(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 13 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

ப்ப  சரியான பார்வையை பார்த்துருவோமோ அன்னைக்கு  அந்த பார்வை பாக்க  தான் வந்தேன் அடுத்து நிலைமை  மாறி விட்டது.

அதான் நைட்க்கு  நல்ல நேரம் பாக்க  போறாங்களே அப்றம் என்னவாம். இப்ப கிட்ட வர கூடாது

அப்ப  நைட் கிட்ட வரலாமா கீர்த்தி

ச்சி  போங்க மாமா.

அதெல்லாம் முடியாது ஒரே ஒரு கிஸ் கொடு டி

நானா

பின்ன  பக்கத்து வீட்டு  கிளவியா

கிளவிய  வர சொல்லவா

எனக்கு இந்த கிளவி தான் வேணும் என்று சொல்லி அவளை இழுத்து கொண்டான்.

அவன் கைகளுக்குள் சிக்கினாலும் வம்பை இழுத்தாள் கீர்த்தி. நான் என்ன கிளவியா

ஆமா கிளவி தான் இப்ப எண்ணங்குற. பேசியது  போதும் என்று சொல்லி அவள் இதழ்களை சிறை செய்தான்.

எப்படி டீ  உன்கையில் மண்ணு  வந்தது

அது அந்த அருந்ததி காலடி மண்ணு  எப்படி குறு  குறுனு உங்களையே  பார்த்தா  அதான்  எடுத்துட்டு வந்து சுத்தி போட்டேன் கொல்லி  கண்ணு மாமா

அட பாவி அதான்  அவளை தண்ணி கேட்டு துரத்தி விட்டியா

ஆமா இது என்னோட மாமா யாரும் பாக்க கூடாது

யாரும் பாக்க  கூடாது தான் ஆனா நீ பாக்கலாமே

பார்த்துட்டு தான இருக்கேன்

என்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும் கீர்த்தி

உங்க கண்ணு உங்க திமிரு

திமிரா

ஆமா திமிர் தான் அப்படியே கெத்தா இருப்பீங்க அது பிடிக்கும் அப்றம் இந்த கண்ணு என்ன பாக்கும்  போது மயங்கிருவேன்  என்று அவன் புருவங்களை தடவினாள்.

அவ்வளவு தான் பிடிக்குமா

இல்லையே உங்க கன்னம் அப்றம் இந்த உதடு எல்லாமே பிடிக்கும் மொத்தமா என் மாமாவ  முழுசா பிடிக்கும்

அதுக்கு மேல் அவளை பேச விட வில்லை அவன்

சிறிது நேரம் கழித்து விட்டவனை முறைத்தாள் கீர்த்தி உதடு வலிக்கு மாமா

அவள் உதடுகளை தன்  விரலால் தடவியவன் அவன் உதடுகளாலே  ஒத்தடம்  குடுத்தான்

நல்ல நேரம் பார்க்க சென்றவர்கள் முகத்தை தொங்க போட்டு கொண்டு வந்தனர். இன்னும் ஒரு மாதத்துக்கு நேரம் சரி இல்லையாம்

இப்போது முகத்தை தொங்க போடுவது கார்த்திக்கின் முறையானது. அட பாவிகளா  இந்த கலெண்டர்  கண்டு பிடிச்சசவன் என் கையில் கிடைத்தான் செத்தான் என்று புலம்பினான்.

கீர்த்தி தான் அவனை வம்பு இழுத்து கொண்டு இருந்தாள்  இழக்க  இருந்த சந்தோசம் மீண்டும் கிடைத்தத்தில் அனைவருக்கும் சந்தோசம்.

கார்த்திக் தான் கேட்டான் தாத்தா விடம்  ஏன்  தாத்தா அவசரமா கல்யாணம் செஞ்சீங்க

மருமகளை பத்தின விவரங்களை வைத்து நம்ம எல்லாரையும் தேடுவதாக என் ப்ரண்ட் சதா  சொன்னான். அவனுக்கு தெரிஞ்சவங்க சொல்லி இருப்பாங்க போல. அவன் தான் இந்த ஐடியா கொடுத்தான்.  கீர்த்தியை ஓரக்கண்ணால்  பார்த்து கொண்டே அடுத்த வார்த்தை சொன்னார். அவன் உனக்கு கல்யாணம் செய்யணும்னு மட்டும் தான் சொன்னான் நான் கீர்த்தியை பண்ணலாமான்னு  கேட்டேன் அதுக்கு அவன் அந்த குரங்கு வேண்டாம்ணு சொன்னான் என்று நிறுத்தி அவளை பார்த்தார்

அங்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது இன்னைக்கு  சதா  இவ கிட்ட மாட்ட  போறான் என்று சிரித்து  கொண்டு மேலும் தொடர்ந்தார்.

நான் தான் சொன்னேன் நம்ம  வீட்டு  குரங்குக்கு வால்  இருந்தாலும் கார்த்திக் பின்னாடியே  தான் சுத்தும் அதனால ஐயோ  பாவம் சேத்து  வச்சிறுவோம்னு சொன்னேன் என்று சொல்லி அவளிடம் ஒரு கொட்டையும் வாங்கி கொண்டார்.

தாத்தா கடைசில என் வாழ்க்கையோட விளையாடி இந்த குட்டி சாத்தானை  என் தலையில் கட்டியது  நீ தானா. நீ மட்டும் சதா  தாத்தா சொன்ன  மாதிரி வேற பொண்ணை  பார்த்திருந்தால் எப்படி இருந்துருக்கும் என்று சொல்லி கீர்த்தியின் கையால் முதுகில் இரண்டு அடி வாங்கினான் கார்த்திக்.

ஸாரீ பா மணிச்சிக்கோ இந்த ஜென்மத்தில்  இவ தான்னு எழுதி வச்சிடாரு  கடவுள்.

அத்தை  பாருங்க அத்தை  ரெண்டு பெரும் என்னை கிண்டல் செய்றாங்க.

என் மருமகளை தாத்தாவும் பேரனும் ஏதாவது சொன்னீங்கன்னா  இன்னைக்கு  சாப்பாடு கிடையாது யாருக்கும் சொல்லிவிட்டேன் என்றார் மல்லிகா

அந்த அதட்டலில்  இருவரும் வாயை மூடி கொண்டனர். ஆனாலும் தொடர்ந்தார் அவங்க என்ன வேணா  செய்யலாம் கார்த்திக் பணம் நிறைய  இருக்கு மிரட்டி கூட செய்ய வைக்கலாம் இல்லை  கல்யாணம் மூலமா பிரிக்க நினைக்கலாம் கீர்த்தியும் உன் ஞாபகமா  இருந்தாள்  அதான் எப்படியோ நல்ல  படியா முடிஞ்சிட்டு உனக்கும் விருப்பம் இல்லாமலா என்னுடைய மிரட்டலுக்கு சம்மதிச்ச என்று அவன் காலையும் வாறினார் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.