(Reading time: 36 - 71 minutes)

சமையல் காட்டுக்கே போகாதவள் இப்ப அருமையா சமைக்கிறது இல்லையா அது போல தான் மூணாவது கதையும் எழுத ஆரம்பிச்சுட்டா அவளுக்கு பிடிச்ச வேலை இது தான் கார்த்திக் செய்ய விடுவோமே

கஷ்டமா இருக்கும்ல பாவம்

உன் பொண்டாட்டி பாவமா உலகத்தையே வித்துருவா டா அவளுக்கு என்ன வேலை ஆபீஸ் பாக்குறது தான் மித்த வேலை எல்லாம் ஆள் செய்ய போறாங்க அப்புறம் என்ன நாளைக்கு உங்களுக்கு பிள்ளை குட்டின்னு ஆனாலும் நான் வந்து பாத்துக்குவேன் இல்லையா அதான் உன் மாமா கீர்த்தி அப்பா ரிடயர்ட் ஆகி சும்மா தானே இருக்காரு அவர் வருவார் பின்ன என்ன

சரி தாத்தா என் செலரி தான் அப்படியே இருக்கே அதுல செட்டில் பண்ணிறேன் நீங்க பேசி முடிங்க அவளுக்கு தெரிய வேண்டாம் நீங்க எல்லா டீடெயில்ஸ் அப்புறம் மைதிலி அக்கா நம்பர் எல்லாம் அனுப்புங்க நான் பேசுகிறேன் பணமும் கொடுத்துறேன்

சரி பா வைக்கிறேன்

ஒரு வாரம் கழித்து மாமா மாமா எங்க கிளம்ப சொல்றிங்க அதும் சேலை எல்லாம் கட்டி

நீ வா சொல்றேன்

அப்புவும் வினோத்தும் வேற கிளம்பி இருகாங்க எங்க போறோம் உங்க பிரண்ட் வீட்டுக்கா

ஹ்ம்ம் ஆமா வா

ஹால் டாக்ஸி எல்லாம் சோளியிட்டிங்களா வந்துருக்கு

ஆமா கீர்த்தி

ரிதம் பப்பிளிகேஷன் முன்பு போய் வண்டி நின்றது

என்ன மாமா மைதிலி அக்கா ஆபீஸ்க்கு வந்துருக்கோம்

ஒரு முக்கியமான வேலை நீ உள்ள வா

உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி என்ன மாமா இது அத்தை மாமா தாத்தா அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க வீட்டுக்கு வராம இங்க எதுக்கு இருக்காங்க

அதுவா மைதிலி அக்கா ஆபீஸ் விக்க போறாங்களே அதான்

அதுக்கு ஏன் நம்ம வீட்ல இருந்து வந்துருக்காங்க

நாம வாங்கணும்னா நாம தான வரணும்

மாமா ..

என்னோட கீர்த்திக்கு என்னுடைய கிப்ட் இது . ப்ளீஸ் அழாத நம்ம ரொமான்ஸ் எல்லாம் வீட்ல போய் வச்சிக்கலாம் சரியா ஸ்பெஷலா கவனிக்கணும் சீக்கிரம் தூக்கம் வருதுன்னு சொல்ல கூடாது என்ற படியே அவளை உள்ளே அழைத்து சென்றான்

அவளுக்கு சொந்தமான ஆபீஸ் எல்லாரும் வாழ்த்து சொல்ல சந்தோசமாக இருந்தாள் மைதிலிக்கு சந்தோசமா உங்கிட்ட இத கொடுக்குறது எவ்வளவு சந்தோசமா தெரியுமா இனி நான் நிம்மதியா வீட்ல இருப்பேன் ஆனா சீனி சார் மட்டும் வேலைக்கு வச்சிக்கோ சரியா

கண்டிப்பாக்கா அவருக்கு சம்பளத்தையே கூட்டிரலாம் என்று சிரித்தாள்

கீர்த்தி

என்ன அப்பு

எங்க காலேஜ்ல நதியானு ஒரு பொண்ணு இருக்கா அவ வீட்ல கொஞ்சம் கஷ்டம் அவளுக்கு உன் ஆபீஸ்ல பார்ட் டைம் ஜாப் போட்டு குடுக்கியா ப்ளீஸ் கொஞ்சம் உதவியா இருக்கும் எடிட்டிங் வேலை மாதிரி

லூசு இது என் ஆபீஸ் இல்ல நம்ம ஆபீஸ் இத நீயே செய்யலாம் சரியா

எல்லாம் முடிந்து நிறைவாய் இருந்தது மனதுக்கு

தாத்தா நீ தான இந்த ஐடியா சொன்னது

என்ன உன் புருஷன் சொல்ல கூடாதுனு சொல்லிட்டு உளறிட்டானா

என் புருஷன் என்கிட்டே சொல்றதுல உனக்கு என்னவாம் அது சரி என் கதை எல்லாம் எப்படி இருக்குனு சொல்லவே இல்லையே

நல்லா தான் இருக்கு

என்ன தாத்தா இழுக்க மாமா எல்லாம் சூப்பரா இருக்கு சொல்ராங்க என் பிரண்ட்ஸ் எல்லாம் செம சொல்றாங்க நீ இழுக்க

நானும் நல்லா இருக்குனு தான் சொல்றேன் என்ன இந்த கிழவன் படிக்கிற மாதிரி இல்லை ஓவர் ரொமான்ஸ்சா இருக்கே கீர்த்தி

அது நீ கிழவனா ஆக முன்னாடி யோசிச்சிருக்கணும் அது சின்ன பிள்ளைங்க கதை தாத்தா கதை இல்லை போ போ

ஹா ஹா என்று சிரித்தார் ராஜு தாத்தா

கீர்த்தி தன் வேலையை ஆரம்பித்து 5 மாதங்கள் முடிந்த நிலையில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தவள் இழுத்து போத்தி கொண்டு படுத்தாள்

அபர்ணா கீர்த்தி வந்துட்டா போல என்று நினைத்து கொண்டே குளிக்க சென்றாள்

கீர்த்தி இந்த டி காபீ

அதை வாங்கி குடித்தவள் வாந்தி எடுத்தாள் என்ன ஆச்சு டி உடம்பு சரி இல்லையா

மதியம் இருந்தே இப்படி தான் இருக்கு அப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.