(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 09 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

நான் காலேஜ் கடைசி வருடம்  படிக்கும் போது எப்பவும் போல சனி ஞாயிறு நம்ம வீட்டுக்கு நீ வந்த. உனக்கு ஞாபகம் இருக்கா  அத்தை  மாமாக்கு  அந்த வாரம் கல்யாண நாள்

ஆமா அன்னைக்கு நல்லா  ஞாபகம் இருக்கு சேலை கட்டு  கோயிலுக்கு  போவோம்னு எங்க அம்மா என்னை ஒரு வழி செய்த நாள். நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்  படிக்கேணாம்   இன்னும் புடவை கட்ட  தெரியலனு  திட்டி மண்டையில்   நாலு கொட்டி கட்டி விட்டாங்க. அன்னைக்கு  கூட ஸேரி  கட்டி கீழ விழுந்தேன்ல கோயிலில் நீங்க  தான மாமா தூக்கி விட்டீங்க  ஆனா அன்னைக்கும்  திட்ட  தான செஞ்சீங்க.

ஆமா கீர்த்தி திட்ட  தான் செஞ்சேன் ஆனா ஏன்னு தெரியுமா அதுக்கு முன்னாடி  என்ன நடந்தது தெரியுமா.

சொன்னால்  தானே  தெரியும்.

அதை அன்னைக்கு  காலைல வந்து தொலை.  கட்டி விடுரேன் எருமை மாடு மாதிரி  வலந்துருக்க  திங்க தான் நீ லாய்க்கு னு உன்னை திட்டி ரூம்கு கூட்டிட்டு போனங்கல

ஆனா என்னை திட்டின எல்லா வார்த்தையும் மட்டும் உங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கும் மாமா நீங்க இருக்கீங்களே ஆமாம் அப்புறம்  என்ன நடந்தது

அன்னைக்கு  நீயும்  அத்தையும்  போய்ட்டு கீழ வர ரொம்ப நேரம் ஆனது  அப்போது  அம்மா உங்களை  கூட்டிட்டு வர சொன்னாங்க. சரினு ரூம்கு  வந்தேன்  அங்க அங்க

அங்க என்ன  மாமா

ஒரு ஆள் வயிறு தெரியுற மாதிரி  ஜாக்கெட் போட்டுட்டு நின்னாங்க. சேலை கட்டி விட்டுட்டு  பக்கத்துலஅத்தை நின்னாங்க  அப்ப  பார்த்தேன் பாரு ஐயோ அன்னைக்கே நான் மயங்கிட்டேன் .

மாமா என்ற வார்த்தையோடு  அவன் நெஞ்சில் முகத்தை மறைத்து கொண்டாள் கீர்த்தி. அவன் பார்த்த கோலம் அறிந்து வெக்கம்  வந்தது அவளுக்கு.

கீர்த்தி என்னை  பாரேன் இப்ப என் முகத்தை மறைச்சிவச்சிருக்க. நீ தான கேட்ட அதான்  சொன்னேன். என்னை மறந்து எவ்வளவு  நேரம் பாத்துட்டு நின்னேனு  எனக்கே தெரியல.பட் செம  ஸீன்  இல்லை

ச்சு போங்க மாமா

சிணுங்காதடி அப்றம் நான் பொறுப்பு  இல்லை

எதுக்காம்

இல்லை  வினோத் கிட்ட எல்லாம் படிப்பு  முடிஞ்ச  பிறகு தான் அவ ஒரு பேபீனு  சொல்லி வச்சிருக்கேன் நீ இப்படி எல்லாம் சிணுங்குணா அப்றம் நமக்கே பேபீ  வந்தா  நான் பொறுப்பு இல்லை எங்க அம்மாவே என் தோலை  உரிச்சிறுவாங்க

மாமா எனக்கு ஒரு டௌட்

எவ்வளவு ரொமன்டிக்கா  பேசிட்டு இருக்கேன் இப்ப உனக்கு டௌட் வருது நீயெல்லாம்..... கேட்டு தொலை டீ லூசு

இல்லை இன்னும் ரெண்டு வருசத்தில் படிப்பு  முடிஞ்சிரும் அதுகுள்ள  பேபீ  பெரிய பொண்ணா  மாறிறுவேணா

இதுல மட்டும் தெளிவா இருடி ராட்சஸி கடைசி வரைக்கும் என்ன சாமியாரா வச்சிருக்ககணும்னு ப்ளான் பண்ற  ஆனால் கீர்த்தி எனக்கு ஒரு டௌட் அதான்  அன்னைக்கே பார்த்தேனே சின்ன பொண்ணு மாதிரி தெரியலையே எவ்வளவு பெருசா ..... சட் என்று அவன் வாயை பொத்தினாள்

ஏன்  டீ  வாயை மூடுற  எவ்வளவு  பெருசா வழந்து இருக்கனு  சொல்ல  வந்தேன் என்று சொல்லி கண் அடித்தான்.

அவன் குறும்பு புரிந்தாலும் பேச்சை மாற்றினாள் கீர்த்தி. சரி இன்னொரு தடவை எப்ப மாமா ஸைட் அடீச்சீங்க

ரெண்டு தடவை னு இல்லை கீர்த்தி அடிக்கடி நடந்துருக்கு. ஆனால் அன்னைக்கு  தான் முதல் தடவை அந்த காட்சியே கண்ணுக்குள்  வந்தது  அதான்  அன்னைக்கு  விழும் போது உன்கிட்ட இருந்து விலக அப்படி திட்டினேன்  பார்த்து  வர கூடாதானு. அதுக்கப்புறம் இன்னும் உன்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சேன்

அப்றம் என் ரூம்கு வந்து வம்பு இழுத்துடே  கூடவே இருப்ப எப்பவாவது  அந்த காட்சி ஞாபகம் வந்து ஏதாவது தோணும் அதான்  ரூமை  விட்டு  விரட்டுவேன்.

அதுவும் அன்னைக்கு  நைட் குடுத்தியெ நெஞ்சில்  ஒரு கிஸ் அதான்  அன்னைக்கு  எனக்கே தெரியாம அப்படி நடந்துது ஆனா உன்னை  விரும்புறேன்னு  சொல்லாமல்  அது தப்பா பட்டது  அதான்.

நீங்க ரொம்ப மோசம் மாமா

பசங்க இப்படி யோசிக்கலனா  அது ஹார்மோன்  ப்ராப்ளம்  டீ  லூசு. ஆனால்  அன்னைக்கு  அந்த பையன் உன்னை விரும்புறானு  சொன்னப்ப தான் உன்னை  எப்படி விட்டு கொடுக்க முடியும்னு தோணுச்சு. அது கல்யாணம் முடிஞ்சதால  வந்த உரிமையானு யோசிச்சேன். இல்லை நமக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தாலும்  உன்னை யாராவது பார்த்திருந்தால் என்னால தாங்கி இருக்க முடியாது அதான்  உண்மை

பொய்  சொல்லாதீங்க  அதான்  சார்   வெளிநாடு போக பறந்தீங்களே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.