(Reading time: 8 - 16 minutes)

வெளிநாடு போக தான் பறந்தேன் கீர்த்தி வேற ஒருத்திய கல்யாணம் பண்ண யோசிச்சதே இல்லை

மாமா..

ஆமா டீ  அது ஒரு ஆசை  வானத்தை  பார்த்து ஃப்லைட் போகுதுனு சொல்லுவோம்  சின்ன வயசுல அதுல நாமளும் போகணும் னு ஒரு கனவு.

அங்க உள்ள ப்லேஸ் எல்லாம் சுத்தி பாக்ணும்னு ஆசை அங்க ஜாப் கிடைச்சா நல்லா  இருக்கும்னு தோணுச்சு உங்க எல்லாரையும் அங்க கூட்டிட்டு போய் சுத்தி காட்டணும். அதான் ஆனால் கல்யாணம்னு நான் யோசிச்சத்து இல்லை. தாத்தா கிளம்பி வா னு சொல்லி  கல்யாணம்னு சொன்னப்ப  இன்னும் பாரின் போகலையேனு தான் தோணுச்சு ஆனா இவளா  பொண்ணு னு லாம் தோணவே இல்லை  கீர்த்தி

மாமா...

ஆமா கீர்த்தி ஐ  லவ் யூ சோ மச்.

....

ஏண்டி  லவ் லவ்னு  சுத்தி சுத்தி வருவ இன்னைக்கு  நான் சொன்னால்  இப்படி அழுற. என்ன டீ  ஆச்சு அந்த அளவுக்கு கேவலமா வா இருக்கு என் ப்ரபோஸல்

போங்க நான் சந்தோசத்தில் அழுதேன்.

எம்மா தாயே எதுநாளும் சொல்லிவிட்டு  செய் டக்குனு  பீதியாகிட்டு. உனக்கு என்னை  பிடிச்சிருக்கா கீர்த்தி

ம்ம்ம்

ம்ம்ம் னா  பிடிச்சிருக்குனு வார்த்தையால  சொல்லு  லூசு

பிடிச்சிருக்கு ஆனா

என்ன  ஆனா

ஒண்ணு தான் பிடிக்கவில்லை

என்னது

நீங்க கை வச்சிருக்குறதது.அவன் கைகள் அவள் வயிற்றில் பதிந்து இரவு உடையை தாண்டி வெற்றிடையை தொட போராடி கொண்டு இருந்தது.

அவள் பதிலில் சிரித்தவன் பிடிக்கவில்லையா  உனக்கு

ம்ம்ம்

அப்படியா நம்பிட்டோம்

நம்பலைனா  போங்க நான் போய் படிக்க போறேன்

யாரு நீ தானே  நல்லா  படிப்ப  சுத்தி பண்டம்  ஒரே ஒரு புக் ஆனால்  அதுவும் தலை வச்சு படுக்க. ஃபர்ஸ்ட் க்லாஸ்ல பாஸ் பண்ண  வேண்டாம்  அரியர்  இல்லாமல்  பாஸ் பண்ணிவிடுவாய்  தானே.

அப்படி பாஸ் பண்ணனும்னா  நீங்க டீயூசன்  எடுங்க அதுக்கு தானே  நீங்க  படிச்சதே நானும் எடுத்தேன்.

வேணாம் கீர்த்தி நான் உனக்கு டீயூசன் எடுத்தால்  வேற மாதிரி போய்ரும்.

வேற மாதிரினா

இதோ இப்படி தான் என்று சொல்லி முத்த மிட்டான். அவன் தோள்களில் தன்  கைகளை மாலையாக்கினாள் கீர்த்தி. அவளின் வயிற்றொடு சேர்த்து இறுக்கினான் கார்த்திக். விலகிய பின் வெக்கத்துடன்  மடியில் இருந்து எழ போனவளை  பிடித்து இன்னும்ஒரே ஒரு கிஸ் என்று சொல்லி  பல தடவை நினைத்ததை முடித்த பின்பு தான் விட்டான் அதுவும் சீக்கிரம் ரெண்டு வருச படிப்பை முடிச்சிருடி மாமா பாவம் என்ற கட்டளையோடு ஏதோ அவள் நாள்களை நொடியில் ஓட விடுவாள் என்று நினைத்து

தன் பின் வந்த நாள்கள் இவர்களுக்கு காதலை அதிக படுத்தியது. நடந்த ரீசப்சன்  கூட நல்ல  படியாக முடிந்தது.  அவனை ஸைட் அடித்த  பொண்ணை  முறைக்காமல் இருக்க  மட்டும் அவளால் முடிய வில்லை. அவள் அழகில் சிறு பொறாமையும்  சேர்ந்து வர தான் செய்தது.

தனியே மாட்டியவனிடம்  கேக்கவும் செய்தாள் என்னை  விட அழகா  இருக்கா  அவளை ஏன் உங்களுக்கு பிடிக்கலை மாமா.

எனக்கு எப்பவுமே நீ  மட்டும் தான் அழகு கீர்த்தி குட்டி. எல்லாரையும் ஸைட் அடிக்கலாம் ஆனால் உண்மையான கணவனுக்கு அவன் மனைவி மட்டுமே அழகு. ஆனால் எனக்கு மனைவி ஆகும் முன்னாடியே  நீ தான் அழகு என்ன  முளிக்கிர  அங்க பார் அந்த பிங்க் கலர் ஷர்ட்  போட்டு நிக்கானே  அவன் என் கூட படிச்சவன் நாம குடும்ப  ஃபோடோவில் உன்னை  பாத்துட்டு ஸைட் அடிச்சத்துக்கு அன்னைக்கு  கன்னத்தில் ஒண்ணு  வாங்குனான்  வேணும்னா கூப்பிட்டு அவனை கேக்குறியா.

வெவ்வ  வெவ்வ

இப்படி உதட்டை  சுழிக்காத  பிறகு நடப்பதுக்கு  நான் பொறுப்பு இல்லை.

அத்தை  இங்க பாருங்க உங்க பிள்ளை ஏதோ சொல்றாரு.

ஏய்  லூசு ஆள  விடு  அம்மாட்ட மாட்டி  விடாத உன் பக்கத்திலே  வரல போதுமா. ஆனா அன்னைக்கு  நீயே  வந்து குடுத்த மாதிரி குடுத்துரு ஓகே  வா.

போடா  ஃப்ராட் அன்னைக்கு  பிடிக்காத மாதிரியே நின்ன.

அத்தை  உங்க பொண்ணு என்னை  வாடா  போடா  சொல்றா

ஐயோ  வேணாம் அம்மாட சொல்லாதீங்க  நீங்க தான அப்ப  அப்ப  இப்படியே கூப்டுணு கொஞ்சினது. சோ அப்ப  அப்ப  சொல்லுவேன்  போடா.

அப்ப  அப்ப  கூப்ட சொல்லல  உனக்கு என் மேல லவ் அதிகம் ஆகும் போது கூப்டுணு சொன்னேன்.

ஆமா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்

இருக்கே லவ் அதிகம் ஆனதுனா  என்ன ஆகும் நீ  என்னை  வந்து ஒட்டிக்கிட்டே அலைவ அதை சாக்கா  வச்சு உன்னை நான் பிடிச்சுபேன்ல அதான். அப்புறம்  அன்னைக்கு  பிடிக்காத மாதிரி நிக்கல  அனுபவிச்சு  ரசிசிட்டு  நிண்னேன் என்று சொல்லி அவளை சிவக்க வைத்தான்.

இவர்கள் முகத்தை வைத்தே வினோத் அபர்ணா மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே புரிந்து கொண்டனர் இனி சந்தோசமாக வாழ்வார்கள் என்று வினோத் தான் ஓட்டி எடுத்து விட்டான் அப்பு யாரோ ஒரு ஆள் லவ் இல்லவே இல்லனு  சொன்னாங்க அந்த மானஸ்தனை  பார்த்தியா என்று

சுவடுகள் பதியும்....

Episode # 08

Episode # 10

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.