(Reading time: 7 - 14 minutes)

12. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

"ஹேய்" என்ற ஆரவார குரல்கள் யாழினியையும் தமிழையும் தரையிறக்கின.

" தமிழண்ணா..இவங்க தான் எங்க யாமி க்கா..டான்சு பாட்டு கத்து தரா ங்கா.." என்று கொஞ்சும் குரலில் சிறுமி ஒருத்தி சொல்லவும் தமிழின் முகத்தில் ஆச்சர்யம் கலந்த பெருமை.

குழந்தை நல மருத்துவனான தமிழ் தனது மன திருப்திக்காக பிருந்தாவனம் இல்லத்தில் இருக்கும் சிறார்களின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதிப்பது வழக்கம். அவனுக்கு மருத்துவமனையில் தான் பிரதான வேலை என்பதினால் அவன் அந்த இல்லத்திற்கு வரும் நேரங்களை கணித்து வைக்க முடியாது. ஏதோ தனது சொந்த ராஜாங்கம் போல அவன் இஷ்டத்துக்கு வருவதையும் போவதையும் அந்த இல்லத்தின் நிர்வாகிகள் தடுப்பதே இல்லை.

தமிழை போலவே யாழினிக்கும் அந்த இல்லத்துடன் நல்ல தொடர்பு உண்டு. அன்னையின் ஞாபகத்தில் இருக்கும் மகளை தேற்றுவதற்காக அவளின் பதின்ம வயதில் இருந்தே யாழினியை அங்கு அழைத்து செல்வார் மோகன். காதலை உணரும் முன்னரே அவள் தாய்மையை உணர்ந்தது இங்கு தான்.

அங்கு அனைவரின் மீது அவள் பாசம் பொழிவதும், அதற்கு இரட்டிப்பாக சிறுவர்களும் அவளை கொண்டுவரும் வழக்கம். அடிக்கடி வந்து போனாலும் யாழினியும் தமிழும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே இருந்ததை விதியென்பதா?

" யாமி அக்கா வந்தாங்க, யாமி அக்கா தந்தாங்க..யாமி யாமி என மழலைகள் அவளின் பெயரை மாற்றி வைத்தனர். சிறுவர்களுடன் இணைந்து அவர்களில் ஒருத்தியாகிவிடும் யாழினியோ தமிழ் என்ற ஒருவன் இந்த இல்லத்திற்கு வந்து போவதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதே இல்லை.

" ஓஹோ..இவங்கதான் உங்க மாமி அக்காவா ? ஐ மீன் யாமி அக்காவா?" என நக்கலாய் வினவினான் தமிழ்.

பதிலுக்கு நான் கிண்டல் அடித்தால் தாங்குவாயா நீ என்பது போல பார்த்து வைத்தாள் யாழினி. என்னவோ இவனை பார்த்து விட்டால் மட்டும் தடுமாற்றம் தங்கு தடையின்றி வருகிறதே! என எண்ணியபடி அவள் நகர எத்தனிக்க,

"நில்லு யாழினி" என்றான் தமிழ். அவள் பெயருக்கு வலிக்குமோ என்பது போல மென்மையாய் அழைத்தான் தமிழ்.

"என்ன" என்பது போல அமர்த்தலாய் புருவம் உயரத்தினாள்.

"என்ன பாத்துட்டு பேசாம போற ? ஒரு ஹாய் கூட சொல்லல?"

"..."

"ரெண்டு நாளைக்கு பிறகு பார்க்குறோம்!" இரண்டு நாட்களை இரண்டு யுகங்கள் போல சொன்னான். அப்போதும் அமைதியாகவே இருந்தாள் அவள். சுள்ளென கோபம் வந்தது தமிழுக்கு. ஏதோ சின்ன பொண்ணு னு பேசினா இவ்ளோ திமிரா என்று அவனுக்குள் தூங்கி கொண்டிருந்த சிடுமூஞ்சி தமிழ் முழித்து கொண்டான். அவன் கண்களில் கோபம் குடியேறுவதை கண்டு கொண்டாள் யாழினி.

" இது..இது..இதுதான் நம்ம சிடுமூஞ்சி.. " என்று மனதில் சிரித்துக் கொண்டவளை அவளது கண்கள் காட்டி கொடுத்தன. தமிழின் முகமும் சட்டென இளகியது. " வேணும்னு தானே பண்ணுற?"

" என்ன வேணும்னு? அல்லது யார் வேணும்னு ? " என்றவளின் குரலில் உல்லாசம் கொப்பளித்தது. கைகளை மடக்கி கொண்டு அவனை பொறுமையாக சைட் அடித்தாள் யாழினி. எப்போதும் போல இறுக்கமான முகம் இல்லாமல், மிக நேர்த்தியான உடை அணிந்து இருக்காமல் இயல்பாக இருந்தான் அவன்.

" காதலோ கத்தரிக்காயோ அதை வருங்காலத்தில் பார்த்து கொள்ளலாம்... முதலில் நமது தோழனாக்கி கொள்ளலாமா இவனை ?" அவளின் உள்மனம் வினவியது.

" இவளுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னா, ஏன் இவளின் இருப்பு நிலை என்னை பாதிக்கிது? எங்களுக்குள் ஏதோ பந்தம் இருக்கோ ? அது என்னனு தெரியும் வரை ப்ரண்ட்ஸ் ஆ பழகலாமே! " தமிழின் உள்மனமும் அதையே யோசிக்க சட்டென " ப்ரண்ட்ஸ்??" என்று வலது கையை உயர்த்த வந்தான். அதற்குள் யாழினியின் செல்போன் சிணுங்கி தன் இருப்பை காட்டி கொண்டது.

இருவருமே செல்போன் திரையை பார்த்தனர். புகழ்!!

யாழினியின் முகம் கோபத்தில் கொப்பளிக்க, தமிழின் முகத்திலோ இறுக்கம். அன்று தன் வீட்டில் புகழ் சொன்ன வார்த்தைகள் நினைவில் நின்றதே அவனின் இறுக்கத்திற்கு காரணம்!

" யாழினியின் நண்பன் நான் மட்டும் தான்!" என்று சொல்லியிருந்தான் புகழ். பெருமிதமா திமிரா என பிரித்து பார்க்க முடியாத தொனி அது ! ஆனால், அது தமிழை அன்று பாதிக்கவில்லை. ஆனால் இன்று ? போன் இன்னும் அடித்து கொண்டிருக்க யாழினியை முறைத்தான் தமிழ்.

" போன் அடிச்சா எடுத்து பேச வேண்டியது தானே?" எரிச்சலுடன் சொன்னான்.

" உனக்கென்னடா?" என கேட்க நினைத்த நாவை அடக்கினாள் யாழினி.

எதுவும் சொல்லாமல் போனை எடுத்து "ம்ம் புகழ்..." என்றாள்.

" செல்லம் ஐ எம் வெரி வெரி வெரி சாரி..மன்னிச்சிடு..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.