(Reading time: 37 - 74 minutes)

அவளும் எதுவும் பேச வில்லை அவனை பார்ப்பதும் பப்புவை  தடவுவதுமாக இருந்தாள்  அதுக்கு மேல் மௌனம் தாங்காமல் அவள் முகத்தை பார்த்தான் படிச்சிட்டு சும்மா இருக்க கூடாது கீர்த்தி நீ   வேலைக்கு  வர நான் நாளைக்கே பேசுறேன்

சொன்னவுடன் அவள் முகம் அழுகையில்  துடித்தது உருகியே விட்டான் இங்க வா என்று அருகில் அழைத்தான் ஓடியே போய் அவன் நெஞ்சில்  சாய்ந்தாள் இவ்வளவு தானா  டா  உன் கண்ட்ரோல்  என்று சிரித்தது மனசாட்சி

என் செல்லம் அழுறா  இதுல கண்ட்ரோலா   போடா

உனக்கு . வெக்கமே   இல்ல டா

பொண்டாடிகிட்ட வெக்கம்  பாத்தா   வேலைக்கு ஆகாது நீ  போ ஐ  அம்  பிஸீ  என்று அதை அனுப்பினான்

என்ன  ஆச்சு  கீர்த்தி ஏன்  அலற அழாத குட்டி மா. பப்பு  இருவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தது

நான் வேலைக்கு போக மாட்டேன் மாமா எனக்கு பிடிக்கலை

கீர்த்தி அதுல உனக்கு என்ன பிரச்னை நாலு வருசம் படிச்சத்தை வீணாக்க போறியா

அங்க ப்ரோக்ராமிலாம் எழுதணும் எனக்கு வராது

அதெல்லாம் பழகிகலாம் மா

மாட்டேன் போக மாட்டேன் என் வேலை வேற யாருக்காவது கிடைக்கட்டும்

நல்ல எண்ணம் என்று பல்லை கடித்தான்

சரி அப்றம் என்ன  தான் செய்ய போற அவன் குரலில் எரிச்சல் வந்தது. தின்னுட்டு  தின்னுட்டு தூங்க போறியா

திங்காம   வேணா  இருக்கேன் ஆனா வேலைக்கு வேண்டாம்

அவள் பதிலில் அவனது எரிச்சல் மறைந்தது யாரு நீ திங்காம இருப்பியா  நடக்குற காரியமா

கிண்டல் பண்ணாதீங்க  மாமா

கிண்டல் இல்ல கீர்த்தி வாழ்க்கை முக்கியம் சும்மா பொறந்தோம் இறந்தோம்னு  இல்லாம ஏதாவது செய்யணும்  எல்லாருமே ஏதாவது செஞ்சிக்கிட்டு

 தான் இருக்காங்க சில பேர் பெரிய  ஆளா  உலகம் அறியும் படி  வாழ்றாங்க  சில பேர் அவங்களுக்கு தகுந்த மாதிரி ஏதாவது செய்றாங்க

உன்னை கட்டாய படுத்தல வேலைக்கு போகணும்னு ஆனா உனக்கு பிடித்தது  எதையாவது செய் டா  வேற ஏதாவது செய்யணும்னு உனக்கு தோணுதா

இல்லை

அப்ப  வேலைக்கு நீ  வர என்று சொல்லி விட்டு திரும்பி படுத்து விட்டான்

 முகத்தில் அடித்த  மாதிரி அவன் விலகல் அவளை பாதித்தது கண்களில் குளம்  கட்டியது கோபத்துடன் எழுந்து அவள் அறைக்குள் சென்று விட்டாள்

அவள் போவதை பார்த்தவன் சிரித்து  கொண்டான் மேடம்  கோபமா இருக்காங்களாம்  எத்தனை  நாளைக்கு பேசாம இருக்கேன் பாக்குரேன் டி இந்த முறை என் வழிக்கு வந்தே ஆகணும் என்று நினைத்து கொண்டான்

தன்  அறைக்குள் வந்தவள் என்ன யோசித்தும் இதில் இருந்து தப்புவததுக்கு வழி தெரிய வில்லை.

அவள் என்ன அறிவை வசிக்கிட்டா  வஞ்சனை செய்றாள் நாலு வருசமும் அவன் படிக்கிறானே அதனால் அதை எடுத்து படித்தாள் இல்லாவிட்டால் அதை காரணம் காட்டி அவன் விலகி விடுவானே என்று பயந்து

ஒவ்வொரு வருசமும் போனது அவளுக்கு தானே தெரியும் லேப் பில் இந்த வாரம் புள்லா  எப்படி தப்பிக்க என்று போன வாரமே  யோசிப்பவள்  அவளை போய் அதே வேலைக்கு போக சொன்னால்  எப்படி முடியும் ரெண்டு லைன்  தவற எதுவும் வராது

அதே படிப்பை படிக்க சொன்னாலும் எப்படி முடியும் மண்டை காஞ்சது தான் மிச்சம்

நான் அழுறேன்  நீ திரும்பி படுக்க நான் வேலைக்கும் வர மாட்டேன் உன் கிட்ட  பேசவும் மாட்டேன் என்று முறுக்கி கொண்டாள் எல்லாரிடமும் பேசுபவள் அவனிடம் மட்டும் பேசாமல் தவிர்த்தாள்

அவனின் அருகாமைக்கு  ஏங்கும்  மனது ஆனால் கீர்த்தி போகாத அப்றம் வேலைக்கு கூப்பிடுவான்  என்று ஞாபகம் வந்தவுடன் தன்னை மாற்றி  கொள்வாள்

அவன் அதுக்கு மேல் தவித்து தான் போனான் ஒவ்வொரு செல்லும் அவள் வேண்டும் என்று கேக்க,  போய் பேசினால்  அவள் சும்மாவே இருப்பாள் என்று நினைத்து கொண்டு இருந்தான் ஆனால் தன்னை கட்டு  படுத்துவது தான்  அவனுக்கு முடிய  வில்லை

தினமும் அவளின் வாசனையை, அவளை நுகர்ந்தவன் அவளுக்காக ஏங்கினான். அவளின் சிரிப்புக்காக அந்த வீட்டின் கலகலப்புக்காக  ஆசை பட்டான் அவள் அழுது வடியும் முகம் பாக்க  சகிக்க வில்லை

இருந்து இருந்து பார்த்தான் ரெண்டு நாள் முடியாமல் இவள் வேலைக்கே போக வேண்டாம் சந்தோசமா சிரிச்சுட்டே இருந்தா போதும்  இவ்வளவு தானா உன் கண்ட்ரோல் என்று மனசாட்சி காரி துப்பிய போதும் அதை அடக்கிவிட்டு வேலை முடிந்து வந்ததும் அவளை தேடி சென்றான்

எதிரே வந்த அபர்ணாவிடம்  எங்க அந்த லூசு என்று கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.