(Reading time: 8 - 16 minutes)

“அப்படி எல்லாம் வெயிட் பண்ண முடியாது... என் செல்லம் ஏற்கனவே அங்கத் தவிச்சுட்டு இருக்கு.... என்னால இங்க சும்மா நிக்க முடியாது....”

“அடேய் இன்னும் நீ அவக்கிட்ட லவ்வை சொல்லவே இல்லைடா... அதுக்குள்ள செல்லம், வெல்லம்லாம் ரொம்ப ஜாஸ்தி சொல்லிட்டேன்....”

“எங்களோடது எல்லாம் சொல்லாமலே புரிஞ்ச்சுக்கற காதல்... இப்போ நாம  அந்த சாட் கடை வழியா போகப் பார்க்கலாம் பாரதி.... அங்க நிறைய பெஞ்ச் போட்டு வச்சிருக்காங்க.... யாராவது வந்தாக்கூட நாம அதுக்கு அடில ஒளிஞ்சுக்கலாம்....”, சாரங்கன் கூறியபடியே இருவரும் சைடு வழியாக அந்தக்கடையின் இறுதிவரை சென்று பார்த்தனர்.... இரண்டு செக்யூரிட்டிகளும் அதிதீவிர விவாதத்தில் இருக்க, இருவருக்கும் தெரியாமல் எப்படி மயூரியின் வீட்டின் பின்பக்கத்தை அடைவது என்று யோசிக்க ஆரம்பித்தனர்...

“இப்போ எப்படி அங்க போறது சாரங்கா... நடுல பத்தடிக்கு திறந்த வெளியா இருக்கு... எப்படி போனாலும் கண்டுபிடிச்சுடுவாங்க....”

“நாம நேரா இங்க இருந்து போகறது கஷ்டம் பாரதி.... இந்த மதில் மேல ஏறி நாம மயிலு வீட்டு பக்கத்து வீட்டுக்குள்ள போயிட்டு அங்க இருந்து அவ வீட்டுக்கு போய்டலாம்...”, சாரங்கன் கூறிய வழி சரியாக வரும்போல் தோன்ற, காவலாளிகள் பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவரும் மயூரியின் வீட்டின் பின்பக்கத்தை அடைந்துவிட்டனர்... பாரதி மயூரியை கைப்பேசியில்  அழைத்து கதவைத் திறக்க சொன்னாள்.  கதவைத் திறந்த மயூரியைப் பார்த்த சாரங்கனின் முகத்தில் ஆயிரம் கோடி சூர்யப்ரகாசம்.

அங்கு மயூரியின் அம்மாவும், அப்பாவும் மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்த பாரதி அவர்களின் அருகில் சென்று...., “கவலைப்படாதீங்க... நாங்க வந்துட்டோம்ல.... பார்த்துக்கலாம்... உங்க வீட்டு பக்கத்துல யாராவது வந்தாங்களா மயூரி....”

“இல்லை மேடம் யாரும் வரலை... இதோ இந்த ரூம்  ஜன்னல் வழியா பாருங்க... அந்த வீட்டுக்கிட்ட அவங்க நிக்கறது தெரியும்....”, பாரதியும், சாரங்கனும் அந்த அறைக்கு சென்று பார்க்க ஒரு நான்கு வாட்டசாட்டமான ஆட்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.... ஐந்து நிமிடம் தொடர்ந்து பார்க்க  அவர்கள் மயூரியின் வீட்டை கண்காணிப்பதும் தெரிந்தது....”

“நாம பேசின பிறகு அவங்க மறுபடி போன் பண்ணினாங்களா....”

“இல்லை மேடம் அதுக்குப்பிறகு எந்த போனும் வரலை...”

“சாரங்கா உன்னோட காமெரால அவங்கள zoom பண்ணி போட்டோ எடுக்க முடியுதா பாரேன்... முடிஞ்சவர அவங்க முகம் கிளியரா வரா மாதிரி எடு... மயூரி நீங்க ரெகார்ட் பண்ணின போன் எடுத்துட்டு வாங்க..... வேற பக்கமா ஏதானும் நடந்திருக்கா பார்க்கலாம்....” , சாரங்கன் போட்டோ எடுக்க, பாரதி மயூரி ரெகார்ட் செய்த வீடியோவைப் பார்த்தாள்...

“இதுவரை சந்தேகப்படற மாதிரி எதுவும் இல்லை... மத்த ரெண்டு சைடு ரோடும் காலியாத்தான் இருக்கு....”, சாரங்கன் புகைப்படம் எடுத்து பாரதியிடம் காட்ட, அதில் இருந்த நான்கு பேரில் ஒருவனை அவளுக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்க...

“சாரங்கா இந்த ஆளைப் பாரேன்... இவனை எங்கயோ பார்த்தா மாதிரி இல்லை... டக்குன்னு ஞாபகம் வரலை....”

“ஹ்ம்ம் நானும் அதுதான் யோசிச்சுட்டு இருந்தேன்... ஹேய் ஞாபகம் வந்துடுச்சு.... ரெண்டு மாசம் முன்னாடி ஏதோ செயின் பறிப்பு குற்றத்துல மாட்டி ஜெயில்ல இருந்தானே.... அவனமாதிரி இல்லை.....” 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் நால்வரும் நகர்ந்து மயூரியின் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தார்கள். 

“அவங்க இங்க வீட்டுக்கு வராப்போலத்தான் தெரியுது.... பாரதி நீங்க நாலு பேரும் உள்ள போய்டுங்க... நான் அவங்களோட பேசிக்கறேன்.....”

“இல்லை சாரங்கா... நாம இங்க வந்தது அவங்களுக்குத் தெரியவேண்டாம்.... நாம ரெண்டு பேரும் அந்த ரூம்க்கு போய்டலாம்.... மயூரி நீங்களும் உள்ள போய்டுங்க..... ஆன்ட்டி, அங்கிள் நீங்க ரெண்டு பேர்தான் கொஞ்சம் போல்டா பேசணும்.....”

“மேடம், நான் இருக்கேன் அப்பா உள்ள போகட்டும்... அவருக்கு நடக்க முடியாததால இந்த நேரத்துல எதுக்கு முழிச்சு இருக்கார் அப்படிங்கறா மாதிரி சந்தேகம் வந்துறப்போகுது அவங்களுக்கு....”

“நீங்க சொல்றதும் சரிதான்.... ஆன்ட்டி அவனுங்க என்னப் பேசினாலும் நீங்க உணர்ச்சிவசப்படாம இருங்க... முக்கியமா நாங்க இருக்கற ரூம் சைடு திரும்பாம இருங்க... அவனுங்க அதீதமா எதையும் செய்ய மாட்டாங்கன்னு நினைக்கறேன்... அப்படி ஏதானும் ஆச்சுன்னா நாங்க உடனே ரூமை விட்டு வெளிய வந்துடுவோம்.... ஸோ கவலைப்படாம பேசுங்க....”,பாரதி சொல்லிமுடிக்கவும், அவர்களின் வாயில் கேட் திறக்கவும் சரியாக இருந்தது.

தொடரும்

Episode 16

Episode 18

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.