(Reading time: 10 - 20 minutes)

24. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

பெண் என்பவள் மென்மையானவள், அவள் ஆண்களை சார்ந்தே வாழ்கிறாள் என்கின்றனர் பெரும்பான்மையினர். உண்மை அதுவா? இல்லைவே இல்லை! ஆணைவிட பெண் சக்திமிக்கவள்! ஆக்ககர எண்ணம் கொண்டவள்! சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு உடனே உடைந்துவிடும் பெண்ணவள், பெரும் இடர் வரும்போது பண்பட்டு விடுகிறாள்.

மது அருந்தி, குடும்ப பொறுப்பை தட்டிக் கழிக்கும் கணவன்மார்களின் மனைவிகளை பாருங்கள்! தத்தம் குடும்பத்தை தூக்கி நிறுத்திட அவர்கள் கையாளும் உழைப்பிற்கும் மனோதிடத்திற்கும் ஈடு இணை உள்ளதா? அப்படிப்பட்ட பெண், ஆண்களை சார்ந்திருக்கவில்லை அவர்களோடு இணைந்து அவர்களை வழி நடத்துகிறாள்.

மகளாக, தாயாக, தாரமாக,தோழியாக அவள் பேச வேண்டிய இடங்களில் தன்  கருத்தினை ஆணித்தரமாக பதிக்கவும் செய்கிறாள். இதோ வெற்றியின் தோழி என்ற முறையில் கண்மணியும் தன் எதிர்ப்பினை வெளிப்படுத்தினாள்.

“வெற்றி, நீ சுதர்சனாவை நினைச்சி ஃபீல் பண்ணுறதும்,அவளுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறதும் சரிதான். ஆனா, உன் லைஃப்ல இது எவ்வளவு பெரிய ரிஸ்குன்னு தெரியுமா உனக்கு?”

“..”

“அதுவும் நீ என்ன பத்து படம் எடுத்து முடிச்சிட்டா இப்படி ஒரு விஷயம் பண்ண போற? இது உன் முதல் படம் டேம் இட்! எக்குதப்பா ஆச்சுன்னா உன் கனவு , நீ எல்லாம் க்ளொஸ்..”

“..”

“பெருசா தியாகம் பண்ணுறதா நினைச்சு நீ முட்டாள்தனமா நடக்காத .. “ என்று ஆதங்கமாய் பேசிக்கொண்டே அடிக்கடி வெற்றியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்மணி. சிரிப்பைதவிர வேறெந்த பதிலையும் வாய்  திறந்து சொல்லாமல் இருந்தான் வெற்றி.

“என்னடா சிரிச்சிட்டே இருக்க? நான் உன் கண்ணுக்கு லூசு மாதிரி தெரியுறேனா? இல்ல நான்தான் லூசு மாதிரி பேசுறே..னா” என்று சொன்னவள் அப்போதுதான் பொறி தட்டியது போல அவனைப் பார்த்தாள்.

“டேய் நான் நினைக்கிறது ரைட்டா?” விழிகள் மின்னிட கண்மணி கேட்க ஆமென தலை அசைத்தான் வெற்றி. (ஒன்னும் புரியலையா ப்ரண்ட்ஸ்? இதுக்கு பெயர்தான் டெலிபதி. நமக்கு ரொம்பவும் நெருக்கமானவங்க கிட்ட எல்லாத்தையும் வாய்விட்டுத்தான் சொல்லனும்னு அவசியம் இல்லை. கண்ஜாடை, மர்ம புன்னகை, தலையசைப்பு,சில நேரங்களில் இமைக்காத பார்வை பரிமாற்றங்களே போதுமானது.) கண்மணி “ஐயோ மாட்டிக்கிட்டோமே “என்ற முகபாவத்தில் வெற்றியைப் பார்க்கவும் அவள் மனதை படித்திருந்தான் வெற்றி. (இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் சப்டைட்டில் போடுங்க கண்ணு)

“ நீ சொன்னதை முழுசா கேட்காமல் நான் லூசு மாதிரி பேசிட்டேன்.. ரைட்டா?” என்றாள் கண்மணி.

“அதே அதே”என்றான் வெற்றி.

“குட்.. அப்போ சொல்லு.. உன் முழு ப்ளான் என்ன?”

“ம்ம்ம்.. சுதர்சனா இப்போ  எங்க இருக்கான்னு தெரியும்தானே கண்ணு? விலைமாதர்கள் இருக்குற ஏரியா”

“ம்ம் ஆமா  நீ சொல்லியிருந்த”

“கண்ணு, அங்க சுதர்சனாகிட்ட பேசிப்போ அவளைப் பத்தி மட்டும் தெரிஞ்சுக்கல. அங்க இருக்குறவங்கள பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்.ஒரு விஷயம் யோசிச்சு பாரேன், எந்த ஒரு பெண்ணாச்சும் என்னுடைய எதிர்க்கால ஆசையே இந்த வேலைதான்னு கனவு கண்டிருப்பாளா?”

“ச்ச..ச்ச கண்டிப்பா இல்லை வெற்றி. ஒருவேளை ஒரு விலைமாதுக்கு பிறந்த பெண் தன்னுடைய விதியும் அதுதான்னு நினைச்சு இருக்கலாம்..மத்தப்படி..”

“மத்தப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கத்தான் செய்யுது கண்ணு. ஒரு பெண்ணுடைய அடிப்படை ஆசை,கனவு ,குறிக்கோள் இதெல்லாம் பறிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு!”

“அதெல்லாம் நினைச்சாலே நடுங்குது வெற்றி. ஒரு பெண்ணுடைய பலவீனத்தை தேடி அதை தாக்கி அவங்கள ஜெயிக்கிறது அருவருப்பாகவும் இருக்கு..”

“நீ சொன்னதுல இன்னொரு விஷயத்தை நீயே கவனிச்சியா?”

“என்ன விஷயம்டா?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே டா ஒருவேளை ஒரு விலைமாதுக்கு பிறந்த பெண் தன்னுடைய விதியும் அதுதான்னு நினைச்சு இருக்கலாம்னு ..!”

“ஆமா..ஒரு அனுமானத்தில் சொன்னேன்டா”

“உன்னுடைய அனுமானம் தான் இந்த சமுதாயத்தோட ப்ரதிபலிப்பு கண்ணு” என்றவன் ஆழ்ந்த பெருமூச்செறிந்தான்.

“தெரிஞ்சோ தெரியாமலோ நம்ம எல்லாருடையன் மனசுலையும் ஒரு எண்ணம் பதிஞ்சிருக்கு!

டாக்டரின் வாரிசு டாக்டர்

விவசாயியின் வாரிசு விவசாயி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.