(Reading time: 36 - 71 minutes)

ஹாஸ்பிடல் போலாமா

இல்லை கொஞ்ச நேரம் படுத்துருக்கேன் மாமா வந்த பிறகு பாத்துக்கலாம்

சரி நீ படுத்துரு நான் கொஞ்சம் ஹோம் ஒர்க் முடிச்சிட்டு வரேன் உங்க அண்ணன் வந்த முடிக்க விட மாட்டான்

சரி அப்பு என்று பொத்தி படுத்து விட்டாள்

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தாள் அப்பு

வாங்க அண்ணா வினோ காணும்

அவன் நீ ஏதோ திங்ஸ் வாங்கணும்னு சொன்னியாம் பக்கத்துல இருக்க கடைக்கு போயிருக்கான்

காபீ தரவா அண்ணா

அவன் வந்த உடனே தா மேடம் எங்க காணும்

சொல்ல மறந்துட்டேன் அவளுக்கு உடம்பு சரி இல்ல அண்ணா ஒரே வாந்தி ஹாஸ்பிடல் வாரியான்னு கேட்டேன் நீங்க வரட்டும்னு சொல்லிட போய் பாருங்க

அவன் முகத்தில் மின்னல் வந்தது அப்படியும் இருக்குமோ ஓடி சென்றான் கீர்த்தி என்ன ஆச்சு டா என்றான்

உடம்பல்லாம் வலிக்கிது மாமா வாந்தியா வருது மாமா ஹாஸ்பிடல் போணுமா ஆனா ஊசி போடுவாங்களே என்ன செய்ய

பாப்பா வேணும்னு கேட்டவ வாந்திக்கும் ஊசிக்கும் பய படலாமா

மாமா என்று சொல்லி அவனை கட்டி கொண்டாள்

வா செக் பண்ணிட்டு வரலாம்

ஹ்ம்ம்

ஹாஸ்பிடல் கிளம்பிட்டீங்களா அண்ணா

ஆமா மா

நான் வரவா

இல்லை நீ இரு வரும் போது நல்ல செய்தியோட வரோம்

கீர்த்தி நிஜமாவா ரொம்ப சந்தோசாம் டி நான் ஸ்வீட் செஞ்சு வைக்கேன்

என்ன அப்பு கார்த்திக் வந்தானே செருப்பு காணும்

அண்ணா வெளிய போயிருக்காங்க

எங்க அந்த ராட்சசி

அவளுக்கு உடம்பு சரி இல்லை

என்ன ஆச்சு அப்பு கீர்த்திக்கு

ஒரே வாந்தி அதான் காபி சூடு பண்ணவா அண்ணா

இல்லை அப்பு அவங்க வந்த பிறகு குடிக்கேன்

டாக்டரை பார்த்து விட்டு வந்தவர்களை அபர்ணா பிடித்து கொண்டாள்

நான் ஸ்வீட் செஞ்சு வச்சிருக்கேன் ரெண்டு பெரும் சாப்பிடுங்க

வினோத் எங்க மா

குளிக்காங்க அண்ணா

குளித்து முடித்து விட்டு வந்தவன் ஏண்டி அவளுக்கு உடம்பு சரி இல்லனு சொன்ன ஆனா நீ ஸ்வீட் செஞ்சு கொண்டாடுற கீர்த்தி என்னமா ஆச்சு டாக்டர் என்ன சொன்னாங்க மச்சான்

அதுவா உன்ன மிதிக்க இன்னொரு ஆள் வர போகுது

என்ன டா சொல்ற

தாய் மாமன் சீர் செய்ய ரெடியா இருந்துக்கோ வா கீர்த்தி ரெஸ்ட் எடுக்கலாம் என்று அழைத்து சென்று விட்டான்

நிஜமாவா அப்பு

ம்ம்ம்

சந்தோசமா இருக்குல்ல

ரொம்ப ரொம்ப

ரொம்ப வா அப்ப நாமளும் ட்ரை பண்ணலாமா

நானா மாட்டேன்னு சொன்னேன் நீ தான் படிப்பு னு சொல்லி சும்மா போடா

உசுப்பேத்தி விடாதடி நம்ம ஜூனியர் கார்த்திக் வரும் பொது உனக்கு மூணு செமஸ்டர் முடிஞ்சிருக்கும் அப்பவே இந்த வேலைய ஆரம்பிச்சிரலாம் சரியா

ச்சி போ வினோ

போ னு சொல்லிட்டு ஓடி வந்து கட்டி பிடிக்க எப்படி அப்பு முடியுது உனக்கு

தன் அறைக்குள் வந்து அவளை படுக்க வைத்தவன் அவள் அருகில் அமர்ந்தான் இருவர் வீட்டுக்கும் அழைத்து சொன்னவன் அவர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினான் இன்னைக்கு டிக்கெட் போட்டு நாளைக்கு எல்லாரும் வருவதை அவர்கள் சொல்லி யவுடன் வைத்தான்

வினோத்தின் அம்மா அப்பாவுக்கும் அழைத்து விஷயத்தை சொன்னான்

மாமா

என்ன கீர்த்தி விமலா ஆண்ட்டிக்கு சொல்லுங்க மாமா பிண எப்பாவது எதாவது நினைச்சுக்க போறாங்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.