(Reading time: 12 - 23 minutes)

ஆமா தாத்தா இடையில் நடந்தது எல்லாமே கனவு மாதிரி இருக்கு என்றான் கார்த்திக்

கார்த்திக் கேக்கிறேனு மனசு வருத்த படாத உனக்கு இந்த விசயம் மன கஸ்டததை தரவில்லையா

எப்படி தாத்தா வரும்  இடையில் நடந்தது எல்லாமே  கனவு மாதிரி கனவுக்கு யாராவது கவலை படுவாங்களா . என்னோட  அம்மா அப்பா இவங்க தான் என் அத்தை  மாமா மணியத்தையும் பவித்ரன்  மாமாவும் அப்றம் அருமையான தாத்தா அப்றம் செல்லமான  என் பொண்டாட்டி இது  மட்டும் தான் என் குடும்பம். யார் என்ன சொன்னாலும் இது மாறாது என்று அவன் முடித்ததும் எல்லோர் கண்ணிலும் கண்ணீர் வந்தது . அடுத்து கீர்த்தியின் வண்டவாளங்களை  சொல்லி தாத்தாவும் கார்த்திக்கும்  அவளை கிண்டல் செய்து அதுக்கு வாங்கியும் கட்டி கொண்டனர்

கடைசியாக அவர் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகள் மட்டும் இருவரின் மனதிலும்  எதிரொலித்து கொண்டே இருந்தது. நீங்க ரெண்டு பேருமே இந்த ஜென்மத்தில்  சேரனும் அது தான் வீதி கார்த்திக் நீ  கீர்த்தியை விரும்பலைனு சொல்லலாம் ஆனால் கண்டிப்பாக உன்னால் அவள் இல்லாமல் வாழ்ந்திருக்க முடியாது. உன்னுடைய ஒவ்வொரு விசயத்திலும் அவள் இருப்பாள். நீ உன் நண்பர்களுடன் வெளியில் போகும் போது கூட அவளுக்காக ஏதாவது வாங்கிட்டு தான் வருவ.அது ஏன்  உனக்கே காரணம் தெரியாது

அது மட்டுமா உன்கிட்ட இருக்கும் பொருள்களில் பாதிக்கு மேல் கீர்த்தி வாங்கி தந்தது தான். உன்னை யாராவது பார்த்தால் அவளுக்கு தாங்காது அவளை யாராவ்து மனசுல நினைத்தால் நீ அவனை ஒரு வழி பண்ணி விடுவ. என்ன கார்த்திக் சரி தானே

நான் ஒண்ணும் யாரையும் எதுவும் செய்யவில்லை

அப்படியா இவளை ஒருத்தன் பின்னாடியே துரத்திகிட்டு இருந்தானே அவனை என்ன செஞ்ச ஞாபகம் இருக்கா

மாமா யாரை என்ன செஞ்சாங்க தாத்தா

கோயிலுக்கு போன அன்னைக்கு ஒருத்தன் உன் பின்னாடியே வந்தான் உங்க அப்பா கூட கோப பட்டானே ஞாபகம் இருக்கா அன்னைக்கு அவனை உன் மாமா அடி பிச்சு எடுத்துடான் எதுக்குணு கேளு கீர்த்தி

முதலில் இருந்தே உங்களுக்குள்ளே சண்டை போட்டாலும் வேற யாருக்கும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு தர மாட்டீங்க இது போல கடைசி வரைக்கும் நீங்க இருக்கணும்னு தான் கல்யாணம் செஞ்சு வச்சேன் சீக்கிரம் எனக்கு ஒரு கொள்ளு பேத்தியை பெத்து குடுத்துரு என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

அப்பவே மாமா எனக்காக சண்டை போட்டுருக்காங்க என்று நினைத்தவள் அவள் காதலின் தடம் அவன் மனதிலும் பதிந்து இருப்பதை நினைத்து ஆனந்த பட்டாள் ஆனால் அவன் வேறு ஏதோ யோசனையில் இருந்தான்

என்ன மாமா யோசனை

இல்ல எல்லாரும் மாற்றி மாற்றி பேத்தி பேத்தி னு சொல்றாங்க ஆனா நல்ல நேரம் கிடைக்கலனு பிரிச்சு வாக்காங்க அதை தான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி தான் செய்ங்க மாமா செய்ங்க

என்னை ஆராய்ச்சி பண்ண சொல்லிட்டு  நீ எங்க போற என் ஆராய்ச்சி இனி உன்னிடம் தான் டி பொண்டாட்டி என்ற படியே  அவளை துரத்தினான் கார்த்திக்

ருவாரம் இருவரும் ஊரில் இருந்தனர். ஒரு வாரம் கழித்து அவன் சென்னைக்கு கிளம்பும் போது தாத்தாவிடம் சென்றான்.  தாத்தா அன்னைக்கு  வேலையவே  விட சொன்ன. நான் லீவ் எழுதி குடுத்தது எத்தனை நல்லது பார்த்தாயா உன்னால என் வேலையே போய்ருக்கும்.

சரி விடு  கார்த்திக் அன்னைக்கு இருந்த பதட்டத்தில்  அப்படி சொல்லி விட்டேன் நீ தான் லீவ் மட்டும் தானே போட்டாய் என்னைக்கு வேளையில் சேர போகிறாய் என்றார்.

ரெண்டு நாள் கழித்து போகணும் தாத்தா அதுக்கு முன்னாடி  வினோத் கல்யாணம் தாத்தா நாங்க முதலில் போறோம் நீங்கள் கல்யாணம் அன்று அனைவரையும் அழைத்து கொண்டு வாருங்கள் என்றான்.

நாங்கன்னா  யாரை சொல்ற நம்ம கீர்த்தியையா அவளை ரெண்டு வாரம் இங்க இருக்க சொல்லணுமே பா என்று சொல்லி விட்டு அவனை பார்த்தார்

வெளகென்னை  குடித்தது  போல் இருந்தது அவனுக்கு. கீர்த்தியை  விட்டுட்டு  போகணுமா நானே எப்படா  அவளை கடத்தி கொண்டு செல்லலாம் என்று காத்திருக்கேன் இவர் வேற என்று நினைத்து கொண்டு அவரை பார்த்தான். இல்லை இல்லை முறைத்தான்

அவனை கண்டு சிரித்தவர் சும்மா உன்னை ஏமாற்ற  சொன்னேன் என்று சொல்லி அவனை பார்த்து கண்ணடித்தார்.

தாத்தா நீ இருக்கியே  என்று சொல்லி கட்டி கொண்டான்.

அவளுக்கு தான் விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து கார்த்திக் கிறுக்கு பிடித்து விட்டதே உன்னை விட்டு இருப்பாளா என்ன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.