(Reading time: 37 - 74 minutes)

ரூம்‌ல  தான் இருக்கா  அண்ணா  உங்களுக்கு காஃபீ எடுத்துட்டு வரவா வினோ  எங்க வரலையா

அவன் ஏதோ ரிபோர்ட் குடுக்கணும்னு  சொன்னான் அப்பு ஒரு மணி நேரத்தில் வந்துருவான் அவன் வந்த உடனே காஃபீ குடு  சேர்ந்து குடிப்போம்

அண்ணா  நைட்க்கு  சாதமும் மிளகு ரசமும் வச்சிரவா

செய் மா ஆனா உன் புருசன் ரசம் னா  கண்ணா உருட்டுவான்  உன் ப்ரன்டும் தான் அவங்களுக்கு பிடிச்சது  ஏதாவது செய் அவளையும் கூப்பிட்டுக்கோ மா ஏதாவது ஹெல்ப் செய்வா

அவ ஹெல்ப் எப்போதும் செய்வா  அண்ணா  வேலைக்கு போகலனா என்ன அண்ணா விட்டுடுங்க  அவ சோகமா இருந்தா நல்லாவே இல்லை  ஆனா உங்ககிட்ட  விசயம் சொல்லலையா இன்னும் ரெண்டு பேருக்கும்  கோபம் போலயா  ஊருக்கு கிளம்பிட்டு  இருக்காங்க மேடம்

என்னது

ஆமா அண்ணா  அவகிட்டயே  கேளுங்க

சரி அப்பு நீ  போ நான் பாத்துக்குறேன்

கோபம் தலைக்கேறியது  திமிர் பிடிச்சவ நானே மனச மாத்திகிட்டு  வந்தால் இவ போறாளாம் அப்ப  நான்  அவளை  தேடுற  மாதிரி அவ என்னை  தேடல கல்யாணம் முன்னாடி சுத்தி சுத்தி வருவா  இப்ப பேசாம இருக்கா  முன்னாடி ஒட்டிடே  அலைவா இப்ப போறாளாம் போகட்டும் தடுக்க கூடாது கோபத்தில் தன்  அறைக்கே சென்று விட்டான் மனம் மட்டும் சோகத்தில் ஆழ்ந்தது

அதே நேரம் கீர்த்தியும் கவலையில் தான் இருந்தாள்  அறையில் நின்று அபர்ணாவும்  கார்த்திக்கும்  பேசியதை கேட்டவள் நான் ஊருக்கு போனா  இந்த மாமாக்கு  கவலை இல்லல அது வரை போகவா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவள் அவன் அவனுடைய அறைக்கு சென்றதும் போக வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டாள்

விட்டுட்டு  போனா தான் சரி படுவாங்க

சிறிது நேரம் கழித்து அவன் அறைக்குள் சென்றவள் மாமா ஊருக்கு போகணும் டிக்கெட்  போடுங்க என்றாள்

சரி பஸ்ஸா   ட்ரேயீனா

பஸ்

சரி போட்டுட்டு சொல்றேன்

மூஞ்ச பாரு எப்படா  போவாணு காத்துட்டு இருக்கான் டான்கீ

ஒரு மணி நேரம் கழித்து வந்தவன் கீர்த்தி 9.30கு டிக்கெட் கிடச்சிவிட்டது   9 மணிக்கு ரெடீயா  இரு பஸ்  ஏத்தி  விடுரேன்  அங்க உன்னை  கூப்பிட  மாமா வருவாங்க

சரி மாமா. இதெல்லாம் ஒழுங்கா  பேசுவான் மூஞ்ச பாரு

எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு சோகத்தோடு  அமர்ந்திருந்தவளின்  அறைக்குள் வந்தான் கார்த்திக்

9 மணி ஆக  போகுது  கிளம்புவோமா

ம்ம்

பாக்  எடுக்க போனவளை  தடுத்தவன் தன்  கைகளில் எடுத்து கொண்டான்

உடனே அதை போட்டு விட்டு அவளை இழுத்து அணைத்தான் அடுத்த நொடி ஒரு வேகத்தோடு  அவள் இதழ்களை சிறை செய்தான்

சந்தோச  கண்ணீருடன் அவன் மூத்தத்தை   ஏற்றுகொண்டாள்  கீர்த்தி மாமா என்னை தேடுராங்க அதுவே அவளுக்கு போதுமானதாக  இருந்தது

அவள் இதழ்களை விட்டவன் அவளை தன்னொடு இறுக்கி கொண்டு உன்னோட வெட்டி பிடிவாதத்துக்காக என்னை விட்டுட்டு கூட ஊருக்கு போவ தான என்றான்

இல்லை மாமா   அது வந்து

பேசாதே  நீ  போய்ட்டு வா இருந்த அடிச்சே  கொண்னுறுவேன் தனியா விட்டுட்டு போற  போடி கிளம்பி வா என்று சொல்லி விட்டு கீழே  வந்தான்

வினோத் உம் வரேன்  என்று சொல்ல அபர்ணா தனியாக இருப்பாள் என்று சொல்லி வேண்டாம் என்று சொல்லி விட்டான் கார்த்திக்

வண்டியில் போகும் போது அவன் முதுகோடு ஒண்டி கொண்டு வந்தவளை நினைத்து பல்லை கடித்தான் இப்படி உருகுறவ  எதுக்கு போனுமாம் நாமளும் கூட போலாமா என்று யோசித்தான் மனசாட்சி காரி துப்பியது பிறகு மாடு போகட்டும் எப்படியும் வந்து தான் ஆவா  ரொம்ப நாள் எல்லாம் தாக்கு  பிடிக்காது ஒரு வாரத்துல வந்துருவா  என்று தேற்றி கொண்டான்

பஸ்ஸில் அவளை ஏற சொன்னவன் கிளம்ப நேரம் இருந்ததால் அவள் அருகில் அமர்ந்தான் அவனையே பார்த்து கொண்டிருந்தவளின்  கைகளை பற்றியவன் ஒழுங்கா சீக்கிரம் வந்துரு டி குட்டி என்னால நீ  இல்லாமல் இருக்க முடியாது நீ  வேலைக்கு எல்லாம்  போக வேண்டாம் உனக்கு சந்தோசமா எது தோணுதோ  அதையே  செய் இனி உன்னை  கட்டாய படுத்த மாட்டேன் சரியா

மாமா...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.