(Reading time: 36 - 71 minutes)

எதுக்கு கீர்த்தி இவ்வளவு பேப்பர் பேனா எல்லாம் நீயும் படிக்க போறியா

படிப்பா இல்லையே இதெல்லாம் உனக்கு தான் நீ காலேஜ் போக போறல அதான் 

அடுத்த வாரத்தில் கார்த்திக் வினோத் அலுவலகமும் அபர்ணா காலேஜ் க்கும் சென்ற உடன் தன்னுடைய அறையில் இருந்து பழைய நோட்களை எடுத்தவள் அவளுடைய கவிதைகளை வரிசை படுத்தினாள் சில திருத்தங்கள் செய்தாள் மேலும் ஒரு கதையை எழுதினாள் 

ஒரு வாரத்தில் வேலைகளை முடித்தவள் ஒரு நாள் அவர்கள் எல்லாரும் சென்ற பின் தாத்தாவுக்கு அழைத்து சொல்லி விட்டு ரிதம் பப்ளிகேசன் மைதிலி யை தேடி சென்றாள் 

ஹே கீர்த்தி வா வா எப்படி இருக்க இங்க அதிசயமா வந்துருக்க உன்னோட மாமா எப்படி இருகாங்க இன்னும் பூ வ வச்சு பாட்டு பாடி கிட்டு அவரை சுத்தி கிட்டு தான் இருக்கியா

இல்ல அக்கா இப்ப அவர் தான் என் பின்னாடி சுத்துறாரு

அவர் சுத்துறாருனு சொல்லு ஒத்துக்குறேன் ஆனா நீ சுதலனு சொல்லாத நம்ப மாட்டேன் நீ கார்த்திக் அண்ணா கிட்ட மயங்கி கிடக்கியே 

போங்க அக்கா கிண்டல் பண்ணாதீங்க . சரி உங்க லைப் எப்படி போகுது

அதுக்கு என்ன நல்லா தான் போகுது ஆனா என்ன ஒரு சின்ன ப்ரோப்லேம் அது தான் சோகம்

என்ன அக்கா

நான் இந்த பிரஸ் வச்சிருக்குறதுனால வீட்ல குழந்தைகளை கவனிக்க முடியுறது இல்ல அத்தை அப்புறம் வீட்டு காரர் இதை விக்க சொல்றாங்க என்ன செய்யனு தெரியல 

என்னது விக்க போறிங்களா

அதுல உனக்கு ஏன் அதிர்ச்சி ஆமா நீ என்ன விஷயமா இங்க வந்த

தாத்தா தான் அக்கா அனுப்புனாரு கதை பப்ளீஸ்க்கு கொடுக்கலாம்னு அதான் வந்தேன் ஆனா நீங்க விக்க போறதா சொல்றிங்க 

ஓ நல்ல விஷயம் தான் ஆனா இப்ப போல வந்துருக்கியே ஆனா பப்ளீஸ் ஸ்டார்ட் பண்ணிரலாம் மா ஆனா உடனே கதை ரெடினா பண்ணிரலாம் அடுத்த கதைன்னா அப்ப இந்த ஆபீஸ் யாரு கைல இருக்கும்னு தெரியாது

அதை அப்புறம் பாக்கலாம் அக்கா அப்ப முதல் கதையும் இந்த கவிதையும் பப்ளீஸ் பண்ணிரலாம் ல

கண்டிப்பா பண்ணிரலாம் கீர்த்தி உனக்காக இத கூட செய்ய மாட்டானா நீ அங்க இருக்காரே சீனி சார் அவர் கிட்ட குடுத்துட்டு போ அவர் கரெக்ஷன் பன்னிருவர் அப்புறம் எனக்கு ஒர்க் முடியுதோ அணைக்கு உனக்கு கால் பண்ணி சொல்றேன் இப்ப நான் வீட்டுக்கு போனும் இன்னைக்கு ஒரு பாங்க்ஷன் வீடு அத்தை கண்டிப்பா வர சொன்னாங்க சரி கீர்த்தி நன் கிளம்புறேன் வா எடிட்டர் கிட்ட சொல்லிட்டு போறேன் 

சரி அக்கா எவ்வளவு நாளில் வரும் புக்

ஒரு வாரத்தில் முடிஞ்சிரும் கீர்த்தி நீ கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி இருந்தால் ரெண்டு நாளில் முடிஞ்சிரும் ஆனா பேப்பர் அதனால ஒரு வாரம் சீனி சார் இது என் தங்கச்சி புக் எழுத போறாங்க கொஞ்சம் பாத்துக்கோங்க நன் ஆபீஸ்க்கு லீவு நீங்க கிளோஸ் பண்ணிட்டு போயிருங்க 

சரி மா மைதிலி பாத்து போ நான் இவங்க கிட்ட வாங்கிக்கிறேன்

அவரிடம் போய் கொடுத்தவள் வீட்டுக்கு சென்று தாத்தாவை அழைத்தாள்

அக்கா அந்த ஆபிஸை விக்க போறாங்களாம் தாத்தா 

என்ன கீர்த்தி சொல்ற அப்ப உன் கதை

அத கொடுத்துட்டேன் பப்ளீஸ் பன்னிருவங்களாம் ஆனா அடுத்த கதை எப்படி எழுத

நீ எழுத இது இல்லனா வேற இடம் பாத்துக்கலாம்

சரி தாத்தா என்று வைத்து விட்டாள் ராஜு தாத்தா யோசனைக்கு போனார் 

ஒரு வாரம் கழித்து மைதிலி கீர்த்தியை அழைத்தாள் உன் புக் பப்ளிஸ் ஆகி விட்டது கீர்த்தி தலைப்பு நல்லா இருக்கு கதை நான் இன்னும் படிக்கவில்லை இனி தான் படிக்கணும் உடனே புக் ஸ்டார்ல கிடைக்காது ஆனா ஆன்லைன்ல இருக்கும் வேணும்னா வாங்கிக்கலாம் கண்டிப்பா உனக்கு புக் வேணும்னா ஆபீஸ் வந்து வாங்கிக்கோ ஆனா 5 மணிக்கு வா சீனி சார் அப்ப தான் வருவாங்க அவங்க கிட்ட தான் டீடெயில்ஸ் இருக்கு என்றாள்

இன்னைக்கே வரேன் கா சாயங்காலம் பாப்போம்

சரி கீர்த்தி வைக்கிறேன்

நம்ம பெயர் எழுதி பார்த்தாலே எல்லாருக்கும் சந்தோசம் இதில் அவள் பெயர் புத்தகத்தில் வந்தால் துள்ளி குதித்தாள் 

5 மணிக்கு தான போகணும் அப்பு கிட்ட வந்து சொல்லிக்கலாம் மாமாவும் வினோத்தும் 6 மணிக்கு தான் வருவாங்க அதுக்குள்ள வந்துரலாம் என்று நினைத்து கொண்டு கிளம்பி சென்றாள் அனால் ஒன்றை மட்டும் மறந்து விட்டு சென்றாள் யாரிடமும் சாவி இல்லை என்பது

கீர்த்தி வீட்டில் இருப்பதால் யாருமே சாவி எடுத்து போவதில்லை

அங்கு போனதும் மைதிலி தான் இருந்தால் சீனி இன்னும் வரல கீர்த்தி இங்க உக்காரு

தன் தாத்தாவை அழைத்தாள் கீர்த்தி புக் பப்ளீஸ் ஆகிட்டு தாத்தா சந்தோசமா இருக்கு இது எல்லாமே உன்னால தான் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.