(Reading time: 7 - 14 minutes)

"எனக்கு தெரியும் என்னை நீ ரொம்ப மிஸ் பண்ணிருப்ப.." என்றவனுக்கு அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. சஹீபாவின் பிடிவாதம், ஒரே நாளில் கனவுகளை அள்ளி தந்து விட்டு உடைந்த காதலென புகழுக்கு கொஞ்சம் தனிமை தேவைப்பட அவன் யாழினியிடம் பேச முடியாத நிலையில் இருந்தான்.

மாறாக யாழினியோ கொதித்து போயிருந்தாள். அவள் புகழின் அருகாமையை தேடுவதை உணர்ந்தே இந்த கோபம். காதலி வந்ததும் என்னை மறந்துடுவியா? திடீரென்று அவளுக்குள் அப்படி ஒரு கேள்வி. அதை வாய்விட்டு கேட்டே விட்டிருந்தாள் யாழினி.

"யாழீ..!!"

"சொல்லு! உன் காதலி வந்ததும் என்னை மறந்துடுவியா? எப்பவும் நான் தான் உன் ப்ரண்ட்...நான் மட்டும் தான்! என்னையே தவிக்க விடுவியா? பெரிய இவனா நீ? உன்ன நான் மிஸ் பண்ணனுமா? லவ்வோ ப்ரண்ட்ஷிப் ஓ, பொண்ணுங்கள தவிக்க விடுறதுதான் பசங்க புத்தியா?"

"ஏய் நிறுத்துடீ.. இந்த வசனம் எல்லாம் உன் மூஞ்சிக்கு சூட் ஆகல.." என்று புகழ் சொல்லவும் பக்கென சிரித்தாள் யாழினி.

" நான் நடிச்சேன்னு கண்டுபிடிச்சிட்டியா டா?"

"ம் ம் உன் கோபம் பொய்...ஆனா வார்த்தைகள் மனசுல இருந்தது தான். .!"

".."

"எப்படி டீ உனக்கு அப்படி கேட்கனும்னு தோணிச்சு..லவ் காக தோழியை மறக்குற ஆளா புகழ்  ? உன்னை நான் மறப்பேனா யாழீ? ஏற்கனவே நொந்து போயிருக்கேன்..நீயும் கஷ்டப்படுத்துறல?"

"புகழ்... ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன்.. மன்னிச்சிடு.. நீ ஏன் டல்லா இருக்க சொல்லு!" என்று சமாதான குரலில் யாழினி உரைக்கவும் புகழ் அவளை மன்னித்தே விட்டான். சஹீபாவின் மாற்றத்தை எடுத்து சொன்னான் . சில நொடிகள் இருவருமே அமைதியாக இருந்தனர்.

" என்ன பண்ணுறதுன்னே தெரியல அம்மு ! இவளை ரொம்ப காதலிச்சு தொலைச்சிட்டேன். ஏதோ ஒரு நம்பிக்கைல அவளின் வளர்ப்பு பெற்றோர்கும் நம்பிக்கை தந்துட்டேன்.. தோத்துட்டேனோ?" கேசத்தை அழுந்த கோதியபடி தன் மன அழுத்தத்தை கொட்டினான் புகழ்.

" ஏன்டா வயலின் வாசிக்கிற? எதையும் ஈசியா எடுத்துக்குற என் நண்பனா நீ? இதெல்லாம் உனக்கு ஜுஜூபி டா... பிரச்சனையை தள்ளி வை..யாரோ ஒருவரின் பிரச்சனையா இதை பாரு... உனக்கு கண்டிப்பாக வழி கிடைக்கும்.. உன்னால முடியாது னா இந்த உலகத்தில் யாராலுமே முடியாது புகழ்.. நான் உன்ன நம்புறேன்.. உனக்காக நம்பிக்கையோடு வெயிட் பண்ணுவேன்.."

"இதுக்கு தான் என் யாழீ வேணும்னு சொல்றது .." என்றவன் இன்னும் சில நிமிடங்கள் பேச்சை வளர்த்தான். பிருந்தாவனம் இல்லத்திற்கு வந்திருப்பதாகவும், அங்கு தமிழும் இருப்பதாகவும் அவள் சொல்ல இந்த முறை எதுவும் எதிர்ப்பு காட்டவில்லை புகழ். வழக்கம்போலவே பேசிவிட்டு போனை வைத்தவன்,தமிழுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினான்.

"எப்படி இருக்கீங்க பாஸ்? ப்ளீஸ் அவளை பத்திரமா டிராப் பண்ணிடுங்க!" என்று. அவ்வளவு நேரமும் யாழினியின் உரையாடலை கேட்டு கொண்டிருந்தான் தமிழ். கோபம், ஏமாற்றம், பொறாமை, அன்பு, அக்கறை என்ன மாதிரியான அன்பு இது? ஏன் இப்படி பட்ட உறவு தனக்கு அமையவில்லை? தனது கம்பீரத்தை கண்டு எத்தனையோ பெண்கள் சாய்ந்தது உண்டு. ஆனால் உண்மையான நட்பு ? அதை கிடைக்கவில்லையே! இனி கிடைக்குமா?

யாழினியின் பக்கம் வந்தான் தமிழ்.

"யாழினி.." அவனுக்கே கேட்காத குரலில் பேசினான் தமிழ். அவனை நிமிர்ந்து பார்த்தாள் யாழினி. அவன் கண்களில் எதை கண்டாளோ

"என்னாச்சு பா?"என்றிருந்தாள்.

"கிளம்பலாமா?" என்று அவன் கேட்க எங்கு, ஏன் என கேட்காமல் அவனது காரில் ஏறினாள் யாழினி. மாலை நிலவு அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.