(Reading time: 8 - 16 minutes)

“ஹேய் சாரங்கன் போதும் ஸ்டாப் பண்ணிக்கோ... இதுவரைக்கும் நீ பேசின பேச்சுக்கே நீ ஒழுங்கா வீடு போய் சேருவியான்னு தெரியலை...”,ராஜா சிரித்தபடியே சொல்ல சாரங்கன் அடங்கி உட்கார்ந்தான்.

“மாம்ஸ் இந்த தெரு மூலைல ஒரு பஜ்ஜிக்கடை பார்த்தேன்.... வாசனை இந்த வீடு வர்ற வரைக்கும் அடிச்சுது.... வர்றீங்களா போய் வாங்கிட்டு வரலாம்.....”,ராஜாவை பதில் சொல்லக்கூட விடாமல் கையைப் பிடித்து இழுத்து சென்றான்.

சொல்லு சாரங்கன்... உனக்கு எங்கிட்ட என்ன கேக்கணும்....”

“நீங்க தப்பா நினைக்கலைன்னா எனக்கு சில விஷயங்கள் உங்கக்கிட்ட கேக்கணும்....”

“நீ அவளோட பெஸ்ட்  பிரெண்ட்... உனக்கு என்னைக் கேக்க எல்லா ரைட்ஸும் இருக்கு.... என்ன கேக்கணுமோ கேளு....”

“தேங்க்ஸ் மாம்ஸ்...  உங்களுக்கு பாரதியை பிடிச்சிருக்கா....”

“பிடிக்காமையா நீ கேக்கற கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொன்னேன்....”

“எதுனால உங்களுக்கு அவளைப் பிடிச்சிருக்கு...”

“அவளோட குணம்.... எங்கம்மா யாருன்னு கூட அவளுக்குத் தெரியாது... அவங்களுக்காக அந்தப் பசங்களோட சண்டை போடணும்ன்னு என்ன அவசியம் சொல்லு... நானா இருந்தா அச்சோ பாவம்ன்னு ஒரு நிமிஷம் பார்த்துட்டு அடுத்த நிமிஷம் அங்க இருந்து நகர்ந்திருப்பேன்....  எத்தனை பேர் அவங்க வேலை வெட்டியை விட்டுட்டு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க சொல்லு....”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு மாம்ஸ்... எல்லாரும் அழகைப் பார்த்து காதலிப்பாங்க... நீங்க குணத்தைப் பார்த்து காதலிக்கறேன்னு சொல்றீங்க பாருங்க.... எங்கியோ போயிட்டீங்க.... எனக்கு ஒரே ஒரு உத்தரவாதம் மட்டும் நீங்க கொடுக்கணும்....”

“சொல்லு சாரங்கன்....”

“நீங்க என்னிக்கும் பாரதியை அவளோட இயல்பை தொலைக்காம வச்சிக்கணும்.... பாதகம் எங்க நடக்குதோ அங்க பாரதி இருப்பா, அதை மட்டும் நீங்க தடுத்துடாம இருக்கணும்....”

“கண்டிப்பா என்னால என் பயத்தை விட்டு வரமுடியுமா தெரியலை.... ஆனால் அவளை அந்த பயம் பாதிக்காம பார்த்துக்க முடியும்....”

“தேங்க்ஸ் மாம்ஸ்.... பாரதி உங்களை கண்கலங்காம பார்த்துக்க நான் கேரண்டீ தர்றேன்...”, சாரங்கன் சொல்ல சிரித்தபடியே இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

“எங்கடா பஜ்ஜி...”

“நாங்க போய் சாப்பிட்டு வர்றோம்ன்னுதானே சொன்னேன்.... உனக்கு வாங்கிட்டு வர்றேன்னா சொன்னேன்...”,சாரங்கன் சொல்ல பாரதி அவனை முறைத்தாள்.

“பாரதி சொல்லும்மா நாங்க எப்போ உங்க வீட்டுல வந்து பேசட்டும்.....”

“அச்சோ அதுக்குள்ளயா... ஆன்ட்டி இன்னிக்குதானே லவ் சொல்லி இருக்கோம்.. கொஞ்ச நாள் இதை அனுபவிக்கறோமே....”

“ஏம்மா, கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணுங்களேன்... யாரானும் தடுக்க போறோமா என்ன...”

“இல்லை ஆன்ட்டி... இப்போ எடுத்திருக்கற கேஸ் ரெண்டும் ரொம்ப முக்கியமான கேஸ்... என்னோட முழு கவனமும் அதுலதான் இருக்கும்.... கண்டிப்பா ஒரு ஆறுலேர்ந்து எட்டு மாசத்துக்குள்ள அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துடுவோம்.... அதுக்கு பிறகு நீங்க எங்க வீட்டுல வந்து பேசுங்க...”

“சரிம்மா நீ எப்ப சொல்றயோ அப்போவே வந்து பேசறோம்....”

“என்ன ஆன்ட்டி நீங்க... உங்களுக்கு மாமியார் ரோல் perform பண்ணவே வரலை... இப்படியா படார்ன்னு ஒத்துப்பீங்க.... அது என்ன நீ முடிவு பண்றது.... நாங்க நாளைக்கே வந்து பேசுவோம்ன்னு தடாலடியா சொல்ல வேண்டாம்... உங்களுக்கு இன்னும் நிறைய ப்ராக்டிஸ் தேவைப்படுது ஆன்ட்டி....”

“ஏம்ப்பா உனக்கிந்த நாரதர் வேலை.... பாரதி எனக்கு மருமக இல்லை, மக அவளுக்கு எது விருப்பமோ அதுதான் எங்க ரெண்டு பேரோட விருப்பமும் இனிமே...”

“Oh God.... சாதாரணமாவே இவளைப் பிடிக்க முடியாது.... இனி கேக்கவே வேண்டாம்”, மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு பாரதியும், சாரங்கனும் ராஜா வீட்டிலிருந்து கிளம்பினர்.

சொல்லு சாரங்கா... அந்த டாகுமென்ட்ஸ் எல்லாம் பார்க்க முடிஞ்சுதா...”,இருவரும் வீட்டை அடைந்து, பாரதியின் வீட்டு பால்கனியில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

“எனக்குத் தெரிஞ்சு எல்லாப் பத்திரமும் பக்காவா இருக்கு பாரதி.... இருந்தாலும் எல்லா டாகுமென்ட்ஸ்க்கும் காப்பி போட்டுட்டு வந்திருக்கேன்... நாளைக்கு பத்திரப் பதிவு அலுவலகம் போய் மறுபடி ஒரு வாட்டி பார்த்துடறேன்....”

“அவங்க அப்பா, அம்மா என்ன சொல்றாங்க....”

“அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு.... எப்போ யார் வந்து மிரட்டுவாங்கன்னே தெரிய மாட்டேங்குதுன்னு வருத்தப்பட்டாங்க... லேட் நைட் எல்லாம் கால் பண்ணி கண்டமேனிக்கு பேசி டார்ச்சர் பண்றாங்க போல.... இதுக்காகவே இதுவரை நாலு தடவைக்கும்  மேல நம்பர் மாத்தி இருக்காங்க... அப்படியும் எப்படியோ கண்டுபிடிச்சு கால் பண்றாங்களாம்... போன் அடிச்சா எடுக்கவே பயமா இருக்குன்னு அந்தம்மா சொல்லும்போது கஷ்டமா இருக்கு....”

“ஹ்ம்ம் இதெல்லாம் எப்பவும் இவங்க மிரட்டப் பயன்படுத்தற வழிதானே.... நாளைக்கு நீ காலைலயே பதிவு அலுவலகம் போயிட்டு நேரா சீனியர் வீட்டுக்கு வந்துடு.... அதுக்குப் பிறகு என்ன பண்ணலாம்ன்னு  யோசிக்கலாம்....”

பாரதியிடம் விடை பெற்று சாரங்கன் அவன் வீடு செல்ல, இரண்டு கேஸ்களைப் பற்றிய முக்கிய புள்ளிகளைக் குறித்து குறிப்பெடுக்க ஆரம்பித்தாள் பாரதி.

தொடரும்

Episode 15

Episode 17

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.