(Reading time: 4 - 8 minutes)

14. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

யாழினி பேசிய காதல் வசனத்தில் தமிழுக்கு சட்டென புரை ஏறியது. தன் தலையை தானே தட்டிக் கொண்டு நிதானமானவன், அதிர்ச்சி நிறைந்த குரலில்

"ஏய் என்ன நீ காதல் னு சொல்லுற?" என்றான்.

" ஓ.. உங்களுக்கு பெயர்ல மட்டும் தான் தமிழ் தெரியுமா ப்ராணநாதா?நான் வேணும்னா இங்கிலீஷ் ல சொல்லவா? ஐ..லவ்வ்வ்வ்வ்...யூஊஊஊ..." என்றாள் யாழினி. தலையை லேசாய் சாய்த்து குறும்பு நிறைந்த பார்வையுடன் பதில் தந்தாள் யாழினி.

"இதெல்லாம் சரியே இல்லை யாழினி... என்னை உனக்கு எவ்வளவு தெரியும்?"

"ம்ம்..அதிகம் தெரியாது தான்..என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க தெரிஞ்சுக்குறேன்.."

"நீ சின்ன பொண்ணு.."

"அப்போ இடுப்புல தூக்கி வைச்சுக்கோங்க.."

"ஏய் சோடாப்புட்டி... உனக்கு கொஞ்சம் மூஞ்சு கொடுத்து பேசினது தப்பா போச்சு. ஒழுங்கா கார்ல ஏறு.. இப்போவே வீட்டுல விட்டுடுறேன்.. போ.." என்று விரல் நீட்டி உறுமிவிட்டு முன்னே நடந்தான் தமிழ்.

" ஆமா இவர் அப்படியே மூஞ்சு கொடுத்துட்டாலும்..நாங்க மயங்கி விழுந்துட்டாலும்" என முணுமுணுத்து கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்.

"ஹெம்..அஹெம்.." தொண்டையை செருமிக் கொண்டு புகழின் அருகில் அமர்ந்தாள் சஹீபா. அவளைப் பார்த்ததுமே மலரத் துடித்த இதழ்களையும் விழிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டான் புகழ். கடல் அலைகள் ரசிப்பது போல நடிக்க ஆரம்பித்தான். சஹீபா முகம் வாடி போனாள்.

"ஏன் புகழ் என்கிட்ட பேச மாட்டியா?"

"ச்ச..ச்ச..ஜஸ்ட் என்ன பேசனும்னு தெரியல.."

"யாழினி கிட்ட மட்டும் நிறைய பேசுற?" என்று சொன்னவளை நிமிர்ந்து பார்த்தான் புகழ்.

" கேட்கனும்னு நினைச்சு கேட்கல.. உன் வாய்ஸ் சத்தமா தான் இருந்துச்சு..அதான் அப்படியே கேட்டு நின்னேன். "

" நீ கேட்டதை நான் ஏன் குத்தம் சொல்ல போறேன்?" என தோளை உலுக்கி கொண்டான். அவள் எந்த வகையிலும் தன்னை பாதிக்கவில்லை என்பதை உரைக்க முயற்சித்தான்! (நம்பிட்டோம் பாஸ்)

"என்கிட்ட அந்த மாதிரி நட்பா பேச கூடாதா?" ஏக்கமாய் ஒலித்தது அவள் குரல். அதை உணர்ந்த கொண்டவன் பட்டென அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான். அவள் கைகளை பற்றி தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டு பேசினான்.

" நான் ஆயிஷாவை தான் காதலிச்சேன். நீ சஹீபாவா இருக்குறதா முடிவு எடுத்தா, அந்த முடிவுக்கு மதிப்பு தந்து உன்னை விலகி போகனும் னு நெனச்சேன்..ஆனா பாழாப்போன மனசு காதலிச்சு தொலைச்சிட்டா சொந்த பேச்சும் கேட்காது சொல் பேச்சும் கேட்காது..."

"..."

"உன்னை எந்த விதத்திலும் இதை செய் அதை செய்னு கட்டாயப்படுத்த மாட்டேன்.. அதே நேரம் உன்னை காதலிக்கிறதை நிறுத்த மாட்டேன். நீ எனக்கு தோழி கிடையாது ..ஏன்னா உன்னை நான் காதலிக்கிறேன்.."

".."

" என்னை பொறுத்தவரை காதலும் நட்பும் வேற வேற. யாழினி கூட அப்படித்தான்.. தமிழ் கிட்ட தன் காதலை சொல்லுவாளே தவிர இனி நீ எனக்கு நண்பன் னு சொல்ல மாட்டா" என சம்பந்தமே இல்லாமல் தமிழை பற்றி பேசினான். ( சம்பந்தம் இருக்கு பாஸ்...அதாவது புகழ் மேல யாழினிக்கு காதல் இருக்குமோனு ஆயிஷா நினைக்க கூடாதாம்..இதுக்கு பேருதான் வரும் முன் காக்குறது !) .

"தமிழ்???"

"யாழீயோட ஆளு!"

"ஓஹோ.."

"நீ என்ன முடிவு எடுத்துருக்கம்மா?" அவள் கைகளை விடுவிக்காமல் பேசினான் புகழ். அவளுக்கும் அவனது ஸ்பரிசம் ஆறுதல் தர தன் முடிவினை பற்றி ஆலோசிக்க தொடங்கினாள் புகழுடன்.

வ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யாழினியின் வீட்டை அடைந்தான் தமிழ். "ப்பா ஆஆஆ..குட்டி பிசாசு..எவ்வளவு தைரியம் இவளுக்கு? இப்படி நேருக்கு நேராக பேசறாளே..என்னமோ நான் ஓகே சொன்ன மாதிரி உல்லாசமா இருக்கா. எவ்வளவு பெரிய பாடுறா..சிரிக்கிறா..." என்று வேர்த்து வியந்து போயிருந்தான் தமிழ்.

தன் வீட்டின் முன் காரொன்று நிற்கவும் ஓடி வந்தார் மோகன்.

"யாழினி.." என்றவரை பார்த்ததுமே காரை விட்டு உடனே இறங்கினாள் யாழினி.

"அப்படி போடு அரிவாளை!! அம்மணி வெளில புலி வீட்டுல எலியா? செத்தடீ இன்னைக்கு நீ!!" என்று நினைத்தவன் தனக்குள் இருக்கும் சகுனியை தட்டி எழுப்பினான்..

ஆட்டம் ஆரம்பம்!!

ஹாய் ப்ரண்ட்ஸ்! நான் முக்கியமான வேலையால் ஹால்ப்பிட்டலுக்கு போயிட்டு இருக்கேன்..சோ இவ்வளவு தான் டைப் பண்ண முடிஞ்சது..மன்னிச்சிருங்க...பாய்

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.