(Reading time: 37 - 74 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 14 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

வனுக்கு பிடித்த கலர்  சேலை கட்டி தலை முழுவதும் மல்லி பூ வைத்து அவனுக்காக காத்திருந்தாள்  கீர்த்தி அவளின் அம்மா அறிவுரை படி. இருவருக்குமே எதுவோ பட  பட  என்று இருந்தது. என்ன செய்ய என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தனர்

இருவரும் அமைதியாக உண்டு முடித்தார்கள்  பின் தன்  அறைக்குள் சென்றான். சிறிது நேரம் பார்த்தவன் அவள் அரவமே  தெரிய வில்லை என்று நினைத்து வெளியே வந்தான். அவள் அறையில் ஜன்னல் கம்பியில்  தலை வைத்து வேப்ப மரத்தை பார்த்து கொண்டிருந்தாள்.

அதே நேரம் அங்கு வினோத்தும்  அபர்ணாவும்  தன்  வாழ்க்கையை ஆரம்பிக்க போகிறார்கள். ஆம் அவன் திருமணம்  அன்றே அவளிடம் சொல்லி விட்டான். எனக்கு இந்த ஏஞ்சல்  கிடைக்க காரணமாக இருந்த கீர்த்தியும்  என்னையே  ஒரு நல்ல  மனிதனாக மாற்றிய கார்த்திக்கும்  வாழாத வாழ்க்கையை நாம உடனே வாழ வேண்டாம் அப்பு. அது வரைக்கும் காதலிக்கலாமே  என்றான்.

அவன் மன நிலை புரிந்து சரி என்றாள் அபர்ணா. ஆனால் அடுத்து அவன் செய்த செய்கையில் விழி விரித்தாள். எதுவும் கிடையாதுனு  தான் சொன்னேன் முத்தம் கூட கிடையாதுனு  சொல்லவே  இல்லையே இதுக்காக தான் முதல் முகூர்த்ததுல கல்யாணத்தை வைக்க சொன்னேன் என்றவன் இதழ்கள் அவள் இதழ்களை விடவே இல்லை.  அவர்களுக்கும் அந்த நாள்கள் காதலை அதிகரிக்க தான் செய்தது. ஒரு வழியாக அந்த நாள்கள் முடிந்தது ஆசையுடன் அவளை நெருங்கினான் வினோத்  ரொம்ப வெயிட் பண்ணிட்டேன் டீ முடியல என்று சொல்லி அவளை சிவக்க வைத்தான்.

அதே நேரம் மாடி வீட்டில் அவள் அருகில் சென்று பின் புறமாக கட்டி அனைத்து பொண்டாட்டி என்ன டீ  செய்ற  என்று கேட்டான் கார்த்திக்

அவன் திடிரென்று வந்ததில் பயந்தவள் அலறினாள் அவள் சத்தத்தில் அபர்ணா திடுக்கிட்டு வினோத்தை பார்த்தாள்

என்ன டீ

கீர்த்தி கத்துறா

புருசனுக்கும் பொண்டாடிக்கும் இதே வேலை தான் மாற்றி மாற்றி கத்துரது தான் வேலை நீ கண்டுக்காத என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்

தயவு செய்து கத்தி என்  மானத்தை வாங்காத

பயந்துட்டேன் மாமா

சரி இந்நேரம் நம்ம ரூம்கு வராமல் இங்க என்ன செய்ற

காத்து  நல்லா  வருது  மாமா அதான் என்றாள் கீர்த்தி

அவளை தன்  புறமாக திருபியவன் தன்னுடன் சாய்த்து கொண்டான்.

அவன் நெஞ்சில் சாய்ந்தவள் அவன் முகத்தோடு முகம் வைத்து தேய்த்தாள். கீர்த்தி என்று புலம்பி கொண்டு தன்னை மறந்து கார்த்திக் இருந்த நேரத்தில் அவன் சட்டையில் இருந்த போன்  எடுத்து வினோத்க்கு அழைத்தாள். அவன் எடுத்தது தான் தாமதம் உடனேயே அதை கார்த்திக்கின் காதுகளில் வைத்து விட்டாள்.

ஏண்டா  பரதேசி எப்படி ஒரு முக்கியமான நேரத்துல கால்  பண்ணி  உயிரை  வாங்குற அதுவும் மேல வீட்டில இருந்து கிட்டே அதான்  உனக்கும் 20நாள் முடிஞ்சிட்டுல  போன்  வைக்கல  மவனே செத்த இன்னும்  என்ன திட்டி இருப்பானோ  போனை  அனைத்து கீர்த்தியை முறைத்தான்.

இப்ப நிம்மதியாடி  பச்ச  பச்சயா  திட்டுறான் பாவி கைல  சிக்ககட்டும் இருக்கு அவனுக்கு எல்லாம் உன்னால தான் இப்படியா மாட்டி விடுவ.

சும்மா விளையாட்டுக்கு செய்தேன் மாமா

கீர்த்தி அவங்களுக்கும் இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் நைட் போல புரியுதா நமக்காக தான் அவங்க காத்திருந்திருக்காங்க

அப்படியா மாமா வினோத் அண்ணா  பெஸ்ட் இல்ல எப்பவுமே.  அப்பு க்கு அவங்க கிடைத்தது நல்ல விசயம்

அப்பு மட்டும் என்னடி அவள் வினோத் மேல எவ்வளவு உயிரை வைத்திருக்கிறாள் தெரியுமா. நல்ல மெச்யூர் ஆனா பொண்ணு நீ தான் இன்னும்  பாப்பா மாதிரி இருக்க இந்நெரத்துல அவங்க என்ன செய்வாங்க னு தெரிய வேண்டாமா

அவங்க என்ன செய்வாங்க னு  எனக்கு எப்படி தெரியுமாம்

யாருக்கு உனக்கா டி தெரியாது

ஆ விடுங்க மாமா காது வலிக்கு

காதை மட்டும் இல்லை  இனி உன்னையே விட போறது இல்லை என்ன செய்வாங்கணு  உனக்கு தெரியாதுனு சொன்னல்ல  வா சொல்லி தரேன்   என்றவன் அவளை தூங்கி கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தான்.

அவள் மேல் படர்ந்தவன் எதுக்கு கீர்த்தி உனக்கு என்னை பிடிக்கும் நான் உன்னுடைய மாமா பையன் அதனால

உங்களுக்கு வேணும் என்றால்  அத்தை  பொண்ணு என்று நினைத்து பிடிக்கும் எனக்கு ஒண்ணும் அப்படி இல்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.