(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 17 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

பாரதி குறிப்பெடுத்துக்கொண்டு இருக்கும்போது சரியாக அவளின் தொலைபேசி அழைத்தது... அதில் மயூரியின் எண் வர இந்த நேரத்தில் இவள் எதற்கு அழைக்கிறாள் என்று யோசித்தபடியே அழைப்பை ஏற்றாள் பாரதி....

“சொல்லுங்க மயூரி.... ஏதானும் பிரச்சனையா இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க.....”

“சாரி மேடம்... லேட் நைட் கால் பண்ணினதுக்கு.... வேற வழி இல்லாம கூப்பிட வேண்டியதா போச்சு....”

“ஹே சாரி எல்லாம் வேண்டாம்... நீங்க விஷயத்தை சொல்லுங்க...”

“மேடம் இப்போ ஒரு அரை மணி நேரம் முன்னாடி ஒரு போன்கால் வந்தது... அதுல எப்படி நீ போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுப்பன்னு சொல்லி ரொம்பக் கேவலமா பேசினாங்க.... நாளைக்கு காலைல போய் வாபஸ் வாங்கலைன்னா விளைவுகள் விபரீதமா இருக்கும்ன்னு ஒரே மிரட்டல்.....”

“இதெல்லாம் வழக்கமா அவங்க பண்றதுதான் மயூரி... நீங்க கவலைப்படாதீங்க...”

“இல்லை மேடம்... எட்டு மணிக்கு எங்க பக்கத்து வீட்டு ஆன்ட்டி மருந்து வாங்கணும்... கூட வர முடியுமான்னு கேட்டாங்க.... அவங்க கணவர் வெளியூர் போய் இருக்கார்.... நானும் கூட போனேன்... அப்போ ஒரு நாலு பேர் தெரு முக்குல நின்னுட்டு எங்க வீட்டையே வெறிச்சு பார்த்துட்டு இருந்தாங்க....”

“ஓ அவங்க உங்க வீட்டைத்தான் பார்க்கறாங்கன்னு எதை வச்சு சொல்றீங்க... சும்மாக்கூட ரோட்ல நின்னு பேசலாமே....”

“நானும் மொதல்ல அப்படித்தான் நினைச்சேன் மேடம்.... ஆனா அந்த போன்கால் வந்த பிறகு சந்தேகம் வந்து பார்த்தா அவங்க அதே இடத்துலதான் இருக்காங்க.... நான் கடைக்கு போகும்போது  ரெண்டு பேர்தான் நின்னுட்டு இருந்தாங்க.... இப்போ ஒரு நாலு பேர் இருக்காங்க மேடம்... எங்கத் தெருல ஆள் நடமாட்டமும் இப்போ இல்லை.... அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு....”

“உங்க வீட்டுக்கு வர்றதுக்கு வாசல் வழி மட்டும்தான் இருக்கா மயூரி... இல்லை வேற வழியாவும் வர முடியுமா...”

“வாசப்பக்கம் மட்டும்தான் வழி மேடம்... பின்னாடி பக்கம் கடை இருக்கு மத்த ரெண்டு சைடும் வீடுங்க....”

“பின்னாடி கடை மூடிட்டாங்களா... அந்தப்பக்கம் ஆள் நடமாட்டம் இருக்குதா?”

“கடை மூடிட்டாங்க  மேடம்... ஆனா அந்தத்தெருல வண்டிங்க போய்ட்டுதான் இருக்கு.... கடைல செக்யூரிட்டி ரெண்டு பேர் எல்லா நேரமும் இருப்பாங்க மேடம்.....  அவங்க அரைமணிக்கு ஒரு முறை கடையை சுத்தி வருவாங்க... மத்தநேரம் செக்யூரிட்டி ரெண்டு பேருமே பின்பக்கம் கோடௌன்கிட்டதான் இருப்பாங்க....”

“ஓகே உங்க வீட்டு பின்பக்கம் அப்போ பிரச்சனை இல்லை... மத்த ரெண்டு சைடும் கவனிக்கறா மாதிரி ஜன்னல் இருக்கா உங்க வீட்டுல....”

“நாலு பக்கமுமே ஜன்னல் இருக்கு மேடம்....”

“மயூரி நீங்க ஒன்னு பண்ணுங்க.... ரெண்டு பக்க ஜன்னலையும் ரெண்டு போன் வச்சு ரோடு முழுக்க கவர் பண்ற மாதிரி செட் பண்ணிடுங்க.... அப்படியே ரெகார்ட் பட்டன் ஆன் பண்ணிடுங்க... யாராவது வேற வழில வந்தாலும் நமக்கு அது உபயோகமா இருக்கும்.... முன் பக்கம் அவங்க வர்ற வாய்ப்பு குறைவுதான்... இருந்தாலும் முன் பக்கம் வழியா நீங்க கண்காணிக்க ஆரம்பிங்க... நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல உங்க வீட்டுக்கு வந்துடுவேன்.... அதுவரைக்கும் யார் வந்தாலும் கதவைத் திறக்காதீங்க.... நான் வந்து உங்களுக்கு கால் பண்றேன்... அதன்பிறகு கதவைத்  திறங்க....”,பாரதி மயூரியிடம் பேசிவிட்டு, சாரங்கனை அழைத்து விவரத்தை சொல்லி, அவனையும் அழைத்துக்கொண்டு மயூரியின் வீட்டை நோக்கி சென்றாள்.

சாரங்கனின் வண்டியில் இருவரும் மயூரி வீடிருக்கும் தெருவில் நுழையும்போதே அந்த நால்வரும் அங்கு நிற்பதை பாரதி கவனித்துவிட்டாள்.... சாரங்கனை மயூரியின் வீட்டின் முன் வண்டியை நிறுத்த சொல்லாமல், அப்படியே அடுத்த தெருவில் நுழைந்து அவள் வீட்டின் பின்பக்கம் போக சொன்னாள்.... சாரங்கனும் அவ்வாறே செய்ய... பைக்கை ஒரு கடையின் வாசலில் வைத்துப் பூட்டிவிட்டு அங்கிருந்து நடந்துசென்று இருவரும் துணிக்கடையின் வாயில்புறத்தை அடைந்தனர்...

“ஏன் பாரதி, மயிலு வீட்டு முன்னாடி நிறுத்த வேண்டாம்ன்னு சொல்லிட்ட....”

“மயிலா.......”

“ச்சு செல்ல பேரு பக்கி..... கண்டுக்காத..... ஏன் அங்க நிறுத்தவேண்டாம் சொல்லிட்ட....”

“நாம அவங்க வீட்டுக்கு போகறது அந்த ஆளுங்களுக்குத் தெரியவேண்டாம்ன்னுதான்.... அவங்க என்ன பண்ணப் போறாங்கன்னு பார்க்கலாம்... நாம வர்றது தெரிஞ்சா அவனுங்க எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு....”

“அது கரெக்ட்தான்...  சரி இப்போ எப்படி அங்க போகப்போறோம்....”

“ஏதானும் வழி இருக்கா பார்க்கலாம் வா.... அரைமணிக்கு ஒரு முறை செக்யூரிட்டி ரௌண்ட்ஸ் வர்றாங்கன்னு மயூரி சொன்னா... ஸோ நாம அவங்க வந்தாலும் ஒளியறா மாதிரி இடமா பார்க்கணும்.... நாம கொஞ்சம் வெயிட் பண்ணலாம் அவங்க இந்த ரவுண்டு முடிச்சுக்கட்டும்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.