(Reading time: 6 - 11 minutes)

13. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

மௌனமான நேரம்,

இளமனதில் என்ன பாரம்?

மனதில் ஓசைகள்,

இதழில் மௌனங்கள்!

ஏன் என்று கேளுங்கள் ..

தமிழின் காரில் வானொலி அவர்கள் இருவருக்கும் இடையில் நிலவிய மௌனத்தை பரிகாசிப்பதை போல பாடியது. தமிழின் முகத்தையே அடிக்கடி பாரத்தாள் யாழினி. ஏதோ ஒரு சிந்தனையின் காரணமாய் அவனது புருவங்கள் சுருங்கி காணப்பட்டன. அவன் எதை பற்றி யோசித்தாலும் அதற்கு உடனே தீர்வு கிடைத்து அவன் தெளிவு பெற வேண்டுமென விரும்பினாள் தமிழ்.

கள்ளமில்லா அவன் வதனத்தை ரசித்து பார்த்து அந்த புருவ முடிச்சுகளை நீவி விட அவளின் கை விரல்கள் பரபரத்தன. உள்மனமோ கேலியாக சிரித்தது. "ரொம்ப முத்தி போச்சு யாழினி உனக்கு. உன் மைண்ட் வாய்ஸ் மட்டும் சிடுமூஞ்சிக்கு கேட்டிருக்கனும்!!" என்று அது பரிகாசிக்கவும் தமிழ் கையில் வேப்பிலையுடன் முறைத்தாள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தாள். அந்த கண்கொள்ளா காட்சியினால் பொங்கிய சிரிப்பினை மறைக்கவும் முடியாது சிரித்தாள்.

"ஓய்.. என்ன சிரிப்பு ?" சட்டென சிந்தனை கலைந்தவன் அவளை பாரத்து புருவம் உயர்த்தி காட்டவும், அவளுக்கு மீண்டும் தன் கற்பனையே ஞாபகத்திற்கு வந்தது.

"ஹா ஹா..ஒன்னுமில்லை.."

"ஒன்னுமில்லாம சிரிக்க நீ என்ன லூசா?"

"என்னை லூசுன்னு கூப்பிடுறதுதான் உங்களுக்கு சந்தோசம் னா தாராளமாக கூப்பிட்டுட்டு போங்க.. ஆனா ஒன்னு, வெண்ணிலாவை பார்த்து சூரியனேனு கூப்பிடுறதுனால அது சூரியன் ஆகாது.."

"உப்ப்ப்ஃஃ ..ஆரம்பிச்சா நிறுத்த மாட்டியே..!"

"நான் நிறுத்துறது இருக்கட்டும்..நீங்க எதையோ நிறுத்தாம யோசிச்சிங்களே.. என்ன அது?"

"அதுவா..அது...வந்து"

"சரி சரி..இதுக்கெல்லாம் ஒன்னாங்கிளாசு பையன் மாதிரி முழிக்காதிங்க.. சொல்ல முடியலன்னா சொல்ல வேணாம்..."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..உனக்கு தெரியலாம்...ஏன்னா இதுல உனக்கும் சம்பந்தம் இருக்கு.. "

"அப்போ ஸ்டார்ட் மியூசிக்! "என்று ஆர்ப்பரித்தவளை ரசிக்க தவறவில்லை அவனது நயனங்கள்!

" நீ போன்ல புகழ்கிட்ட பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன்!"

".."

"ஏன் அப்படி குறு குறு னு பார்க்குற? நான் ஒன்னும் ஒட்டு கேட்க நினைக்கல. நீ போனை வைச்சதும் கொஞ்சம் பேசலாம் னு நினைச்சேன்.அவ்வளவு தான்!"

"சரிப்பா சரிப்பா..மேல சொல்லுங்க!"

"புகழ் உனக்கு பெஸ்ட் ப்ரண்டா?"

"இல்ல, நான் தான் அவனுக்கு பெஸ்ட் ப்ரண்ட்"

"ஹ்ம்ம் அன்னைக்கு அவனும் உன்ன மாதிரி தான் பேசினான்!"

"என்ன பேசினான்? என்னைக்கு?"

காரை ஓரமாக நிறுத்தினான் தமிழ். பொதுவாக காரை ஓட்டும் போது போனை பேசாதவன் அல்லவா அவன்? தன் மனதில் இருக்கும் சஞ்சலத்தை பேச நினைத்தவன் இருவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு காரை நிறுத்தினான். ஏற்கனவே இருட்ட தொடங்கி விட்டது. இதில் இவன் வேறு வண்டியை நிறுத்திவிட்டான் ..வீட்டுக்கு லேட்டாகுமோ என்று யோசித்த யாழினி தனது ஐயத்தை ஒதுக்கி விட்டு தமிழின் குழப்பத்தை தீர்க முன்வந்தாள்.

" ஹய்..இளநீர் விக்கிறாங்க.. வாங்கி தாங்களேன் தமிழ் ..குடிச்சிட்டே பேசலாம்" என்று அவள் கேட்கவும் எந்தவித மறுப்பும் இன்றி காரை விட்டு இறங்கினான் தமிழ். அவனின் ஆழ்மனமோ, "யாழினி உரிமையாய் முதன்முதலாக உன்னிடம் ஒன்றை கேட்கிறாள்" என்று அறிவுறுத்தி அவனுக்குள் இனம் விளங்கா உல்லாசத்தை உருவாக்கியது.

அவனை பின் தொடர்ந்து யாழினியும் காரை விட்டு இறங்கி நடந்தாள். "பரவாயில்லை.. இவனும் கொஞ்சம் நல்லவன் தான் போல!" என சிரித்து கொண்டாள்.

"சரி இப்போ சொல்லுங்க புகழ் என்ன சொன்னான்?" இளநீரை மிக பொறுமையாக உறிங்சியபடி வினவினாள்.

" யாழினிக்கு பெஸ்ட் ப்ரண்ட்னா நான்தான் னு சொன்னான்."

"புகழ் ரொம்ப கண்ணியமானவன் தமிழ். என்மேல ரொம்பவே பாசம் அவனுக்கு. எனக்கு ஒன்னுனா அவன் தாங்க மாட்டான். உங்களுக்கும் எனக்கும் நிறைய மோதல்கள் வருவது அவனுக்கு சரியாக படல. அதுனால, யாழினிக்கு எப்பவும் நான் இருக்கேன். இருப்பேன் னு உங்களுக்கு உணர்த்த சொல்லி இருப்பான். அவன் பேச்சு எந்த வகையிலும் உங்களை பாதிச்சிருந்தா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.