(Reading time: 12 - 24 minutes)

13. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

விரிந்து கிடந்த ஓலைச் சுவடியைப் பார்த்த அனைவருக்கும் வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கித் தவித்தன..

“தியா இந்த ஓலைச்சுவடியை எடுத்திட்டுக் கோயிலுக்குப் போய் அடுத்தது என்னன்னு முடிவு பண்ணுங்க..”,என்ற அகிலன் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றது..

நீரில் நனைந்து எழுந்த சுஜன் அந்த ஓலைச்சுவடியைப் பார்த்து,”வாவ்.. ரொம்ப வருடங்களாக இந்த ஓலைச்சுவடி பெட்டிக்குள் அடைந்து கிடந்ததுனு சொன்னா யாருமே நம்பமாட்டாங்க இல்ல..??”,என்றான் ஆச்சர்யமாக..

“ஆமா அண்ணா..”,என்றபடி ஓலைச்சுவடியை கையில் எடுத்து சுஜனிடம் நீட்டினாள்..

இரண்டடி பின்னடைந்த சுஜன்,”இதை நீயே வெச்சிரு.. அகிலன் சொன்னதை நீ கேட்கலையா..?? இதற்கு உரியவங்க மட்டும் தான் இதை எடுக்கனும்னு சொல்லுச்சு..”,என்றான்..

“உனக்கும் இந்த ஓலைசுவடிக்கும் இங்கிருந்து போன அந்த பாம்பிற்கும் ஏதோ பந்தம் இருக்குன்னு நினைக்கறேன்..”,என்றான் எழில்..

“தெரியல எழில்.. இங்க நடக்கும் விஷயங்கள் ரொம்ப புதிரா, புரிஞ்சுக்க முடியாததாகவும் இருக்கு..”,என்றாள் தியா..

“சரி.. இருட்டுது வாங்க நாம் கோயிலுக்கு போய் மற்றதெல்லாம் பேசிக்கொள்ளலாம்..”, என்ற ரிக்கி தியாவிடம் திரும்பி,”இந்த ஓலைச்சுவடியை பெட்டியில் வைத்து நீங்களே எடுத்துட்டு வாங்க..இப்போ இதை பற்றி இங்க ஆராய்ச்சி செய்ய வேண்டாம்..”,என்றான்..

சரி என்பது போல் தலையசைத்த ஓலைச்சுவடியை பெட்டியில் அடைத்து கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள் அனைவருடன்..

கோயிலை நெருங்கியதும் சுஜன்,”தியா நீங்க எல்லாரும் கோயிலுக்குப் போங்க.. நான் கொஞ்சம் ரெப்ரெஷ் ஆயிட்டு வரேன்..”,என்றபடி விடைபெற்றுச் சென்றான்..

ழக்கம் போல் கல் மண்டபத்தில் சென்றமர்ந்த அனைவரும் தத்தமது சிந்தனையில் ஆழ்ந்தனர்..

நொடிகள் நிமிடங்களாக கரையத் துவங்க அந்த அமைதியைக் காண சஹிக்காது அதை கலைக்க அங்கு வந்து சேர்ந்தது அகிலன்..

“அந்த ஓலைச்சுவடியில் என்ன எழுதி இருக்குன்னு பார்க்காம ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க..??”

“சுஜன் அண்ணா வரட்டும் அகிலா.. அப்புறம் அதை பார்க்கிறோம்..”,என்றாள் தியா..

அவன் வரமாட்டான் என்று யாருக்கும் கேட்காத வண்ணம் முணுமுணுத்த அகிலன்,”நேரம் ஆகுது பார்.. அவனுக்கு போன் போட்டுக் கேள்..”,என்றது..

சரி என்பது போல் தலையசைத்தவள் சுஜனுக்கு அழைத்தாள்..

ரண்டாம் ரிங்கிலேயே போனை எடுத்த சுஜன்,”இப்போ தான் உனக்கு கூப்பிடலாம் பொன் எடுத்தேன் தியா..”,என்றான்..

“சொல்லுங்க அண்ணா.. என்ன விஷயம்..??”

“வீட்ல இருந்து கூப்டு இருந்தாங்க மா.. என் க்ளோஸ் ரிலேஷன் ஒருத்தவங்க இறந்து விட்டார்கள்.. சோ என்ன வர சொல்றாங்க..”,என்றான் குரல் கரகரத்த படியே..

“ஓ.. சரி சரி அண்ணா.. நீங்க கிளம்புங்க.. டவுனுக்கு கொண்டு போய் விட வரவா..??”,என்று கேட்டாள்..

“இல்லைமா பரவாயில்லை.. இங்க வேலை செய்யறவர் டவுனுக்கு போறாராமா.. அவரோடவே போய்க்கிறேன்..”

“சரி அண்ணா.. பார்த்துப் போங்க.. போயிட்டு கால் பண்ணுங்க..பை..”

பை தியா என்றபடி எதிர்முனை வைக்கப்பட்டதும் சுஜன் கூறியதை அவர்களுடன் பகிர்ந்து கொண்டவள் அடுத்தது என்ன என்பது போல் அனைவரையும் பார்த்து வைத்தாள்..

“தியா.. நீ அந்த பெட்டியை திற.. அந்த சுவடியில் என்ன எழுதி இருக்குன்னு பார்க்கலாம்..”,என்றாள் க்ரியா ஆர்வமாக..

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அந்த பெட்டியை திறந்து சுவடியை வெளியில் எடுத்தாள்..

மீண்டும் அவ்வெழுத்துக்கள் அனைவர் பார்வையிலும் விழுந்து ஒரு சுவாரஸ்யத்தை உருவாக்கியது..

ஆக வநவ கோன்

கெள ரங்கன் வீய

உகன்னப் பொறி

அலரி இறும் பூது

இரண்டு மூண்று முறை அதனை படித்துப் பார்த்த எழில்,”எனக்கு எதுவும் விளங்கல..உனக்கு ஏதாவது விளங்குதா..??”,தீவிரமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்த மயாவின் காதைக் கடித்தான்..

“உனக்கு ஒன்னும் விளங்கவில்லை என்றாலும் ஏதோ தீவிரமாக சிந்திப்பது போல் முகத்தை வைத்துக்கொள்..அப்போ தான் ஒரு கெத்தை மெயின்டெயின் பண்ணமுடியும்..”,எழிலின் வார்தகைகள் ஒட்டுக் கேட்ட அகிலன் ரகசியம் போலவே எழிலின் காதில் மொழிந்து அவனை கடுப்படிக்கும் வேலையை செவ்வனே செய்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.