(Reading time: 37 - 74 minutes)

இல்லை கீர்த்தி வச்சிருப்பா  எடுத்துட்டு வரேன்  என்ற படி  அவள் மேலே ஏறுவதுக்கும்  கீர்த்தி கீழ்  இறங்குவதுக்கும்  சரியாக இருந்தது. அவள்  கையில் கூல்ட்ரிங்  இருந்தது.

அபர்ணா நன்றியோடு  கீர்த்தியை பார்த்த படி  அதை வாங்க போனாள்  ஆனால் அவள் கண்களால் சைகை செய்து விட்டு வினோத்திடம்   நீட்டினாள்  இவர்கள் பார்வை பரி மாற்றத்தை அறியாத வினோத் ஆனந்தத்துடன்  வாங்கி குடித்தான்.

சிறிது நேரத்தில் சென்றான் கழிவறைக்கு அதுவும் பல தடவை

நொந்து நூடல்ஸ் ஆகி வந்தவன் இருவரையும் முறைத்தான்

எங்க ரெண்டு பேர் சமையலை கிண்டல் செய்தல்ல  அதான்  ரெண்டே ரெண்டு பேதி  மாத்தரை  போட்டேன் தொப்பை தன்னல  குறைந்து விடும் என்றாள்.

இவங்க ரெண்டு பேர் கிட்டயும்  பார்த்து பேசணும் மாப்பிளை என்ற படி  வந்தான் கார்த்திக்.

தெரியாமல் சாப்பாடை குறை சொல்லிட்டேன் நண்பா அதுக்கு கூல் ட்ரிங்க்ஸ் ல பேதி மாத்திரையை கலந்துட்டாள் டா உன் பொண்டாட்டி இதில் என் தர்ம பத்தினி யும் கூட்டு

விடு டா ரெண்டு பேர் பத்தி நமக்கு தெரியும் தான சரி பேதி நின்னுட்டா இல்லை தொடருதா

நின்னுட்டு டா ரெண்டு கிலோ எடையும் குறைஞ்சிட்டு . கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்தில் இந்த பாடு இனி வாழ் நாள் முழுவதும் என்ன ஆகுமோ

நீயாவது பரவால்ல டா ஆனா என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு குட்டி சாத்தானுக்கு தாலி கட்டி கூட வச்சிருக்கேன் அப்ப அப்ப பீதியா இருக்கு

என்ன மாமா இந்த வீனா போனவன் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க வினோத் ரொம்ப மோசம் மாமா எங்க சாப்பாட்டை நல்லா சாப்டுட்டு குறை சொல்றான் இப்ப என்ன உங்க கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கான்

அது ஒன்னும் இல்லை கீர்த்தி உன்னை பற்றி பெருமையா பேசிட்டு இருக்கேன் என்றான் கார்த்திக்

நல்லா என்னை பத்தி எடுத்து சொல்லுங்க இந்த எருமைக்கு

சரி டா செல்லம் நீங்க போங்க அபர்ணாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க

சரி மாமா

அவள் போன பிறகு கஷ்டம் தான் நண்பா உன் பாடு என்றான் வினோத்

சும்மா இரு டா அவள் காதில் விழுந்தது எனக்கும் பேதி தான் வரும்

ஒரு சனி கிழமை வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தான் கார்த்திக் அபர்ணாவும் வினோத்தும் அவன் ஊருக்கு சென்றிருப்பதால் கீர்த்தி தனியா இருப்பா என்று நினைத்து கொண்டு விரைவில் வீட்டுக்கு வந்தான்

தன்னிடம் உள்ள சாவியை வைத்து திறந்தான் சரியான சோம்பேறி வீட்டுக்கு வந்தால் கதவை திறந்து கொண்டு வரணுமாம் காலிங் பெல் அடிக்க கூடாதாம் சரியான லூசு என்று நினைத்து கொண்டு உள்ளே வந்தான்

வீடே அமைதியாக இருந்தது இது சரி இல்லையே கீர்த்தி இருக்கும் வீடு மாதிரியா இருக்கு டிவி யாவது அலறும் அது கூட அமைதியா இருந்தது சத்தமே இல்லை ஒரு வேலை தூங்குறா போல என்று நினைத்து கொண்டு தன் அறைக்கதவை திறந்தான்

அங்கும் இல்லை அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் இவன் அறையில் மட்டுமே தூங்க வேண்டும் என்று இங்கையும் இல்லை என்றால் கண்டிப்பா அவ ரூம்ல தான் இருப்பா

அங்கு போய்  பார்த்தவன் அங்கு கண்ட காட்சியில் உறைந்தே விட்டான்  அங்கு ஒரு வெள்ளை பூனை குட்டியை கொஞ்சி கொண்டிருந்தாள் கீர்த்தி

ஏய் எரும மாடு என்னது இது என்ன பண்ணி வச்சிருக்க இது எங்க இருந்து கிடைத்தது

பக்கத்து வீட்டு விக்கி குடுத்தான் மாமா அவங்க வீட்டு பூனை குட்டி போட்ருக்குனு சொன்னான் ல அன்னைக்கு அதான் இன்னைக்கு வாங்கிட்டு வந்துட்டேன்

பாவம் டீ அதை அவன் கிட்டயே குடுத்துரு அதை போய் கொடுமை படுத்தாத

அது சமத்தா என் மடில படுத்துருக்கு நான் கொடுமை படுத்துறனா போங்க மாமா

நீ அதை வழக்க முடியாது கீர்த்தி உன்னை கவனிச்சுக்கவே உனக்கு நான் வேணும் இதில் அதை நீ பார்க்க போறியா

அதான் என்ன பார்க்க நீங்க இருக்கீங்கள நான் அதை பார்த்து கொள்வேன் பாருங்க மாமா எவ்வளவு அழகா இருக்கு என்ன பெயர் வைக்க

அவனும் அருகில் அமர்ந்து அதை கொஞ்ச ஆரம்பித்தான்

திடிரென்று கவனம் அவள் மேல் பாய அவன் கைகளும் அது மீறியது மாமா குட்டி இங்க இருக்கு நீங்க என்ன செய்றீங்க

நீ உன் குட்டியை கொஞ்சுவியாம் நான் என் குட்டியை கொஞ்சுறேன்

அதற்கு பப்பு என்று பெயரிட்டாள் அது முதல் பப்புவும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகியது

அப்படியே மூன்று மாதங்கள் கடக்க அபர்ணாவும் கீர்த்தியும் வெட்டியாக பொழுதை கழிப்பதை பார்த்தவன் வினோத்திடம் இதை பற்றி பேசினான்

அபர்ணா எம் இ படிக்க போறாளாம் கார்த்தி வேணும்னா கீர்த்தியையும் சேர்த்துருவோமா

யாரு கீர்த்தியவா நீ வேற ஏன்டா அவ பி இ படிச்சு முடிச்சதே பெரிய விஷயம் நான் நம்ம கம்பெனில சேர சொல்லலாம்ணு யோசிக்கிறேன் ரெண்டையும் கேப்போம் என்ன சொல்றான்னு பாப்போம்

அவளிடம் சொன்ன பொது அவள் மூன்றாவது பதிலை சொன்னாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.