(Reading time: 9 - 17 minutes)

அவர் திரு திரு னு முழிச்சிட்டு  இருந்தார் அவசர பட்டுடொமொ. பொன்மணி அவரை பார்த்து முறைத்தாள் என்ன என்னமோ பொண்ணை  கூப்பிட்டு  போகணும்னு ஒத்தை  காலில்  நின்னீங்க    இப்ப என்ன  கூட்டிட்டு போக வேண்டியது தான மாப்பிளை கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போங்க அப்ப  தான் எல்லாரும்  நம்மளை  பாராட்டுவாங்க. வைத்துல  இருக்க பாப்பாவே  உங்கள வந்து மிதிக்கும் எங்க அப்பா அம்மாவ பிரிச்சியானு.

அரன்டே  போய் விட்டார்.

கூட்டிட்டு போய் என்ன செய்றதா  உத்தேசம். நீங்க ஏற்க  வில்லை என்றாலும் கார்த்திக் என் அண்ணன் பையன் தான் எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம் என்றார் பொன்மணி

அப்பா கார்த்திக் மாமா கூடவே இருக்கேன் பா ப்ளிஸ் பா. அத்தையும்  மாமாவும் பாவம் பா. அன்னைக்கு கார்த்திக் மாமா எப்படி அழுதாங்க தெரியுமா  என்னை உன் மகள் இல்லை என்று எனக்கு தெரிந்தால் எப்படி இருக்கும் அந்த வலியை  கார்த்திக் மாமா அனுபவிச்சார்  பா. அந்த வலியை  குடுக்க கூடாது என்று தான் அத்தையும்  மாமாவும் மறைச்சாங்க.

உன்கிட்ட சொன்னா  ஏதாவது ஒரு நேரத்தில் வெளியே வந்து விடும் என்று நினைத்தார்கள்  அதனால் தான். உனக்கு முக்கியத்துவம் குடுக்காமல்   இருப்பார்களா சொல்லு அவர்களை பற்றி உனக்கு தெரியாதா  பா

மணிச்சிக்கோ கீர்த்தி ஆத்திரத்தில் அறிவிழந்து போய்ட்டேன்  எல்லாரும் மன்னிச்சிருங்க.சரி வாங்க எல்லாரும் ஹாஸ்பிடல் போகலாம் வாடா  குட்டி

எதுக்கு பா

மயங்கி விழுந்துட்டா  பாப்பா எப்படி இருக்கு என்று கேட்டுவிட்டு மாத்திரை எல்லாம் வாங்கி கொண்டு வரலாம் என்றார்.

அதுக்கெல்லாம்  இன்னும் நாள் ஆகும்.

எனக்கும் தெரியும் மா 9 மாசம் ஆகும் என்று வா போகலாம்

லூசாப்பா  நீ

பரிதாபமாக விழித்தார் பவித்ரன். உன்னை பெத்துருக்கேனே  அப்பவே தெரியலையா நான் லூசு என்று இப்ப எதுக்கு திட்டுற என்றார்.

நான் பொய்  சொன்னேன் பா பாப்பா இருக்குனு  நீ கூப்ட போது  நான் வரலை என்று சொல்லி இத்தனையும் பேசி இருந்தால் உன் கோபம் அதிகமாக  ஆஇருக்கும்  அதனால் தான். மன்னித்து விடு  உனக்காக நான் தம் அடிக்குற  பழி எல்லாம் சுமந்துருக்கேன்  மன்னித்து விடு பா என்றாள்.

பாவி மகளே எப்படி கரெக்டா  தப்பான நேரத்தில் போட்டு குடுக்கா  பாரு ஐயோ  மணி முறைக்காளே இன்னைக்கு என்ன மாத்து  மாத்த  போறா

தெரியலையே ஏற்கனவே ஓவரா  வீராப்பா   பேசிட்டேன்  இன்னைக்கு செத்தேன்  மனத்துக்குள் அலறினார் பவித்ரன்

அவர் விழிப்பதை பார்த்து அனைவரும் சிரித்து  விட்டனர்.

இப்போது கார்த்திக் அவளை விழி எடுக்காமல் பார்த்தான். இப்போது அவன் கண்களுக்கு குழந்தையாய் தெரியாமல் குமரியாய் தெரிந்தாள். எத்தனை பெரிய குடும்ப விசயத்தை ஒரு நொடியில் சரி செய்து விட்டாள். லவ் யு  டி செல்ல குட்டி கொஞ்சி கொண்டான் மனதுக்குள்

பொய்  என்றவுடன் பவித்ரன்  முகம் வாட்டத்தை காட்டியது  அப்ப  பாப்பா வராதா  என்றார் பாவமாக

பொன்மணி  தான் சொன்னார். இப்போ எதுக்கு முகத்தை தொங்க போட்டுட்டு இருக்கீங்க.இப்ப தான அவள் படிப்பு  முடிந்திருக்கு. அடுத்த வருசம் உங்க வாரிசை  பெத்து  கையில் கொடுத்து விடுவாள் என்றாள் அப்படி தானே கீர்த்தி என்று அவளுக்கு அப்படி  தான் ஆக  வேண்டும் என்ற கண்டிப்பையும்  காட்டினாள் . இப்போது பரிதாபமாக விழிப்பது கீர்த்தியின் முறை. பாவமாக தன்னை பார்த்த மனைவியை பார்த்து கண்ணடித்தான்  கார்த்திக்.

முதலில்  அவங்க சாந்தி  முகூர்த்தததுக்கு நேரத்தை  பாருங்க அதெல்லாம் பாப்பா வர வேண்டிய நேரம் வரும் உங்க பொன்னே  பாப்பா தான பின்ன  என்னஎன்று  பொன்மணி சொன்னார்

ஆமா ல மச்சான் வாங்க ஜோசியர் பாத்துட்டு வரலாம்.

இது நல்ல அப்பாக்கு அழகு அதை விட்டுட்டு கிளம்பு கிளம்பு னு எல்லாரையும் பய  மூறுத்தித்தி  தேவையா இது.

விடு  மணி மாப்பிளை ஏதோ தெரியாம உணர்ச்சி வச பட்டுடாரு  நாங்க தான் உண்மையை  சொல்லி இருக்கணும். எங்க மேல தான் தப்பு என்றார் கார்த்திக் அப்பா.

மாப்பிளையும் மச்சானும்  வெளியே கிளம்பி போக மல்லிகா கீர்த்திக்கு திஸ்டீ  கழித்தார்  எவ்வளவு அறிவுமா உனக்கு.

எல்லாம் உங்க பிள்ளை கடன் கொடுத்தது தான் அத்தை  ஆனால் பாவம் எல்லாத்தையும் எனக்கு கொடுத்துட்டு மாமா தான் ஒண்ணும் இல்லாம இருக்கார் என்று சொல்லவும் அவளை துரத்தினான் கார்த்திக். எல்லாரும் மனம் விட்டு சிரித்தனர்.

விரட்டி  கொண்டு வந்தவன் அவள் தன்  அறைக்குள் நுழையவும்  ஓடாமல் நிறுத்தி நிதானமாக உள்ளே சென்று கதவை அடைத்தான்.

இப்ப எதுக்கு மாமா கதவை அடைச்சிங்க

அறிவு இல்லைனு சொன்னல்ல   அதை காட்ட வேண்டாமா அதான்

மாமா தெரியாம சொல்லிட்டேன் உங்களுக்கு அறிவு நிறைய  இருக்கு போதுமா

ஆஹான்

வேண்டாம் உங்க பார்வையே சரி இல்லை.

சுவடுகள் பதியும்....

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.