(Reading time: 15 - 29 minutes)

அதை வாங்கி பார்த்தவன் மனம் சந்தோச  பட்டது ஏன்  என்றால்  அவன் மோதிரத்தில்  கீர்த்தி என்றும் அவளுடையதில்  கார்த்திக் என்றும் எழுதி இருந்தது. அம்மா னா  அம்மா தான் என்று அன்னையை கட்டி கொள்ள வேண்டும் போல் இருந்தது. அதற்குள் அவளுடைய பெற்றோரும் தாத்தாவும் அவன் அப்பாவும் அங்கு வந்தனர்.

அனைவர் முன்னிலையில் மறுபடியும் தன்னவளை  மனைவியாக்கி கொண்டான் மோதிரம் அணிவித்து.

மனம் முழுவதும் சந்தோசத்தில்  அவள் விரல்களில் மோதிரத்தை அணிவித்தான்.ஆனால் கீர்த்தனா  முகம் மட்டும் கலக்கத்தை காட்டியது. எதுவோ நடக்க கூடாதது நடக்க  போவது போல் மனம் முழுவதும் பட  படத்தது.

சரி அம்மா நான் போறேன் உங்களுக்காக.

போய்ட்டு வறேனு சொல்லுப்பா என்று சொல்லி கதறி விட்டார் மல்லிகா.

அழாமல் இருங்க  மா எனக்கு கஸ்டமா இருக்கு நான் சீக்கிரம் வந்துருவேன் தெரியாதவங்க வீட்டுல ரொம்ப நாள் இருக்க முடியாது மா. போய் கிளம்புறேன். ரெடீயா இரு  கீர்த்தி என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

ஆனால் கீர்த்தி அடுத்து போய் நின்றதோ தன்  தாத்தாவின் முன்பு. சொல்லுங்க  தாத்தா எனக்கு உண்மை வேணும் என்ன தான் நடக்குது இப்ப நாங்க எங்க போறோம். எனக்கு பயமா இருக்கு தாத்தா. சொல்லிருங்க  மாமா பாவம் எனக்கு அவர் கஸ்ட படுவது தாங்க முடியவில்லை

நானே உன்கிட்ட சொல்லணும்னு தான் மா நினைத்தேன். இங்க வா என்று ஒரு அறைக்குள் கூட்டி  சென்றவர். சில உண்மைகளை  சொன்னார். குழப்பமும் தவிப்புமாக அவரை பார்த்தவள்  கடைசியில் அதிர்ச்சியாக பார்த்தாள்.

இனி எல்லாம் உன் கைல தான் மா இருக்கு. கார்த்தி கூட இருக்க போறது நீ தான் அதுக்கு கூட சோதனை வரலாம் ஆனால் உன் அன்பு மட்டுமே அவனுக்கு ஆறுதல். நேரம் ஆகி விட்டது கிளம்பு என்றார்.

இருவரும் காரில் ஏறியதும்  அவன் பார்வை தன்  அன்னையிடமே இருந்தது. இப்படி கதறி அழுது என்னை எதுக்கு போக சொல்லுகிறார்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் என்ன நினைத்தானோ  உடனே கீழே  இறங்கி அன்னையின் தோளில்  சாய்ந்து கொண்டு அழாத மா  நான் சீக்கிரமே வருவேன் என்று சொல்லி விட்டு சென்றான்.எத்தனை பெரிய ஆறுதலை அவருக்கு கொடுத்திருக்கிறான் என்று அறியாமலே

கீர்த்தியின் பார்வை முழுவதும் தன்னுடைய தகப்பன் முகத்திலேயே இருந்தது. ஆனால் அவருடைய பார்வை கார்த்திக்கின் மேல் தான் இருந்தது. அவர் முகத்தை வைத்தே அறிந்து கொண்டாள் கண்டிப்பா இவர் பிரச்சனையை கிளப்புவார் என்று. தன்  தந்தையை சமாதானம் செய்ய இது உகந்த நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள் தாத்தாவை மட்டும் பார்த்து கண்களை மூடி திறந்தாள்  தான் பார்த்து கொள்வதாய்.

கார் புறப்பட்டது உள்ளே மௌனம் மட்டுமே நிலவியது. டிரைவர்  முன்னிலையில் இருவருக்குமே பேச தோன்றவில்லை. சிறிது நேரம் கழித்து கார்த்திக் தான் டிரைவரிடம்  கேட்டான் எந்த ஊருக்கு அண்ணா  போகிறோம் என்று

நாம போறது தேக்கடி தம்பி  இதை தவற எதுவும் என்னிடம் கேக்காதீங்க ஐய்யா மன்னித்து கொள்ளுங்கள் உங்க கிட்ட நான் எந்த  விவரமும்  சொல்ல கூடாது என்று எனக்கு சொல்லி இருக்காங்க. நான் பேசுறது  தெரிஞ்சாலே என் வேலை போய்விடும்  நான் பிள்ளை குட்டி காரன் மன்னித்து கொள்ளுங்கள்.

அதிகாலை 7  மணி போல் ஒரு பிரமாண்டமான மாளிகைக்கு உள்ளே  வண்டி சென்றது. அங்கு இருந்த பிரமான்டமே  அவர்களுக்குள் கிலியை  ஏற்படுத்தியது.

அரன்மனையின்  வாசலில் மொத்த குடும்பமே நின்றிருந்தது. ஆனால் அதில் ஒருவரையும் யார் என்று தெரிய வில்லை. ஏதோ திக்கு தெரியாத காட்டில்  விட்டது போன்ற தவிப்பு. சட்டென்று கீர்த்தியின்  கைகளை இறுக பற்றி கொண்டான். அவள் கைகளை பற்றியது அவளுக்கு பெருத்த  நிம்மதியை  கொடுத்தது.ஆனால் இது தொடருமா என்ற  சிந்தனையும் தோன்றாமல்  இல்லை. 

இறங்கி நின்ற பின் ஆரத்தி  சுற்ற பட்டது அவனுக்கு மட்டும். அவளை யாரும் ஒரு பொருட்டாகவே எண்ண வில்லை. அவனும் அதை கவனிக்க வில்லை. அருகில் நின்ற பெண்மணியை தான் கவனித்து கொண்டிருந்தான் அச்சு அசல் தான் தாயை போன்றே இருந்தார் அவர்

அவர்களையே தான் பார்த்து கொண்டிருந்தான். உள்ளே வா பா என்று பாசத்தோடு அவன் கைகளை பற்றி அழைத்து கொண்டு போனாள்  அந்த அம்மா. உள்ளே சென்ற உடன் அவனை ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

கீர்த்தி ஒரு ஓரமாக  நின்று அனைத்தையும் கவனிக்கும் ஒரு பார்வையாளராகவே நின்றாள். அவனும் அவளை திரும்பி கூட பார்க்க வில்லை. அவன் மனம் முழுவதும் குழப்பத்தில் தான் இருந்தது.

கார்த்திக் தன்னிடம் காதலை சொல்லி இருக்கா  விட்டால் இந்நேரம் பயத்தில் உறைந்திருப்பாள் தன்னை  விட்டு பிரிந்து விடுவானோ என்று ஆனால் இப்போது தான் அவன் தெளிவா இருக்கானே எத்தனை பேர் என் கண் முன்னாடி இருந்தாலும் எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் நீ மட்டும் தான் அழகு என்று. அந்த தைரியத்தில் மௌனமாய் அங்கு நடப்பதை  வேடிக்கை பார்த்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.