(Reading time: 12 - 23 minutes)

உங்களுக்கு எப்படி தெரியும்.

அவள் சொல்லவே வேண்டாம் அவள் உன்னை பார்க்கும் பார்வையிலே மைக் போட்டு சொல்றதுக்கு சமம்.ஆனால் நான் கண்டு பிடித்தது இதை வைத்து தான் என்று சொல்லி ஒரு டைரி குடுதார். இதை நான் படிக்க வில்லை. உன் பொண்டாட்டி தான் முதல் பக்கத்தில மங்கையின் மனம்கவர்ந்த  மணாளன் என் கார்த்திக்  என்று எழுதி வைத்திருக்கிறாளே அடுத்து நான் எப்படி படிக்க நீ படிக்கலாம் ஜமாய் என்று அவன் தோளை  தட்டி விட்டு சென்று விட்டார்.

அவளுக்கு தெரியாமல் அதை தன்னுடைய பையில் வைத்தான். கிளம்பும் முன் தாத்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவர் முன் இருவரும் நின்றனர். அப்போது  மூவருக்கும் கல்யாண தினத்தன்று அவரை முறைத்து கொண்டு நின்றது ஞாபகம் வந்து சிரிப்பை வர வழைத்தது.

அனைவரிடமும்  விடை பெற்றுக்கொண்டு சென்னை வந்தனர். போகும் முன் இருவருக்கும்ஒரே அட்வைஸ் தான் 20 நாள்  முடிந்த பிறகு தான் எல்லாம் என்று. தாத்தா தான் அவர்கள் வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கு தெரியும் விடுங்கள் என்று விட்டார்.

சென்னை வந்தவுடன் வினோத் ஊருக்கு எப்ப மாமா போகணும் என்று கேட்டாள் கீர்த்தி

ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கிட்டு போகலாம் கீர்த்தி நீ உன் அறையில் ஓய்வு எடு.

இப்போதும் என்னுடைய அறைக்கு விரட்டுறான் பாரு லூசு  என்று நினைத்து முறைத்து கொண்டு சென்றாள் அவள் போனதும் அறையை பூட்டி தாளிட்டு விட்டு அந்த டைரியை  எடுத்து வாசித்தான்.

வாசிக்க வாசிக்க அவள் மேல் கொண்டுள்ள  நேசம் பல மடங்கு பெருகியது அவனுக்குள். வார்த்தைக்கு வார்த்தை என் கார்த்திக் என் கார்த்திக் தான். சிறு வயது முதல் அவர்களுக்குள் நடந்த சண்டைகள் இருவரும் சேர்ந்து நேரம் செலவளித்தது தாத்தாவுடன் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் அவனை பற்றிய வர்ணனைகள் அனைத்தும் கார்த்திக் மயம்  தான் அப்படி உனக்கு நான் என்னடி செஞ்சேன். இவ்வளவு அன்பு வச்சிருக்க என் செல்ல ராட்சஸி டி நீ என்று அவனுக்குள்ளே புலம்பினான்

குட்டி மா இன்னும் 20 நாள் இருக்கே டா  அதுக்கு பிறகு பாரு கார்த்திக் உன்னை விட்டு நகரவே மாட்டான் என்று தனக்குள் சொல்லி கொண்டு அவளை தேடி அவள் அறைக்குள்  சென்றான். தூக்கம் வராமல் உருண்டு கொண்டு இருந்தவளை நெருங்கி அனைத்து கொண்டான். அதன் பின் தான் இருவரும் தூங்கினார்.

சிறிது நேரம் கழித்து அவளை எழுப்பி விட்டு கிளம்பு என்றவன் தானும் கிளம்பினான். அப்போது தான் இவனுக்கு ஞாபகம் வந்தது இவ இன்னைக்கும்  சுடிதார் போட்டு கொண்டு வந்து விட கூடாதே இப்ப போக போறது வேற கிராமம் ஐஐயோ  என்று அலறி அடித்து கொண்டு அவள் அறைக்குள் வந்தவன் சிலையாகி நின்றான்.

அங்கு அரக்கு நிற பட்டு  புடவையில் வெந்தைய  நிற பார்‌டர்  இருக்கும் புடவையை அணிந்து கொண்டு இருந்தாள் கீர்த்தி  முன்னால் பார்த்த  அதே கோலத்தோடு.

அதன் பின் அவனால் சும்மா இருக்க எப்படி  முடியும் அவளை ஒரு வழி செய்து விட்டு தான் விட்டான் கார்த்திக். இன்னும் 20 நாள் இருக்கே என்ற கவலையோடு.

அவன் செய்கையில் முகம் சிவந்தவளை ரசிபபத்தை நிறுத்திவிட்டு என்ன கீர்த்தி இது இன்னும் சேலை கட்ட பழகலையா என்று கேட்டு வம்பு இழுத்தான்

ஒண்ணுமே நடக்காத மாதிரி கேள்வி கேட்டவனை முறைத்தவள் நான் ஒழுங்கா கட்டிக்கிட்டு இருந்தேன் இப்ப வந்து எல்லாத்தையும் கசக்கு விட்டுவிட்டு  பேச்சை பாரு போங்க மாமா என்று சிணுங்கினாள். அவன் கெஞ்சல்களோடும் அவள் சிணுங்களூடணும் கிளம்பி சென்றனர்.

வினோத் வீட்டில் அனைவரும் இவர்களை வர பாசமுடன் அனைத்து கொண்டனர்.

ரெண்டு நாள் காதலர்களுக்கு மட்டும் குளிர்ச்சியான வேளையில் தரையில் பயணிக்கும் சிவந்த உடலை உடைய பட்டு  பூச்சியை போல் மெதுவாக நகர்ந்தது.

அபர்ணா வீட்டில் உள்ள அனைவரும் முதல் நாளே  வினோத் ஊருக்கு  வந்து வினோத்திண்  உறவினர் வீட்டில் தங்கி  இருந்ததால் கீர்த்தி அபர்ணாஉடன்  சென்று சேர்ந்து கொண்டாள் கார்த்திக் தான் தவித்து போனான்.

என்ன டா  ஒரு வாரம் லீவ் போட்டுட்டு போன என்ன ஹனிமூனா  என்று கேட்டான் வினோத்

நடந்த விசயங்களை  சொல்லி அவனையும் வருத்த பட வைக்க  விரும்பாமல் ஹனீமூனா  நீ வேற  ஏன்டா  என் வைத்தெரிச்சலை  கிளப்புற  அது ஒரு மாசம் நேரம் சரி இல்லையாம் அதை தள்ளி வச்சிட்டாங்க  என்று சொன்னான் அதை கேட்டு வினோத் விழுந்து விழுந்து சிரித்தான் எப்பா சந்தோசம்  எனக்கு அப்படி ஒரு விசயம் இல்லை பா என்று சொல்லி கார்த்திக்கை மேலும்  வெறுப்பேத்தினான்  வினோத்

போடா  எரும  மாடே  என்று அவனை திட்டி தீர்த்தான் எனக்கும்  ஒரு காலம் வரும் அப்ப  இருக்கு உனக்கு என்றான் கார்த்திக்

திருமணம் முடிந்தவுடன் ஒரு நாலு மணிக்கு அங்கு இருந்து கீர்த்தியை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான் கார்த்திக்

நாளைக்கு போகலாமே என்றதுக்கு இல்ல டா  கிளம்புறோம் இங்க இருந்து என்ன பண்ண நீயும் ஒரு வாரத்தில் அங்க வந்துருவ  என்று சொல்லி அவன் வாயை அடித்து விட்டான். வேண்டும் என்றால்  இரவு கிளம்புகிறோம் என்று கார்த்திக் சொன்னதுக்கு இரவு  கிளம்பினால் வீட்டுக்கு போக நேரமாகும் கிளம்புறதா  இருந்தா  இப்பவே கிளம்பு இல்லை நாளைக்கு போ என்றான் வினோத். அதுக்கு மேல் அங்க இருக்க கார்த்திக் என்ன லூசா கீர்த்தியை  அழைத்து கொண்டு வந்து விட்டான்.

அப்படியே நாள்கள் ஓடியது அன்றொடு 20 நாள் கெடு  முடிந்து 7 மணிக்கு வீட்டுக்குள் வந்தான் கார்த்திக். அவளை பார்த்தவன் சிலையாகி தான் போனான்.

சுவடுகள் பதியும்....

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.