் போய் மாட்டிகிட்டான்னு தெரியலையே எங்க எப்ப பொண்னு தெரியாமல் எங்க போய் தேட திகில் அடைந்தனர் அப்போது தான் வந்தாள் கீர்த்தி அதுவும் ஈ என்று சிரித்த முகத்துடன் சந்தோசத்தை எப்படி எல்லார் கிட்டயும் சொல்ல போறோம் என்ற எதிர் பார்ப்பில் அவள் முகம் புன்னகையை தாங்கி இருந்தது

அவளுக்கு ஒன்றும் இல்லை என்று நிம்மதி பிறந்தது மூவருக்கும் ஆனால் அபர்ணா பசிக்கிது என்று சொன்ன வார்த்தை நினைவு வந்தது கார்த்திக்கு

இங்க இவளை பசியோட இருக்க வச்சிட்டு எப்படி சிரிச்சிட்டு வாரா பாரு

எங்க டி போன

உடனே பதில் சொன்னா விட்டுருப்பானோ என்னவோ

சீக்கிரம் வந்துட்டீங்களா எல்லாரும் வாங்க உள்ள போலாம் என்று கதவை திறந்தாள் வாங்க உள்ள என்று சொன்னவளை இழுத்து ஒரு அரை வைத்தான் கார்த்திக் அதிர்ச்சியில் சிலையாகி நின்றனர் மத்தவர்கள் கீர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது

டேய் அவ தான் வந்துட்டாலே ஏன் அடிச்ச பாரு அழுறா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.