Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

Write at Chillzee. <h3><b>Come join the FUN!</b ></h3>
Write at Chillzee.

Come join the FUN!

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 01 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

நேரம் : இரவு 10

இடம் : பள்ளியறை

நபர்கள் : மணப்பெண், அவளின் தாய்

சூழ்நிலை : பிரளயத்தில் சிக்கிய சிட்டுக்குருவியாய் மணப்பெண், அதில் சிக்கவைத்த நிலையில் அவள் அன்னை

"ராசாத்தி “, நா எழவில்லை அந்த தாய்க்கு, என்ன சொல்வதாம் அவள்? , "நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில இங்க இருக்கன்னு உனக்கு புரியுதா..? பார்த்து நடந்துக்கோ மா", சற்றே மனம் தளர்ந்து தான் பேசினார் அந்த தாய்.

"மா, என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடேன் ப்ளீஸ் எனக்கு மூச்சே விட முடியல மா, என் கழுத்தை இறுக்கி பிடிச்ச மாதிரி இருக்குமா" என்று தான் இருக்கும் நிலையை மறந்து மகள்  பேச, அவள் அன்னையோ இதற்கு மேல் தான் அங்கே இருந்தால்  எங்கே அவள் சொன்னவாறே செய்துவிடுவோமோ என்ற அச்சத்தில்

 “ராசாத்தி , என்ன பேசுற நீ ? ஏதோ நம்ம பொண்ணை புகுந்த வீட்டில் விட்டுட்டு போகிறோமேன்னு பேசினா ? இங்க பாரு நான், உன் அப்பா, உன் தங்கை, நம்ம நிலைமை எல்லாம் நீ வாழப்போற வாழ்க்கையில் தான் இருக்கு புரியுதா..? இல்லை என்னால் இங்க இருக்க முடியல, மூச்சு முட்டுது அது முட்டுதுன்னு சொன்னால் வா நாம எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துக்கலாம்” என்று சோகத்தை அகத்தே மறைத்து கோபத்தை புறத்தே அம்பலப்படுத்த

மகளோ  மௌனத்தை மட்டும் தன் தாய்க்கு பரிசளித்துவிட்டு எதையோ தீவிரமாய் யோசித்த பின்

“மா எனக்கு ஒரு சத்தியம் செய்து தருவீங்களா ? என்று  மௌன விரதத்தை முடித்தாள்.

ஏற்கனவே மனம் உடைந்திருந்த அவள் தாயோ “என்ன கேட்க போறாளோ..? என்று எண்ணியவண்ணம் “சொல்லுமா என்ன வேணும் உனக்கு?”என்று பரிவாக கேட்டாள்.

 எவ்வளவு தான் போலியான கோபத்தை  காட்ட நினைத்தாலும் அந்த தாயால் பரிவான வார்த்தைகளை தவிர்க்க இயலவில்லை போலும்

“இந்த நிமிஷத்துக்கு அப்புறம் என் கண் முன்னாடி யாரும் எப்பவும் வந்துடாதீங்க ப்ளீஸ்” என்று எங்கோ வெறித்தபடி  உதடுகள் துடிக்க  மகள் வேண்ட,  “ராசாத்தி!!” என்று அதிர்ந்தாள் அவள் அன்னை .

“கேட்கிறேன் இல்லமா சத்தியம் பண்ணுங்க இனிமே என்னை யாரும் இங்க பார்க்க வர வேண்டாம் இங்கன்னு இல்லமா எங்கும் என்னை பார்க்க வேண்டாம் கல்யாணம் செய்துகொடுத்துட்ட உங்க பொண்ணு விரும்பி கேட்கிற சீதனமா இருக்கட்டும்”  என்று கசந்த மனதோடு கேட்டாள்.

வீம்புக்காரியின் அன்னையாய் அத்தாயும்  அவள் உள்ளங்கையில் சத்தியம் செய்தபடி தாங்காத மனபாரத்தோடு அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

 எந்த தாயும் செய்ய இயலாத காரியத்தை செய்தவள் ஆயிற்றே தாங்கவில்லை அவளுக்கு. தன் சுயநலத்திற்காக தன் மகளின் வாழ்வை சூறையாடிவிட்டு?

தன் மேல் அவளுக்கு மூண்ட கோபம், தன் நிலையை எண்ணி மருகியவள் அவளால் செய்ய இயன்ற அழுதல் பணியை மட்டும் செவ்வனே செய்த வண்ணம்… வாசலை …தன் மகளின்  புகுந்த வீட்டு   வாசலை கடக்க  அங்கு இருந்த அனைவரும் அவளை ஆறா துயரோடு கண்டனர் என்றாலும் யாரும் அவளை தேற்ற முன் வரவில்லை.

எவ்வாறு வருவர் இதற்கெல்லாம் மூல காரணமே அவர்கள் எனும் போது எவ்வாறு வருவார்களாம் ஆறுதல் சொல்ல? என்னவென்று ஆறுதல் சொல்வார்களாம்?

திருமணம் முடித்த பெண்ணின் தாய், அவள் புகுந்த இல்லத்தாரிடம் கூறும் மொழிகளான “இனி அவள் உங்கள் இல்லத்து பெண் அவளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. அவள் வயதில் சிறியவள் ஏதேனும் தவறு செய்தாலும் பெரியவர்கள் நீங்கள்  அதை பெரிய மனம் கொண்டு பொறுத்து அவளை நல்வழிப்படுத்துவது உங்கள் கடமை என்பன போன்ற மொழிகள் இல்லை, ஏன் எனில் அங்கே அந்த பெரிய மனதுடன் யாருமே இருந்திருக்கவில்லை.

தன் நலனுக்காக, தன் மக்கள் நலனுக்காக, தன் சந்ததியின் நலனுக்காக பிறர் நலன் சூறையாடப்படுவதை என்னவென்று குறிப்பிடுவது?

அங்கே அந்த ராசாத்தி ஒரே நாளில் சில மணி துளிகளில் மாறியிருந்த தன் விதியை எண்ணி விரக்தியில் நின்றிருக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவள் கணவன், அவளவன்.

கணவன் ஆம் அவள் கணவன், அலங்கோலமாய் இருந்த அவன் தலை முடியும் எப்போது வேண்டுமானாலும் நான் அவிழ்ந்து விடுவேன் என்று எச்சரித்த அவன் பட்டு வேட்டியும், தாறுமாறாய் பூட்டப்பட்டிருந்த அவன் பட்டு சட்டையின் பட்டனும், கையில் மது பாட்டிலும் தட்டு தடுமாறி வந்து கட்டில் காலில் மோதியவன் மெத்தையில் விழுந்துவிட

கையில் இருந்த மது பாட்டில் தரையில் விழுந்தது ஆனால் நொறுங்கவில்லை கட்டிய அவன் மனைவியை போல் தான் கட்டிக்கொண்டு வந்த மது பாட்டிலும் திடமானது தான் போலும் .அவனிடம் இருந்து வந்த  மதுவின் நாற்றம்  அவ்வறையை நிரப்பியது, 

குமட்டியது இளநங்கைக்கு ,தாங்க முடியாத வாடை இருந்தும் தாங்கிக்கொள்ள தன் மனதிற்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்தாள்.

மெத்தையில் விழுந்தவன் ஐ மிஸ் யு ஜனனி, ஐ லவ் யு டார்லிங் ப்ளீஸ் டா என்கிட்ட திரும்பி வந்திடு, இல்ல என்னையும் உன்கிட்ட கூட்டிட்டு போயிடு டா ப்ளீஸ் என்றெல்லாம் உளறியவன் உறங்கிவிட இல்லை போதையால் உறங்க வைக்கப்பட விரக்தியில் மட்டுமே இருந்த அவளது மனம் தற்போது ஏனோ ஒரு வித அமைதியை உணர்ந்தது. ஒரு பெரு மூச்சை எடுத்து விட்டவள் கண்களை மெல்ல மூடி திறந்து "அப்பா ஐ லவ் யு " என்று மனதோடு சுகமாய் கூறிவிட்டு தரையில் தலை வைத்து விழி மூடிவிட அந்த இரவு கழியத்தொடங்கியது.

Episode 02

தொடரும்

 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Prama Subbiah

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாDevi 2017-09-07 19:07
Arambame amarkkalamaa irukke Prama.. (y) welcome back Prema (y) :GL: for this series waiting eagerly
Reply | Reply with quote | Quote
# unnel tholaidhavankodiyalam 2017-09-07 02:17
sad very sad starting
Poor girl
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாTamilthendral 2017-09-07 02:00
Welcome back Prama :)
Unga kathai announcement paarthittu santhosham iruntha ennai ippadi soga moodu-ku thallitteengale :sad:
Sari vidunga mudhal epi-ngarathala ungalai summa viduren :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாJansi 2017-09-07 00:54
All the best for ur new seires Prema

Taarumaaraa story start aagituku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாRoobini kannan 2017-09-06 23:40
Welcome back akka :dance: :dance:
Starting ah next enanum nenaika vachetenga
Nice start akka (y)
All the very best akka, keep rocking :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாAnubharathy 2017-09-06 23:16
Hai mam. Starting super. Aana enna first ye sogama irukku.
All the best mam. Waiting to read your upcoming episodes.
Thanks for this epi mam.
Reply | Reply with quote | Quote
# Unnil tholaindavan naanadiIndhusri 2017-09-06 22:51
:clap: hi mam first update romba nalla irunduchu. Aftr kanamooch re re romba naalaikku aparam ungakitta irundhu oru story, waiting for da next update :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாsaaru 2017-09-06 20:17
Arambame bottle oda va nice start prema waitng next
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாAdharv 2017-09-06 20:13
:dance: first epi-a ippadi bottle kai-oda sogama irundha kandipa vara pora epi-s pataya kalakumn namburen en nambikai neriaperuma enbadhai varum epi-s la parkalam...Unga ilanangai-n problem ena?? Ivanga thaa hero heroin ah ?? Looking forward for the next update ma'am. :GL:

Thanks for this :cool: :cool: ;-) update.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாAarthe 2017-09-06 18:44
Very nice and interesting start ma'am :-)
Adutha update kaaga eagerly waiting :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாApoorva 2017-09-06 17:50
very diff start
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாAgnes 2017-09-06 14:46
Prama.....Welcome Back....Enga iruntheenga ivlo naal.......Good to see you again...
All thevery best for your new series
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாsaju 2017-09-06 13:44
nice start sis
Reply | Reply with quote | Quote
# unnil tholainthavan naanadividhya 2017-09-06 13:40
first epi laye achacho enna nandhuchunu feeling ah irukku.ungali nindha padaipirkku ennudaya vazhthukkal :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 - பிரேமாmadhumathi9 2017-09-06 13:22
:clap: big :thnkx: 4 seekkiram kathaiyai koduthatharkku. :clap: mudhal epi padithavudan manam ganamaa irukku. Waiting to read more. :GL: (y)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 15:22 by Chillzee Team #48656
Chillzee Team's Avatar
ஒரு மணி நேரம் பிறகு “பேபி, பேபி” என்ற குரல் கேட்க உறக்கத்தில் இருந்து இன்னும் முழுதாய் மீளாதவள் “ போ பா எனக்கு இன்னும் தூக்கம் வருது, கொஞ்ச நேரம் ப்ளீஸ் “என்று மேசையின் மீது தலை வைத்திருந்தவள் கெஞ்ச

“பேபி மூன், நீ எவ்ளோ நேரம் வேணும்னாலும் தூங்கு, பட் வீட்டுக்கு போய் பெட் ல நல்லா கம்ப்ர்டபுளா படுத்து தூங்கு” என்று கதிர் சொல்ல டக்கென்று கண் விழிக்கும் போது தான் அவளுக்கு புரிந்திருந்தது தான் உறங்கியிருக்கிறோம் என்று.

சட்டென விழித்ததில் கண்கள் சிவந்து நமைச்சல் எடுக்க அவள் விழிகளை பர பர வென தேய்க்க ,அவள் கைகளை பிடித்தவன் “தேய்க்காத பேபி இன்னும் எரியும் முகம் கழுவிட்டு வா சரியாகிடும்” என்று பரிவாய் சொல்ல, வெடுக்கென்று கையை இழுத்தவள் “ஐ யம் ஓகே ப்ரொப்லெம் சால்வ்டா?” என்று கேட்க

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-05
Posted: 04 Oct 2017 07:40 by Chillzee Team #48575
Chillzee Team's Avatar
நீங்க டான்ஸ் ஆடுங்க இல்ல என்னவோ பண்ணுங்க நான் மொதல்ல இந்த கம்பெனிய விட்டுட்டு போறேன் என்று அவள் அவனிடம் பொரிந்து தள்ள

ஏன்? இதை இழுத்து மூடணும்னு ரொம்ப நாளா பிளான் பண்றீங்களா ..? இல்லை இவனை வெச்சிட்டு குப்பை கொட்டணுமே எதுக்கு வம்புன்னு எஸ்கேப் ஆக பாக்குறீங்களா? என்று அவன் நக்கலாய் கேட்க

அவளோ நிதானமாக "பயப்படுறேன், என்னால யாரோட வாழ்க்கையிலும் எந்த பாதிப்பும் வந்திட கூடாதுன்னு பயப்படுறேன் கதிர்" என்று அழுத்தமாக சொல்ல

ஒரு நொடி அவளை உற்று நோக்கியவன் "ம் இன்டெரெஸ்ட்டிங் நீ இப்படியெல்லாம் கூட பேசுவியா? ஹே முதல்ல உனக்கு பேச வருமா ?" என்று அவன் கிண்டல் செய்ய

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-04
Posted: 26 Sep 2017 18:21 by Chillzee Team #48524
Chillzee Team's Avatar
சுந்தரி எந்தவிதமான சந்தேகத்தோடும், தயக்கத்தோடும் நம் வாழ்க்கை ஆரம்பிக்க கூடாது உன் மனசுல என்ன இருந்தாலும் தயக்கம் இல்லாம கேட்டுடு “என்று சொல்ல சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்ட சுந்தரியோ

“இல்ல ..ஒரு வேளை எனக்கும் ஆண் குழந்தை பிறக்கலைன்னா.. என்னையும் நீங்க” என்று சொல்லும் போதே அவள் விம்மி அழ தொடங்க சேகரோ சிரித்துக் கொண்டிருக்க, கணவன் சிரித்ததில் மனைவிக்கே உரித்தான ஊடல் தொடங்கியது அவளிடத்தே.

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-03
Posted: 19 Sep 2017 18:19 by Chillzee Team #48473
Chillzee Team's Avatar
#தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 02 - பிரேமா சுப்பையா

அவள் கைகளை அழுத்தமாக பற்றியவன் மனமோ "இப்பதான் உன் கையை எனக்குள்ள கொண்டுவந்திருக்கேன் கூடிய சீக்கிரம் உன்னையும் எனக்குள்ள கொண்டுவந்துடுவேன் என்று ஆனந்தப்பட"

அவள் மனமோ , "என் வாழ்க்கையை நான் எப்படி நகர்த்தனும்னு நினைக்கிறேனோ அப்படித்தான் நகர்த்துவேன்” என்ற எண்ணத்தை தனது நெஞ்சில் ஏற்ற, ஆரம்பத்தில் சிறு நடுக்கம் கொண்ட அவள் கை, அந்நடுக்கத்தை கைவிட்டது.

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-02
Posted: 06 Sep 2017 12:23 by Chillzee Team #48337
Chillzee Team's Avatar
எந்த தாயும் செய்ய இயலாத காரியத்தை செய்தவள் ஆயிற்றே தாங்கவில்லை அவளுக்கு. தன் சுயநலத்திற்காக தன் மகளின் வாழ்வை சூறையாடிவிட்டு?
தன் மேல் அவளுக்கு மூண்ட கோபம், தன் நிலையை எண்ணி மருகியவள் அவளால் செய்ய இயன்ற அழுதல் பணியை மட்டும் செவ்வனே செய்த வண்ணம்… வாசலை …தன் மகளின் புகுந்த வீட்டு வாசலை கடக்க அங்கு இருந்த அனைவரும் அவளை ஆறா துயரோடு கண்டனர் என்றாலும் யாரும் அவளை தேற்ற முன் வரவில்லை.
புதிய தொடரின் முதல் அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...van-naanadi-prama-01
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP
Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top