(Reading time: 6 - 11 minutes)

"மன்னிப்பு கேட்க போறியா? ரொம்ப சீரியல் பார்ப்பியோ? நான் சொல்ல வந்ததை முடிச்சிட்டேனா? உன் செண்டிமேன்ட இங்க அவசியமா?" என தமிழ் பொறிய,

"இவனையா நல்லவன்னு சொன்ன? சரியான சிடுமூஞ்சி!!"என தன்னையே கேட்டு வைத்தாள் யாழினி.

" நான் ஒரே பிள்ளை என் வீட்டுல. சின்ன வயதில் இருந்தே ப்ரண்ட்ஸ் இருந்தாங்க தான். ஆனா ஆழமான நட்பு அமையல. அதுவும் பெண்ணின் நட்பு ! அதை நான் உணர்ந்ததே இல்லை. ஒன்னு, நான் சீரியஸ் பெர்சனாலிட்டி னு தள்ளி நி்ப்பாங்க.. இல்லனா காதல்னு பிதற்றுவாங்க"

"காதல் ஒன்னும் பிதற்றல் இல்லை !"

"அழகை முன்னிறுத்தி புரிதலே இல்லாமல் தோணுற இனக்கவர்ச்சி நிச்சயம் காதல் இல்லை யாழினி!"

"உண்மை தான்!"

"ம்ம்..அது என்னவோ உனக்கும் புகழுக்கும் இருக்குற நட்பை பார்த்ததும் எனக்குள் சின்ன சலனமும், குட்டி பொறாமையும்! அது மட்டும் இல்ல, ஏன் எனக்கு இப்படி ஒரு நட்பு அமையலன்னு குழப்பம்" என்றவனை நேசத்தை தேக்கி வைத்து பாரத்தாள். அந்த நேசம் அவள் மனதின் எண்ணங்களையும் போட்டு உடைத்தது.

" நான் ரொம்ப லக்கி தமிழ்!"

"ஏன் ?"

"பொறாமை என்றாலே தப்பான குணம் தான்னு உருவகப்படுத்தியதுனால யாருக்குமே, ஆமா நான் பொறாமை படுறேன்னு சொல்லுற குணம் இல்ல.."

".."

" அது மட்டும் இல்ல.. பொண்ணுங்களுக்கு ஒரு பையன் தன்னுடைய பெஸ்ட் ப்ரண்டா இருக்குறது பிடிக்கும். ஆனா, தன்னவன் இன்னொருத்தியின் பெஸ்ட் ப்ரண்டா இருக்குறது கொஞ்சம் பிடிக்காது. அவனின் முழு அன்பும் கவனமும் தனக்கே கிடைக்கனும்னு ஆசை படுவா. அந்த வகையில் நான் உங்க முழு அன்பையும் பெறுவேன்"

"யாழினி நீ.." என்று தமிழ் இடையில் புக,

" நான் இன்னும் முடிக்கல.." என்றாள் யாழினி.

" ஒரு ஆணின் வாழ்க்கையில்

தோழி கடைசி வரைக்கும் தோழியாக இருக்க ஆசை படுவா..

காதலி கல்யாணத்துக்கு அப்புறமும் காதலியாக இருக்க ஆசை படுவா..

ஆனால் மனைவி தான், தாய் , சகோதரி, தோழி, காதலி, மகள், குரு இப்படி எல்லா ஸ்தானத்திலும் இருக்க ஆசை படுவா..

இது இனக்கவர்ச்சி இல்ல. என் தமிழுக்கு நான் யாதுமாகி இருக்கனும்னு ஆசை படுறேன்.. நான் உங்களை உயிரை விடவும் மேலாக மதித்து காதலிக்கிறேன் " என அழகு தமிழில் அழகாக தமிழிடம் காதலை சொன்னாள்!

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.