(Reading time: 37 - 74 minutes)

அடங்கவே மாட்டியா

ஏன்  நீங்க தான் வந்து அடக்குறது

இங்க இருக்கனு  தைரியத்தில் பேசுறியா

இல்லாட்டி மட்டும்

ஏய்   என்ன  டி  திமிரா  அன்னைக்கு   மாமா  மாமா  வலிக்கு  மாமா  விடுங்க  மாமா  னு  சொன்னது  யாராம்

ச்சி   போங்க  மாமா எப்ப என்ன பேசுறதுனு இல்லையா  கிளம்புங்க  முதலில்

இரு  டி  உனக்கு  நேர்ல  பாக்கும்  பொது  இருக்கு

என்ன  இருக்காம்

அடங்க  மாட்ட  ம்ம் ஏத்தி விடாத டி செல்லம்

மாட்டேன்

இப்ப  அடக்க  முடியாது  டைம்   ஆயிட்டு   பை  நைட்  பேசுறேன்  அத்தை    மாமாவை  கேட்டனு   சொல்லு

சரி  மாமா

ஒரு உம்மா கொடுடி

நேர்ல தான்

என் நேரம் டி பை

ரெண்டு  நாள்  அங்கு  இருந்தவள்  கார்த்திக்  வீட்டுக்கு  சென்றாள்

அத்தை  எனக்கு  சமையல்  சொல்லி  தாங்க

ஏன்  கீர்த்தி பொன்மணிகிட்ட  கேக்கலாமே என்னை  விட அவ தான் நல்ல சமைப்பா  உங்க மாமாவே  சொல்லுவாரு என் தங்கச்சி செய்ற  மாதிரி செய் னு

போங்க அத்தை  அம்மாட கேட்டா  நாலு கொட்டு  மண்டையில்  விழும் அதுவே நீங்கன்னா  அத்தைனு சொன்னா  போதும் உருகிறுவீங்க உங்க பிள்ளை  மாதிரி அவரும் மாமானா  போதும் என்று வம்பு இழுத்தாள்

ஏய்  வாலு  என் பிள்ளையை  கிண்டல் செய்றியா

நல்லா  கேளு மா  யாரோ ஒருத்தர்  கார்த்திக் கார்த்திக்னு உருகி தவிச்சாங்க  அவன் தொட்ட பொருளை எல்லாம் சேகரீசிட்டு சுத்துனாங்க

 அதெல்லாம் மறந்து போய்ட்டு போல என்ற படி  அங்கு வந்தார் தாத்தா

அப்பா அதெல்லாம் முன்னாடி இப்ப உங்க பேரன் தான் என் மருமகள் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் அப்படி தான மா கீர்த்தி என்றார் மாணிக்கவாசகம்

அப்படி சொல்லுங்க  மாமா எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க மாமானா  மாமா தான்

ஆனா கீர்த்தி எனக்கு ஒரு டௌட்

என்ன மாமா

நீ எப்பவும் அவன் பின்னாடியே  தான வால்  பிடிச்சிட்டு  சுத்துவ  இப்ப என்ன அவனை தனியா  விட்டுட்டு வந்துருக்க  என்றார் அனைவரும் சிரித்தனர்

நீங்களுமா மாமா போங்க

அன்று மாலை கீர்த்தி என்ற படி  அருகில் வந்தார் ராஜூ தாத்தா

என்ன தாத்தா

பார்க் வறியா

நீ  சதா  கூட போவ மொக்க போடுவீங்க  ரெண்டு பெரும் எனக்கு போர்  அடிக்கும்

சதா  ஊருக்கு போய்ருக்கான் மா

அதான்  என்னை கூப்பிடுறியா

அப்படியே வச்சிக்கோ வெட்டியா  தான இருக்க வா கிளம்பு போலாம்

அத்தைகிட்ட  சொல்லிட்டு வரேன்  தாத்தா

சரி மா

சுற்றி விளையாடும் சிறுவர்களின் சத்தம் மட்டும் அங்கு கேட்டது  சுற்றிலும் தலையை திருப்பி பார்த்தாள்  குழந்தைகளின் பெற்றோர்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசி கொண்டும் சிரித்து  கொண்டும் இருந்தனர்

சதா  எப்ப வருவான் தாத்தா உனக்கு போர்  அடிக்கா

ரெண்டு நாளில்  வந்துருவனு சொன்னான் சரி கீர்த்தி உனக்கும் கார்ததிக்கும் என்ன பிரச்னை

தாத்தா...

என்ன முன்ட  கண்ணை  வச்சு முலிக்கிற  பதில் சொல்லு

ஒரு பிரச்சனையும் இல்லையே  ஏன்  கேக்க

பொய்  சொன்னாலும் பொருந்த சொல்லணும்

நம்பாட்டி  போ

நம்ப மாட்டேன் உன் பொய்யை  நான் என் அப்பு டார்லிங் கிட்ட கேட்டுகுறேன்

வேண்டாம் நானே சொல்றேன் ராஜூ நீ சரியான ஆளு போட்டு  வாங்குவ சரி பிரச்சனைனு  எப்படி கண்டு பிடிச்ச

அவன தனியா  விட்டுட்டு  வந்துருக்க அதிலே  தெரியலையா சண்டைனு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.