(Reading time: 37 - 74 minutes)

என்ன டா

அப்ப  நான் வேலைக்கு போக வேண்டாமா

எனக்கு உன் சந்தோசம் முக்கியம் கீர்த்தி நீ கவலை  பட்டா  எனக்கும் கவலையா  இருக்கும் நீ  வேலைக்கு போகணும்னு கட்டாயம் இல்லையே பிறகு என்ன

என் மேல கோபம் இல்லையா  மாமா

கோபம் தான்

மாமா 

ஆமா டி என்ன விட்டுட்டு  ஊருக்கு போனா  கோபம் வராதா

ஸாரீ மாமா அவசர பட்டுட்டேன்  வீட்டுக்கு போகலாமா

லூசு டி நீ நான் மாமாக்கு எல்லாம்  சொல்லிட்டேன் அவரு சந்தோச  பட்டாரு உன்னை  மிஸ் பண்ணுவாங்க போல அபர்ணாவும்   காலேஜ் ஸீட் வாங்க வினோத் கூட போய்ருவா உனக்கு போர்  அடிக்கும் போய்ட்டு வா அப்படியே தாத்தாவையும்  அம்மா அப்பாவையும் போய் பாரு சரியா நான் அடுத்த வாரம் வறேன் 

ம்ம் லவ் யூ  மாமா உம்மா

ஏண்டி  மனுசனை ரெண்டு நாள் தவிக்க விட்டுட்டு  இன்னும் ஒரு வாரமும் இருக்கு இப்ப போல உம்மாவா இங்க ஏதும் செய்ய முடியாது என்று சொல்லி அவள் வயிற்றில் கிள்ளினான்

சந்தோசத்தில்  சிரித்தவள் அன்னைக்கு  அழுறேன்  நீங்க திரும்பி படுத்திங்க  கிடங்க தனியாவே அப்ப  தான் கொழுப்பு அடங்கும்

அது தான் உனக்கு கோபமா கீர்த்தி நீ மனசு மாறுவனு நினைச்சு அப்படி விலகுனேன்  நீ வந்துருக்கலாமே  நம்ம ரூம்கு

நினைச்சேன் அப்றம் வேலைக்கு வர சொல்லிட்டா  அதான்  என்று சொல்லி கண்ணடித்தாள் 

ராட்சஸி டீ  நீ சீக்கிரம் ஒரு வாரம் போகணும் அது தாங்குறதே  கஸ்டம் சரி பார்த்து போ போய் போன்   பண்ணு என்ன என்று சொன்னான் பஸ்  கிளம்பியவுடன்  சென்றான் கார்த்திக்

பவித்ரன்  தான்  அவளை  கூப்பிட  வந்தார்

எப்படி  டா  இருக்க

நல்லா  இருக்கேன்  பா   நீ  எப்படி  இருக்க  அம்மா  எப்படி  இருக்காங்க

எங்களுக்கு  என்ன  உன்  தொல்லை   இல்லை  வேற  என்ன  கவலை  ஜாலியா  இருக்கோம்

உனக்கு  வாய்  கொழுப்பு  இன்னும்  அடங்கலை  பா  ஜாலியா  இருக்க  வயச   பாரு

ஏன்   எங்களுக்கென்ன   நாங்க  எப்பவும்  ஜாலியா  தான்  இருப்போம்  கார்த்திக்  தான்  பாவம்  உன்   கொடுமையை  தாங்குறான்

யாரு  உங்க  மருமகனா    என்ன  போகாத  போகாதேனு    ஒரே  கதறல்  ரோடயே  நனச்சிட்டார்  தெரியுமா  அவர்

அப்டியா  நம்புற  மாதிரி  இல்லையே  ஐ  என்   பொண்டாட்டி  ஊருக்கு  போய்ட்டா  னு  ஜனகராஜ்  மாதிரி  குதிச்சிருப்பான்

அப்பா  என்று  பல்லை  கடித்தாள்

விடு  டா  விடு  டா  நமக்குள்ள  இதெல்லாம்  சாதாரணம்  தானே  லேட்டா   போனா  உன்  அம்மா  பேய்  ஓட்டுவா   வா  ஓடிறலாம்

கூட்டிட்டு  வர  இவ்வளவு  நேரமா  எங்க  வாய்  பார்த்துட்டு  நின்னீங்க   அவளை  வெயிட்  பண்ண வச்சீங்களா  என்றார்  பொன்மணி

இல்லையே   மணி  வாய்   பாக்கவே  இல்லை  நீ  வேணா   கீர்த்தியை  கேளு

இல்லை  மா வரவங்க போறவங்க கிட்ட  ஒரே பேச்சு தான் அவங்க சிரிச்சிட்டு  சும்மா போனாலும் இவர் தான் பேசிட்டே இருந்தாரு நான் சொன்னேன் வா பா போலாம்னு இரு மா னு என்ன நீக்க வச்சிட்டு  பேசினார்  மா என்னனு கேளு நான் மாமா கிட்ட  பேசிட்டு வறேன்

பயபுள்ள இப்ப  தான் ரெண்டு பெரும் ஜாலீயா  இருக்கோம்னு  சொன்னேன் வெட்டு  வச்சிட்டு  போகுது பாரு  மணி அவ சும்மா சொல்றா மா என்ன நம்புவ  தான

எது  நீங்க  தம்  அடிச்சிட்டு  அவ  மேல  பழியை   போட்டதை    நம்புனனே   அது  போலவா

வாழ்க்கையில்  ஏன்டா  அன்னைக்கு  தம்மை    தொட்டோம்னு  ஆகி  விட்டது  அவருக்கு   ஒரு  வழியாய்    சமாளித்தார்

அறைக்கு  சென்றவள்  அவனை  அழைத்தாள்

மாமா

ஏய்   செல்ல  குட்டி  வீட்டுக்கு  போய்டியா

இப்ப  தான்  வந்தோம்  மாமா  நீங்க  என்ன  செய்றீங்க அண்ணா  அப்பு  எல்லாம்  எங்க

அவங்க  காலேஜ்  விசாரிக்க  போயிருக்காங்க  மா   நான்  இப்ப  தான்  கிளம்பிட்டு   இருக்கேன்

சாப்பிட்டீங்களா

சாப்பிட்டேன்  மா  அப்பு  தோசை  சுட்டு  தந்தா

சரி  மாமா  பாத்து  போங்க  நைட்   பேசுங்க  சரியா

நைட் பேச தான் முடியும் வேற என்ன செய்றது

போங்க மாமா

சரி டா  மாமா கிட்ட சண்ட  போடாம அத்தைய  கோப படுத்தாம  சமத்தா இருக்கணும் சரியா

ரெண்டு பேருக்கும்  சண்ட  மூட்டி  விட்டுட்டு தான் வந்துருக்கேன் கீழ போறதுக்குள்ள சரி ஆகிருவாங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.