(Reading time: 37 - 74 minutes)

தாத்தா

உனக்கு  வீட்ல  நேரமும்  போகும்  உனக்கு  பிடிச்ச  வேலை  செய்த  திருப்தி  இருக்கும்  உன்னோட  பெரும்  நாலு  பேருக்கு  தெரிய  வரும்

க்ரேட் ஐடியா தாத்தா எனக்கு இது தோணவே இல்ல பாரேன்

மூளை இல்லைனா  எப்படி தோணும்

அப்ப   உனக்கு  மட்டும்  எப்படி  தோணுச்சு . சரி  சரி  விடு  கோப  படாதே . ஆனா  ராஜு  அதெல்லாம்  கொஞ்சம்  எனக்கு  தோணியதை   மாமாவை  வச்சி  எழுதினது   அது  நாலு  பேருக்கு  பிடிக்குமா

அதெல்லாம் யோசிக்காத கீர்த்தி கண்டிப்பா பிடிக்கணும்னு நினைச்சு நீ  செய் அது தானாவே  நடக்கும்

ஆனா என்னோடதை  யாரு புக்கா  போடுவா

நீ திருத்தி கொடு நான் சதா கிட்ட  சொல்றேன் அவனுடைய பேத்தியுடைய  ரிதம் பப்லிகேசன்  இருகுல அதுல போட சொல்லலாம்

நாம மைதிலி  அக்கா தான தாத்தா

ஆமா டா

இல்லை   தாத்தா  நீ  சதா  தாத்தா கிட்ட  சொல்ல  வேண்டாம்  நானே  முடிச்சிட்டு  அந்த  ஆபீஸ்  பொய்   பாக்குறேன்  அது  பிடிச்சிருந்தா  அவங்க  பப்லிஷ்  செய்யட்டும்  இல்லாட்டி   சதா கிட்ட   கேக்கலாம்

இது நல்ல  பொண்ணுக்கு அழகு அதை  விட்டுட்டு  புருசன்  கோச்சிக்கிட்டு வந்துருக்க

நான் ஒண்ணும் கோச்சிக்கிட்டு   வரலயாக்கும்

அப்ப  நாளைக்கு டிக்கெட்  போட்டுறவா

வேண்டாம் தாத்தா அது ரொம்ப சீக்கிரமா  இருக்கு அதனால

அதனால

இன்னைக்கே  போட்ரு   ஏன்னா   மாமா  பாவம்  நான்  இல்லாட்டி  தவிச்சு  போயிருவாங்க  எனக்கும்  எழுதுற  வேலை  இருக்க  உன்கூட  வெட்டியா  நேரம்  போக்க  முடியாது

அடிங்க  என்று சொல்லி சிரித்தார் தாத்தா

சரி போடுறேன் ஆனா ஒரு கண்டீசன்

என்ன தாத்தா

உன்  புக்  பப்லிஷ்  ஆகும்  முன்னாடி  எனக்கு  ஒரு  காப்பிய   அனுப்பிரு  படிச்சிட்டு  கருத்து   சொல்றேன்  அதை  படிச்சிட்டு  நாலு  பேர்  சாக  கூடாதுல்ல    அதான்

நோ நோ அது திருட்டு  காப்பி  நீ  புக் வாங்கி படி  என்று சொல்லி சிரித்து  கொண்டே கிளம்பினாள்

என்னமோ  உங்க  மருமகளுக்கு  சப்போர்ட்  பண்ணீங்க   பாருங்க  மாமாவை  பாக்கணும்  இன்னைக்கே  போறான்னு  சொல்றா   என்றார்  மல்லிகா

அது  தெரிஞ்ச  விஷயம்  தான  அவ  இந்த  நாலு  நாள்  வந்ததே  அதிசயம்  ஆமா   கீர்த்தி  உங்க  அத்தைகிட்ட  சமையல்  படிக்க   போறேன்னு   சொன்ன

ஹீ  ஹீ  அதுவா மாமா போன்  எதுக்கு இருக்கு அதுல கேட்டுப்பேன்

நல்ல வேளை  நாங்க தப்பிச்சிட்டோம்  நீ  செய்ரேனு  சொல்லி அதை  எங்களை  சாப்பிட  வச்சிட்டா என்ன பண்றது

சும்மா   அவளை  கிண்டல்  பண்ணாதீங்க  கீர்த்தி  ஒரு  டீல்   வச்சிக்கலாம்  நாளைக்கு  என்ன  சமையல்னு  இன்னைக்கு   நைட்  நாம  டிஸ்கஸ்  பண்ணி  டெய்லி  அத  செய்யலாம்  நான்   உனக்கு  சொல்லி  தரேன்  அங்கேயும்   இங்கேயும்   ஒரே  சாப்பாடு  ஓகே  வா என்றார் மல்லிகா

நல்ல  ஐடியா அத்தை

எல்லாம் சரி தான் எங்களுக்கு எப்ப பெற பிள்ளை பெத்து  தர போற சீக்கிரம் சொல்லிரு  என்ன என்று அவருக்கு திர்ஸ்டி  கழித்தார்

வெக்கத்தில்  சிவந்தவள் சரி அத்தை  என்றாள்

எல்லாரிடமும் விடை பெற்றவள் யாரும் மாமாகிட்ட  நான் வரேனு  சொல்ல  கூடாது சரியா என்ற கட்டளையோடு கிளம்பி சென்றாள்

9 மணிக்கு அழைப்பு மணி சத்தத்தில் விழித்தான் கார்த்திக் அபர்ணாவும்  வினொத்தும் கிளம்பி சென்றது ஞாபகம் வந்தது

யாரா  இருக்கும் என்ற நினைவொடு கதவை திறந்தவன் திகைத்தான் புன்னகையோடு நின்ற தன்  மனைவியை பார்த்து சத்தியமா அவன் எதிர் பார்க்க வில்லை சந்தோசத்தில் அவனுக்கு பேச்சு வர வில்லை

லட்டு செல்லம் நீங்களா சொல்லவே இல்ல  எப்டி டா  வந்த

ஆனால் அவளும்  அவனை பார்த்து அவள் திகைத்து விழித்தாள் கலைந்த தலையுடனும் சிவந்த கண்களுமாய்  இருந்தான் கார்த்திக்

என்ன  ஆச்சு  மாமா உடம்பு சரி இல்லையா  சொல்லவே  இல்ல

முதல உள்ள வாடி அம்மு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.