(Reading time: 15 - 30 minutes)

ஏதோ பெரிய உண்மை மறைந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான் கார்த்திக். ஆனாலும் இது வரை தன்னுடன் இருந்தது தன்னுடைய  பெற்றோர்கள் இல்லையா என்ற வலி  வந்தது மனதில் . அவனுக்கு சிறிது தனிமை தேவை பட்டது.

இங்க பாரு கார்த்திக் நாங்கள் தான் உன்னுடைய பெற்றோர்கள் அவர்கள் உன்னை எங்களிடம் இருந்து பிரித்து சென்று விட்டார்கள் அதனால் தான் உன்னிடம் உண்மையை கூட சொல்ல வில்லை. அவர்களை வேண்டும் என்றாலும் கேட்டுக்கொள். இனி இது தான் உன் வீடு. இங்கே உள்ள  அத்தனை கோடி கணக்கான சொத்துக்கும் ஒரே வாரிசு. என்றார் சேதுராம்

எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்  நான் மேலே போறேன் சிறிது நேரம் கழித்து உங்களிடம் பேசுகிறேன் என்று எழுந்து கொண்டான்.

இரண்டு அடி எடுத்து வைத்தவன் கீர்த்தி அங்கேயே அமர்ந்திருக்கவும் கீர்த்தி வா என்று அழைத்தான். அப்போது மணி கார்த்திக் என்று அழைத்தார்.

என்ன சார்  என்றான்.

மாமா என்று சொல்ல கூடாதா  பா

எனக்கு கீர்த்தியின் அப்பா மட்டும் தான் மாமா.

அவன் மகளை கல்யாணம் செய்ததால் அவன் மாமனா  இருக்கலாம் ஆனால் நான் தான் உன் தாய்மாமன்.

அதை என் தாய் சொல்லட்டும் கேட்டு கொள்கிறேன்

நான் தான் சொல்கிறேனே நான் தான் உன் அம்மா இவர் தான் உன் மாமா என்றார் விமலா.பக்கத்தில் மங்களம் அமைதியாக இருந்தார் நேற்று வாங்கிய திட்டை  மறுபடியும் அவர் வாங்க விரும்ப வில்லை

அமைதியாக நின்றான். சரி உனக்கு புதுசா இருக்கும் கொஞ்ச நாளில் எங்களை உன் சொந்தமாக எண்ணி விடுவாய். நான் இப்போது சொல்ல வந்தது இந்த கோடிக்கணக்கான சொத்துக்கு நீ மட்டும் தான் பா வாரிசு. இங்க இருக்குற  மில்  கம்பனி  எல்லாத்தையும் உன் அப்பா க்கு  பிறகு நீ தான் பார்த்து கொள்ளனும்

அப்போது கார்த்திக்கு ஒன்று மட்டும் புரிந்தது சொத்தை காட்டி வளைக்க பார்க்கிறார்கள். யாருமே  பாசத்துக்கு உருக வில்லை    பெற்ற அன்னை   என்று சொல்லும் விமலா  கூட சொத்தை  குறிப்பு காட்டுகிறாள்

அவரை பார்த்து ஒரு விரக்தியான சிரிப்பை உதிர்த்தவன் கீர்த்தியை கண்ணால் வரும்படி சொல்லி விட்டு ரூம்கு சென்றான். உள்ளே வந்தவன் அவள் அமர்ந்தவுடன் அவள் மடியில் படுத்து கொண்டான்

அவன்  அழுவது கீர்த்திக்கு புரிந்தது. அவளும் துடித்து தான் போனாள்  தன்னவனின் கண்ணீர்  கண்டு மென்மையாக அவன் தலையை கோதி கொடுத்தவள் கண்களிலும் கண்ணீர்.

சிறிது நேரம் அழுதவன்  கொஞ்சம் தெளிந்தான் கண்களில் மட்டும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் ஆழ  விட்டவள்  அடுத்து அவனை சமாதான படுத்தினாள்.நீங்கள் அழுதால்  எனக்கு அழுகையா வருது மாமா அழாதீங்க  ப்ளிஸ். நடந்தது முடிந்து விட்டது அடுத்து என்ன  செய்ய  அதை மட்டும் யோசியுங்கள்

உனக்கு முன்னாடியே உண்மை தெரியுமா கீர்த்தி.

இல்லை இங்கு வரும் போது தான் தாத்தா என்னை கூப்பிட்டு சொன்னார்.

ஏன் கீர்த்தி எனக்கு நீ சொல்ல வில்லை

எப்படி மாமா சொல்லுவேன் உங்களை என்னால் அழவைகக முடியுமா இந்த உண்மை உங்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம் 

இல்லை கீர்த்தி எனக்கும் உண்மையை சொல்லி விடு. இவர்கள் தான் என்னை பெற்றுவர்கள் என்றால்  அவர்களிடம் நான் எப்படி சென்றேன்.

எனக்கு தெரிந்ததை  சொல்கிறேன் மாமா. அத்தை  ரொம்ப பாவ பட்ட பிறவி மாமா. சிறு வயதில் இருந்தே இங்கு இருக்கிறார்களே இந்த விமலா  ஆன்டீ யும்  மணி அங்கிளும்  அத்தையை மதிக்கவே மாட்டார்களாம். அவர்கள் இருவருமே  பணத்தாசை பிடித்தவர்கள் அத்தை  ரொம்ப சாது.அதனால் அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அத்தையை மாட்டி  விட்டுவிட்டு அடி வாங்க வைப்பார்களாம்.

விமலா  ஆன்டீயும்   அத்தையும்  ரெட்டை  பிறவிகள் போல அதனால் இருவருக்கும் ஒரே உடை ஒரே பள்ளி எல்லாமே  சமமாக  கிடைத்திருக்கிறது. அத்தை  கிட்ட இருந்து எல்லாத்தையும் இந்த ஆன்டீ  வாங்கிக்குவாங்களாம்  அத்தை  பாவம் விட்டு கொடுத்துருவாங்களாம்

மணி அங்கிள்  கல்லூரி கடைசி வருடம் படிக்கும் போது அத்தையும் விமலா  ஆன்டீயும்  அதே கல்லூரியில்  படிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மணி அங்கிள் ஹாஸ்டல். இவர்களையும் எதுக்கு ஹாஸ்டலில் தங்க வைக்க வேண்டும்  என்று நினைத்து கல்லூரி  அருகில் ஒரு வீடு பார்த்து அங்கே அக்கா தங்கை அண்ணன்  மூவரையும் தங்க வைத்து விட்டார்கள்.

அப்போது சேதுராம்,  இப்போது இருக்கிறாரே அவர் தான் அவருடைய பணத்தில் மயங்கி கடைசியில் அவரிடமே மயங்கி விமலா  ஆன்டீ  கல்யாணத்துக்கு முன்னாடியே கரு உண்டாகி விட்டார்கள் போல.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.