(Reading time: 10 - 20 minutes)

தான் அங்கிருப்பதை அவளுக்கு செய்கையால் உணர்த்தினான். அவன் பக்கமாம் திரும்பியது சில நொடிகளே என்றாலும் அவள்  அவனை உணர்ந்து கொண்டாள். சின்ன புன்னகையுடன் அவர்களை நெருங்கினாள்.

தன்னை பெற்ற அன்னை தந்தையாய் ஏதோ பொருளைப் பார்ப்பது போல வெறுமையுடன் பார்த்தாள் அர்ப்பணா. ஏன்? ஏன் தனக்கு மட்டும் இப்படி ஒரு பந்தம் வாய்த்தது? புரியவில்லை அவளுக்கு.

“சொல்லுங்க” என்று கைகளை கட்டிநின்றாள்.

“ எப்படிம்மா இருக்க?”அவள் அன்னை மீனாட்சி கேட்கவும்,

“இன்னும் சாகல.. உயிரோட்த்தான் இருக்கேன்..” என்றாள். பதிலுக்கு “நீங்க எப்படி இருக்கீங்க?”என்று கேட்க துடித்த உதடுகளை அழுந்த மூடிக் கொண்டாள்.

“ என்ன விஷயம் சொல்லுங்க.. ஷூட்டிங் இருக்கு”

“ரொம்ப உயரத்துக்கு போயிட்ட அர்ப்பணா..” ஒரு மாதிரியாகிவிட்ட குரலில் சொன்னார் அவர்.

“உயர்த்திவிட்ட புண்ணியவான் உங்க புருஷந்தானே? எதையும் மறக்கல..அதுக்கு நன்றி கடனாக நான் ஏதாவது செய்யனுமா?” என்று கேட்டவள் தன்னையே நொந்து கொண்டாள். எந்த அளவிற்கு அவள்மனமானது வேதனையில் உழன்றிருந்த்தால் இத்தகைய வார்த்தைகளை கொட்ட முடிகிறது. தன்னையே வெறுத்துக் கொண்டு வெறுப்பினை கக்கினாள்.

“ அர்ப்பணா.. உன் அப்பா மேல உனக்கு கோபம் இருக்கலாம்.ஆனால் என் நிலையை நீ புரிஞ்சுக்கனும். உன் அப்பாவின் சுபாவத்திற்கு அடங்கி இருந்தே பழகினவள் நான்..உன் வாழ்க்கை மாறி போனதுக்கு நானும் காரணம்தான் ..ஆனால் அதுக்காக நீ என்னை வெறுக்கணுமா?”

“ஹா.. ஹா.. அதெப்படிங்க.. வயசாகியதால இந்த ஞாபகமறதியா? இல்லை இதுவும் பேசும் தந்திரமா?”

“என்ன சொல்லுற?”

“ நான் ஏன் உங்களை உதறினேன்னு மறந்து போயிருச்சா? உங்க கணவர் பேச்சை மீற முடியாமல் என்னை நீங்க சினிமாவுக்கு தத்துகொடுத்தீங்க..அப்பவும் நான் உங்களோடுதான் இருந்தேன்.. என்னை தங்க முட்டை இடுற வாத்து மாதிரி உங்க கணவர் நட்த்தினார்.. அதையும் நான் பொறுத்துகிட்டேன்.. ஆனா..ஆனா..ஒரு பொறுக்கி..”

“..”

“என் மேல பெட்ரோல் ஊத்தி எரிச்சிருந்தா கூட சந்தோசமா செத்துருப்பேன்..ஆனால் சந்தேகப்பட்டு என்னை உயிரோட கொன்னீங்க.. அதுக்காகத்தான் உங்களை உதறினேன்.. காரணாம் புரிஞ்சதா?”

“நீ சீதையா இருக்கலாம்..ஆனா இருக்குற இடம் அயோத்தி இல்லை அர்ப்பணா!” என்று பதில் கொடுத்தார் மீனாட்சி.இன்னமும் அவள் மீது நம்பிக்கை ஒன்றும் எழுந்துவிடவில்லை என்று சொல்லாமல் சொன்னார் அவர்.

“ அயோத்தியோ, மிதிலையோ, கானகமோ சீதை எந்த இட்த்தில் இருந்தாலும் பவித்ரமாகத்தான் இருந்தாங்க!” என்றவளின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“என்னத்தான் வேணும்னு சொல்லுங்க!” என்று அர்ப்பணா கேட்கவும்அவள் கையில் ஒரு ஃபைலை கொடுத்தார் மீனாட்சி. அதில் மெடிக்கல் ரிப்போர்ட்கள் குவிந்திருந்தன. அவளது தந்தைக்கு புற்றுநோயாம்!

“அப்பா!!”மகளென்ற மனமொன்று ஊமையாய் அழுதது. அந்த அழுகையை நிறுத்தியது மீனாட்சியின் குரல்.

“நிறைய பணம் தேவை படுது!. உன்கிட்ட கடன் கேட்கல..பெத்த கடனை அடைச்சிட்டு போ!”

“பணம்.. பணம்..பணம்..இந்த நிலைமையிலும் பணம் மட்டும்தானே வேணும் உங்களூக்கு? சம்பாதிக்கிற மொத்தையும் கொட்டுறேன்.. ஆனால் இப்படி பட்ட சுயநலவாதிகளுக்கு நான் பிறக்கலன்னு எனக்கு எழுதி தர முடியுமா உங்களால்?” ஆதங்கத்தில் கத்தினாள் அர்ப்பணா.

“ஒருவேளை உங்க புருஷன் செத்துட்டா நான் வராமல் என் பணத்தை மட்டும் அனுப்பவா? அப்பவும் அது போதுமா?” என்று கேட்டவளின் குரல் உயர்ந்திருக்க, ராகவன் அவளை நெருங்கி வர தொடங்கினான்.

“ச்ச..பணம்தானே வேண்டும்?அனுப்பி வைக்கிறேன்,, இட்த்தை காலி பண்ணுங்க”என்று அவள் கத்த அடுத்த நொடி அந்த கார் அங்கிருந்து ப்போனது..

தன்னருகில் ஓடி வந்த ராகவேந்திரனின் மார்பில் விம்மலுடன் சாய்ந்தாள் அர்ப்பணா.

“என்னால தாங்க முடியலைங்க”என்று அவ:ள் அழ, அவளை தன்னோடு ராகவன் சேர்த்தணைத்த நேரம்,கேமராக்களின் ப்ளாஷ் ஒளி அவர்கள் மீது விழுந்தது. நம்ம ஹீரோ என்ன பண்ண போறார்? பார்ப்போம்!

-வீணை இசைந்திடும்-

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.