அதை அவ கிட்டயே கேட்டுக்கோ டார்லிங் வைக்கிறேன்
வாங்க எல்லாரும் மேல போலாம்
அவள் பின்னாடியே சென்றனர்
கீர்த்தி கதவை திறடி ஏண்டி எங்க கிட்ட சொல்லவே இல்லை பாரு கார்த்திக் அண்ணா கூட சர்ப்ரைஸ் ஆகி நின்னுட்டாங்க தாத்தா தான் சொன்னார் எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா எங்களுக்கும் அதை பத்தி சொல்லு டி கீர்த்தி
ஹே அப்பு நிஜமாவா தாத்தா சொல்லிட்டாங்களா என்ற படி சிரித்து கொண்டே கதவை திறந்தாள் கீர்த்தி
ஏண்டி நான் உன்ன அடிச்சிருக்கேன் அழுதுட்டு இருப்பான்னு பார்த்தா பல்ல காட்டிட்டு வர
என்னமோ இன்னைக்கு தான் அடிச்ச மாதிரி சீன் போடறீங்க இதெல்லாம் பழகுனது தான என்றாள் கார்த்திக் முறைத்தான் இவ அடங்கவே மாட்டா
ஹே அப்பு தாத்தா என்ன சொன்னார் டி எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா
கீர்த்தி தாத்தா ஒண்ணுமே சொல்லல உன்கிட்டயே கேக்க சொன்னாரு
சொல்லலையா
எம்மா தாய்களா தயவு செஞ்சு என்ன விஷயம்னு சொல்லுங்க என் மண்டையே உடைஞ்சிரும் என்றான் வினோத்
ஓய் அண்ணா இனி என்ன மரியாதையா பேசு இன்னைல இருந்து நான் எழுத்தாளர் ஆக்கும்
என்னது எழுத்தாளரா நம்புற மாதிரி புழுகணும்
இரு வரேன் என்றவள் தன்னுடைய இரண்டு புத்தகங்களை எடுத்து காமித்தாள்
கீர்த்தனா கார்த்திகேயனின் கவிதைகள் என்ற புத்தகத்தை பார்த்த அபர்ணா வாயை பிளந்தாள் ஹே கீர்த்தி நிஜமாவே செம டி எங்களுக்கு ஏன் சொல்லல எதிர் பார்க்கவே இல்லை
சர்ப்ரைஸா சொல்லணும்னு நினைச்சேன் ஆனா என் மாமா தான் எனக்கு அடி கொடுத்து சர்ப்ரைஸ் குடுத்துட்டாங்களே என்று சொல்லி அவனை முறைத்தாள் அவன் சலனமே இல்லாமல் அவள் முகத்தை பார்த்தான்
வினோத்க்கும் அதிசயமே பார் டா கார்த்திக் நம்ம கீர்த்திக்குள்ளயும் ஒரு குட்டி புலி ஒளிஞ்சி இருந்துருக்கு டா என்றான்
கார்த்திக் அந்த புத்தகத்தை பார்த்து கொண்டே இருந்தான் அவளுடைய கதை புத்தகம் எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்தான்
மாமாக்கு பிடிக்கலையா இந்த வேலை திட்டுவாங்களோ என்று யோசித்தாள் கீர்த்தி
சரி வா சாப்டுட்டே இந்த புக் வரலாறை சொல்லு பாப்போம்
ஆமா டி செம பசி எங்க சாப்பிட கூப்டாம இருந்துருவீங்களோனு பயந்துட்டேன்
அட பாவி நாங்க தான் கூப்பிட்டோமே
அது நான் இந்த புக் படிச்சிட்டு இருந்தேன் என் கதையை நானே படிக்க வேண்டாமா அதான்
இதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னவள் கார்த்திக்கை பார்த்தாள் அவன் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்
சிறிது நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு கார்த்திக் அவன் அறைக்கு சென்று விட்டான்
உனக்கு காலேஜ் எப்படி போகுது அப்பு
நீ இல்லாம போர் டி செம கடுப்பா வருது
சரி விடு ரெண்டு வருஷம் தான
ம்ம்ம் சரி டீ குட் நைட் எங்க அன்னான் வாசலுக்கும் ரூமுக்குமாய் அலைகிறான் என்னனு கேளு
தங்கள் அறைக்குள் வந்தவள் இருட்டாய் இருந்ததை பார்த்து திகைத்தாள் இன்னும் கோபமா இருக்கானோ பேசாட்டி நம்ம ரூமுக்கே ஓடிறலாமா
அங்க போனா இவன் இல்லாம தூக்கமே வராது உள்ளயே போவோம் என்று நடந்தவள் அலறினாள் அவன் ஓடி வந்து இறுக்க அனைத்திருந்தான்
இவ்வளவு நேரமா டி இங்க வாரத்துக்கு தனியா பாக்க தவிச்சிட்டு இருக்கேன் என்றான் அதே நேரம் வினோத் அபர்ணாவிடம் என்ன டா இத்தனை நாள் அலறல் சத்தம் வரலயேன்னு நினைச்சேன் இன்னைக்கு வந்துட்டு என்று சொன்னான்
அதை ஏன் நீ கேக்க வினோ
ஆமா இல்ல நமக்கே பல வேலை இருக்கு அதை கவனிப்போமா
கவனிக்கலாம் நீ தூங்குற வேலை நான் படிக்கிற வேலை
நான் உனக்கு டியூஷன் சொல்லி தரேன் டி அப்பு
ஆமா டா பெட்ல போடு மேல படுத்து கிட்டு டியூஷன் சொல்லி தர அழக பாரு
சரி சரி விடு உனக்காக நாளைக்கு காலைல அலாரம் வச்சு நாலு மணிக்கு உன்னை எழுப்பி விட்டுட்டு நான் தூங்குவேனாம் சரியா
எதுக்காம்
நீ படிக்கச் தான்
ஏன் அதை இப்ப செய்ய கூடாதா
காலைல தான் ப்ரம்ம முகுர்த்தமாம் அப்ப படிச்சா தான் மனசுல பதியுமாம் கல்யாணம் ஆனவங்க இப்ப இந்த பாடம் தான் படிக்கணுமாம்