(Reading time: 10 - 20 minutes)

திருநங்கை எப்பவும் திருநங்கையா தான் இருக்கனும்

அந்த மாதிரி விலைமாதுவின் மகளும் விலைமாதுவாகத்தான் இருக்கனும்!”. வெற்றியின் பேச்சில் இருந்த உண்மை அவளை மௌனமாக்கியது.

“சினிமாவுல பெண்கள்னு யாரை காட்டுறாங்க கண்ணு?

புருஷன்கிட்ட மகனை விட்டு கொடுக்காத அம்மா,

பல அண்ணன்மார்களின் கண்ணின் மணியாய் வளரும் தங்கச்சி,

அழகான பொண்ணு, கள்ளம்கபடம் இல்லன்னு காட்டிக்க ஒரு பித்துக்குளி கதாப்பாத்திரம், வாழ்க்கையில் நடந்த கெட்ட சம்பவங்களினால் எதிலுமே பிடிப்பில்லாமல் விட்டேறியாக இருக்குறா வில்லி!

இதுதான் நம்ம சமூகத்தின் பிரதிபலிப்பா?”

“ஐட்டம் டான்ஸ் ஆடுறவளுக்கு உண்மையான காதல் வர கூடாதா?

விலைமாதுவுக்கு தாய்மை உணர்வு இருக்க கூடாதா?

திருநங்கை பெண்களில் ஒருத்தியாய் வளம் வர கூடாதா?”

கற்பழிக்கப்பட்ட பெண்ணொருத்தி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாதா? இந்த மாதிரிபெண்களும் நம்ம சமுதாயத்தில் தானே வாழுறாங்க? என் படம் இவங்களுக்காக பேசும்டா” என்றான் வெற்றி. அவனைப் பெருமிதமாய் பார்த்தாள் கண்மணி.

“ஆனா ஒரு விஷயம் சொல்லனும்டா”

“சொல்லுடா..”

“அண்மையில் ஒரு படம் பார்த்தேன். பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் ஆணின் நிழல் படாமல் அவளால் சாதிக்க முடியும்.. இதுதான் அந்த கதை கரு.ஆனால் அதை க்லைமாக்ஸ் ல தான் உணர்த்தினாங்க. படம் முழுக்க அந்த பெண்களை அழ வெச்சு, முடக்கி, துவண்டு போக வெச்சு கடைசியில பொறுக்க முடியாமல் அந்த பெண்கள் சுதந்திரத்தை தேடி போகுற மாதிரி கதையை முடிச்சாங்க.. இது எனக்கு புடிக்கல..ஒரு மாதிரி தப்பா இருந்தது.இதுதான் சரின்னு சொல்லுறதுக்கு எல்லாத்தையும் தப்பாக்காட்டனும்னு அவசியமே இல்லை..சரியை சரியாகவே காட்டி இருக்கலாம்.”

“புரியுதுடா”

“ ஒரு படம்பார்க்கும்போது அதுலநிறைய பொசிட்டிவிட்டி இருந்தால், சொல்ல வர்ர விஷயம் இன்னும் நல்ல பதியும்ங்குறது என் கருத்து!”

“கண்டிப்பா அதுல எனக்கும் உடன்பாடு இருக்கு. மகாபாரதத்தை எடுத்துக்கோயேன்!அதில் நிரந்த நல்லவங்கன்னு யாருமில்ல நிரந்தர கெட்டவங்கன்னு யாருமில்ல. எல்லாருக்குமே ஒருநியாயம் இருக்கு.சகுனிக்கு கூட அவரின் செயல்களுக்கு ஒரு நியாயம் இருக்கு! கிருஷ்ணரை க்ரேட்டு காட்டுறதுக்கு ஒரு சகுனி அவசியம் இல்லை! அதே மாதிரி கர்ணன் சிறந்தவன்னு சொல்றதுக்கு அர்ஜுனனை தாழ்த்தனும்னு அவசியம் இல்லை.! சோ அந்த புரிதல் எனக்கும் இருக்கு கண்ணு”என்றான்வெற்றி.

“ப்பா…இந்த தெளிவு உன்னை எங்கேயோ கூட்டிட்டு போகப்போகுது!” என்று மெச்சுதலும் கேலியும் கலந்த குரலில் சொன்னாள் கண்மணி.

“சரி இப்போ சுதர்சனாவுடைய அப்பா அம்மாவை ஏன் பார்க்க போறோம்?”

“பின்ன அவங்க பொண்ணு பட்த்துல நடிக்க போறானு அவங்களுக்கு தெரிய வேண்டாமா?” மீண்டும் கண்மணியை ஆச்சர்யப்படுத்தினான் வெற்றி.

“என்னடா சொல்ற? இது ரொம்ப ரிஸ்கு இல்லையா? சுதர்சனா ஒத்துகிட்டாளா? “

“ஒத்துக்க வெச்சேன் கண்ணு. அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு ..ஷி டிசர்வ்ஸ் அ லைஃப்” என்றான் வெற்றி.

“சட்டரீதியா ப்ரச்சனை வந்தால்?”

“அதுக்குத்தான் ஒரு ஏசீபீ நண்பன் இருக்கானே! ராகவன் கிட்ட பேசுறேன்”.

கண்மணியுடன் சுதர்சனாவின் பெற்றோரை சந்தித்தான் வெற்றி. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே துவண்டு விட்டிருந்த தாக்கம் அவர்களிடம் காண முடிந்தது. வெற்றியின் முடிவும் திட்ட்த்தையும் கேட்டவர்கள் முதலில்  கொஞ்சம் யோசித்தாலும் அவர்களின் மகளுக்கு நல்லதொரு வாழ்வு அமைந்தாலேபோதுமென அவனையும் இறைவனையும் வேண்டி கொண்டனர்.

இந்த வையகத்தில் நாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப முடிந்த உறவு யாதென்று கேட்டால் பெற்றோர். காரணம் நாம் அவர்களின் படைப்பு, அவர்களின் கனவு, அவர்களின் உயிர் ஆதாரம். எல்லா பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகளை பாசமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வேருன்றி நிற்கும்.

ஆனாலும் சிலர் அப்படி இருப்பதில்லை. அடிப்படையில் அவரவர் வாழ்க்கையில் கண்டகசப்புகளும் வலிகளும் அவர்களை ஒரு பெற்றோர் என்ற நிலையை உணர விட வைக்காமல் இருந்திருக்கலாம். சில நேரம் சுயநலமும் இதற்கு காரணம் ஆகலாம்? அர்ப்பணாவின் பெற்றோர் எப்படி?

ராகவேந்திரனிடம் பேசிவிட்டு நிமிர்வாய் சாலையை நோக்கி நடந்தாள் அர்ப்பணா. அவளது மேனஜர் அடையாளம் சொன்ன காரை அவள் நெருங்கும்போதே பைக் உரும்மும் சத்தம் கேட்டது.சத்தம் கேட்ட திசையில் இருந்தவன் ராகவன் தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.