(Reading time: 36 - 71 minutes)

இல்லை பா அத பத்தின பேச்சு வேண்டாமே இங்க ரொம்ப சந்தோசமா இருக்கோம் அத விடுங்க அங்க உங்களுக்கு எப்படி லைப் போகுது அருந்ததி அப்பா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க அத்தை மாமா என்று சொல்வதை தவிர்த்தான்

இந்த மாமா ரூம்க்கு வரட்டும் இருக்கு கச்சேரி என்று பல்லை கடித்தாள் கீர்த்தி அவ அப்பா அம்மாவை கேக்காமல் இருந்தால் தான் என்னவாம்

எல்லாரும் நல்லா இருக்கோம் பா சரி நாங்க கிளம்புறோம் என்று எழுந்து கொண்டார் விமலா

இருந்துட்டு நாளைக்கு போகலாமே

இல்லை பா நீங்களே சின்ன வீட்ல இருக்கீங்க எதுக்கு தொந்தரவு அங்க பல வேலைகள் இருக்கு அரு கிளம்பலாம் மா என்றார் சேதுராம்

சரி மாமா

வீட்டுக்கு ஒரு தடவை வந்துட்டு போ பா

சரிம்மா நேரம் கிடைக்கும் பொது வரேன்

ஒரு வழியாக கிளம்பி போன பின் நால்வரும் அதே இடத்தில அமர்ந்திருந்தனர்

அப்போது ஓங்கி வினோத் மண்டையில் ஒரு கொட்டு வைத்தால் கீர்த்தி

ஆஹ்ஹ் அம்மா என்று அலறினான் வினோத்

இப்ப எதுக்கு கீர்த்தி அவனை கொட்டுற என்றான் கார்த்திக்

அப்பத அவங்க முன்னாடி அண்ணனு கூப்பிடுறேன் இவன் பேய் முழி முழிக்கான் அதான்

நீ பாசத்தோடு அண்ணனு கூப்பிட்டா எனக்கு எப்படி தெரியும் உலக அதிசயம் நடந்தால் நான் முழிக்காம என்ன தான் செய்வேன் சரி பொழச்சி போ மன்னிச்சி விடுறேன் இருந்தாலும் உன் பொண்டாட்டி என்னை ரொம்ப கொடுமை படுத்துறா டா நான் புகார் கொடுக்க போறேன்

அடிவாங்கிட்டு அவளை நீ மன்னிக்கியா உன் கெத்தை குறைக்காம இருக்கீங்களா சார் சரியான காமெடி பீஸ் வினோ நீ என்று அபர்ணாவும் வாரினாள்

என்னை வாருவது போதும் முதலில் உண்மைய சொல்லுங்க யாரு இந்த புது அப்பா அம்மா அத விட அந்த அழகான பொண்ணு யாரு என்று கேட்டு இருவரிடம் இன்னும் அடிகளை பெற்றான்

அதில் கீர்த்தியிடம் இருந்து கார்த்திக்கும் அடி விழுந்தது

என்னை ஏன் டி அடிக்க

அவ என்ன பெரிய இவளோ அவ அப்பா அம்மாவை விசாரிக்கிங்க என்ன மாமா பாசம் இழுக்குதோ மாமா பாசமா இல்லை மாமா பொண்ணு மேல உள்ள பாசமா

ஒரு பாசமும் இல்லை கீர்த்தி ஏதாவது பேசணும்னு பேசினேன்

நீங்க கேட்ட உடனே அவ உங்களை பார்த்தா பாருங்க ஒரு பார்வை எனக்கு பத்திகிட்டு வருது

விடு டி விடு டி அவ எல்லாம் ஒரு ஆளு

ஏய் புருசனும் பொண்டாடியும் உங்க வீட்டுக்கு போய் சண்ட போடுங்க போங்க டா என்றான் வினோத்

சரி வா கீர்த்தி போய் சண்டை போடுவோம்

டேய் நீங்க போய் சண்டையா போடுவீங்க நம்பிட்டோம் டா அந்த கதை இங்க வேண்டாம் முதலில் ப்ளாஷ்பாக் ஓப்பன் பண்ணு என்றான் வினோத்

ஒரு இறுக்கமான முகத்தோடு அனைத்தையும் சொன்னவன் நீயும் எதுக்கு ஃபீல் பண்ணனும்னு தான் டா சொல்லல ஸாரீ என்று முடித்தான் கார்த்திக்

ஸாரீ டா மாப்பிள்ளை ஃபீல் பண்ணி இருப்பல இவங்களை பார்த்தா நல்ல மாதிரி தெரியலயே டா நம்ம வீடு என்ன சின்ன வீடாவா டா இருக்கு

அவங்க வீட்டை பாக்கும் போது சின்ன வீடு தான் டா நம்ம கூட எல்லாம் அவங்க பழக மாட்டாங்க

ஆனாலும் கீர்த்தி அந்த பொண்ணோட காலடி மண்ணை அள்ளிட்டு வந்த பாத்தியா அது தான் ஹை லைட் என்றாள் அபர்ணா

இவ கார்த்திகை ஒரு கிழவி பாத்தாலே துரத்தி துரத்தி அடிப்பா ஒரு அழகான பொண்ணு பாத்தா சும்மா விடுவாளா

பாரு அப்பு உன் புருசனுக்கு அவ அழகா இருக்காளாம் கொஞ்சம் என்னனு விசாரி நான் மாமாக்கு கொஞ்சம் வேப்பிலை அடிக்கணும் என்று சொல்லி அவனை இழுத்தாள்

எம்மாடி சகுனி குடும்பத்துகுள்ள குண்டு போட்றதையே வேலையா வச்சிருக்கியா காப்பது டா கார்த்திக்

உண்ண எங்க காப்பாத்த எனக்கே இன்னைக்கு நல்லா மண்டக படி கிடைக்க போகுது கீர்த்தி செல்லம் மாமாக்கு காச்சல் டா கொஞ்சம் மனசில வச்சிக்கோ என்று அவளை இழுத்து சென்றான்

டுத்து ஒரு வாரம் ரெக்கை கட்டி கொண்டு சென்றது கீர்த்திக்கு சமையலில் அவளுடைய அத்தையும் அவளும் கூட்டு சேர்ந்து கொண்டு போன் அறிவுரை படி சமைத்தனர் அபர்ணா உதவியாய் இருந்தாள்

ஒரு வழியா பாப்பா சமையல் கத்து கிட்டா டா எல்லாம் அம்மாவோட மகிமை போல என்று சொல்லி அடி வாங்கினான் வினோத்

ஷாப்பிங் என்று சொல்லி அபர்ணாவை அழைத்து சென்று தனக்கு தேவையான பொருள்களை வாங்கினாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.