(Reading time: 37 - 74 minutes)

சண்ட  இல்லை  தாத்தா இப்ப சரி ஆகிட்டு   ஆனா குழப்பம்

என்ன மா

மாமா படிக்க சொல்றாரு இல்லைனா  வேலைக்கு போனு சொல்றாரு  நான் போக மாட்டேனு  சொன்னேன்  அதான் மாமாக்கு  கோபம்

தெளிவா சொல்லு கீர்த்தி

அப்பு படிக்க போறா  தாத்தா நானும் ஏதாவது செய்யணுமாம் அவ சாப்பாடு செஞ்சு வைக்கிறத நீ சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க போறியானு மாமா கேக்காங்க  கஸ்டமா போக்சு  தாத்தா

ஆமா அதை  தான நீ  செய்ய  போற உனக்கு ஏன்  கஸ்டம் வரணும்

என்ன தாத்தா நீயும் இப்படியே சொல்ற போ

வாழ்க்கையில்  அப்படியே நின்று விட  கூடாது கீர்த்தி தண்ணி ஓடாமல் நின்னதுன்னா   அது சாக்கடையா மாறி விடும்  மா நதி மாதிரி அடுத்து அடுததுனு போய்ட்டே இருக்கணும் இப்ப என் வயசு வந்துட்டு னு வச்சிக்கோ  அது வர நடந்த விசயங்களை அசை  போடணும் நீ  இப்பவே இப்படி இருக்கலாமா

எனக்கே தெரியுது தாத்தா ஆனா என்ன செய்ய தெரில அவங்க சொல்ற படி  படிக்வோ வேலை பாக்கவோ  பிடிக்கலை  தாத்தா அவள் சமையல்செய்றது  கஸ்டமா தான் இருக்கு நானும் ஹெல்ப் செய்றேன் தான் ஆனாலும் நான் கத்துகுறேன்  தாத்தா அத்தைகிட்ட கேட்டு இருக்கேன் கத்து தருவாங்க

சரி சமையல் கத்து  கிட்டு சமையல் வேலை செய்ரியா

என்ன தாத்தா நீ குக் மாதிரி நான் எப்படி ஆக  முடியும் அவ ஒரு நாள் செஞ்சா  நான் ஒரு நாள் செய்யலாம்  அது மட்டும் இல்லாம  அவ படிக்க போறா  நான் சமையல் செஞ்சா  அவளுக்கு ஹெல்பா  இருக்கும்

அவளுக்கு ஹெல்பா  இருக்கும் உனக்கு என்ன ஹெல்ப் அதுல

தாத்தா

நீ எடுத்துருக்குறதது நல்ல  முடிவு தான் அது மட்டுமே நல்லது   இல்ல மா ஒரு நாளுக்கு மூணு மணி நேரம் சமைக்க வசிக்கிட்டாலும் மிச்ச  இருக்க 8 மணி நேரத்தை என்ன செய்ய போற

.....

அவ  சமைச்சி  நீ  சாப்பிட்டு  தூங்குறனு   உன்  மாமா  சொன்னது  கஷ்டமா  இருக்குன்னா   அப்ப  நீ  சமைச்சு  சாப்பிட்டு  தூங்குன்னு   சொன்னா   கஷ்டம்  போயிருமா   கீர்த்தி கார்த்திக்  சொன்னது அவள் செய்து வைத்த சாப்பாட்டை  நீ சாப்பிடுவது இல்லை அபர்ணா வும்  அப்படி நினைக்க மாட்டாள் கார்த்திக்  சொல்ல வந்தது உன்னுடைய திறமையை வெளியே கொண்டு வருவதை பற்றி அவன் உன்னை அதிகமாக நேசிக்கிறான் கீர்த்தி அது அவன் செயலில் எனக்கு முன்னாடியே தெரியும் அப்படி உன்னை உயிராய்  நினைப்பவன் உன்னை எப்படி தேங்கிய நீராய் இருக்க விடுவான்  நீ ஏதாவது சாதிக்கணும்னு  நினைக்கிறான்

தாத்தா..

என்ன மா

எனக்கு அழுகையா வருது  தாத்தா

லூசு இப்ப ஏன்  அழுகை உனக்கு

நான் என்ன செய்யனே எனக்கு தெரியலையே  எது பிடிக்கும் னு தெரில என்ன செய்ய மாமா ஒரு விசயம் சொல்லி அதை என்னால் கேக்க முடியலை வருத்தமா  இருக்கு

தன்  முன் இன்னும் குழந்தையாகவே சிணுங்கும்  பேத்தியை  பார்த்தவர் சிரித்தார்

இப்படி கவலை படுவதுக்காகவா  இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன் இருவரும் என் கண் முன்னே  சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா  நீ தான் அதுக்கு உதவி செய்யணும்  என்று மனத்துக்குள் வேண்டினார்

உனக்கு பிடிச்ச வேலையை நான் சொல்லவா

ஆர்வத்துடன் அவரை பார்த்தவள் என்னது  தாத்தா என்றாள்

உன் மாமா

கிண்டல் பண்ணாத  தாத்தா

கிண்டல் பண்ணல  உண்மையா பொய்யா

அது உண்மை தான் ஆனா இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்

இருக்கு

என்ன  தாத்தா சொல்ற எனக்கு புரியலை

நீ உன் மாமா மேல் வைத்திருக்கும் காதல் தான் உனக்கு வேலை என்ன புரியலையா....

கீர்த்தி நீ வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கணும்னு எந்த  அவசியம் இல்லை இது தான் கார்த்திக் எண்ணமும்

அப்ப  ஏன் ரெண்டு பெரும் வேலை  செய்ய  சொல்றீங்களாம்

அவசர குடுக்கை  சொல்றதை  கேளு

ஈ  சொல்லு

ஆனா  உனக்கு  னு  ஒரு  டேலேண்ட்   இருக்கே  அதை  உலகத்துக்கே  காட்டாமல்  இருந்தாலும்  சில  பேருக்காவது  காட்டலாமே. உன்  மாமனை  பத்தி  கதை எழுதுற  அவனை  பத்தி   கவிதையா  எழுதுற  அத  புக்கா  போடலாமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.