(Reading time: 12 - 24 minutes)

“இந்த மாதிரி மேப்பை நான் முன்னமே எங்கயோ பார்த்தமாதிரி இருந்தது.. அதான் யோசிச்சேன்..”,என்றான்..

“நம்ம காலேஜ் ப்ரொபெஸர் யார் கிட்டயாவது இந்த மாதிரி பார்த்திருப்ப..”,என்றவள் தியாவிடம்,”நீ என்ன இன்னமும் யோசிச்சிட்டு இருக்க..??”,என்று கேட்டாள்..

“ஒண்ணுமில்ல மயா..”,என்றுவிட்டு எழிலிடம்,”உங்க ஊருக்கு பக்கத்தில் ஒரு மலை இருக்குன்னு சொன்னியே.. அதற்குப் பெயர் அலரி மலை தானே..”,என்றாள்..

“ஹேய் ஆமாம் தியா.. அப்போ அந்த சுவடியில் குறிப்பிட்டிருக்கும் இடம் எங்க ஊர்ல இருக்கும் அந்த மலையா..??”,என்றான் வியப்பாக..

“இருக்கலாம்.. நல்லா யோசிச்சு சொல்லு அங்க ஏதாவது சிவன் கோயில் இருக்கா..??”,என்று கேட்டாள் தியா..

சற்று யோசித்தவன்,”தெரியலை தியா.. ஆனால் அந்த மலையில் ஒரு பழைய கோட்டை ஒன்னு இருந்ததா சொல்லுவாங்க.. மோர் ஓவர் அது வெஸ்டேர்ன் காட்ஸோட எல்லையில் இருக்கு.. ரொம்ப அடர்த்தியான மலை..பெருசா அங்க யாரும் போக மாட்டாங்க..”,என்றான்..

“அது ரொம்ப பெரிய மலையா..??”,என்றான் ரிக்கி..

“இல்லை பழனி மலை அளவிற்கு தான் இருக்கும்.. பட் காட்டுப் பகுதி..”,என்றான்..

“ஏன் தியா அந்த மலையைப் பற்றி கேட்கறீங்க..??”,இது விக்கி..

“நம்ம அடுத்து அங்க தான் போக போறோம்னு நினைக்கறேன்..”,என்றாள்..

“அங்கையா..?? இந்த சுவடியை நம்பி அங்க போகனுமா..??”,என்றான் எழில்..

“தெரியலை.. போக வேண்டி வரலாம்ங்கறது என்னுடைய ஒரு அனுமானம்..”,என்றாள் தியா..

“சரி அதை விடுங்க.. இந்த சுவடியில் உள்ள முதல் இரண்டு வரி என்ன சொல்ல வருது..”,என்று கேட்டான் ரிக்கி..

“பீஷ்மரை வீழ்த்த போரில் கையாண்ட ஏதோ ஒன்றை குறிக்கிறது அந்த வரிகள் அப்படீங்கறது மட்டும் புரியுது.. அந்த வரிகள் மே பீ அம்புப் படுக்கையையோ, அம்பையையோ, கிருஷ்ணரையோ இப்படின்னு எதை வேண்டும் என்றாலும் குறிக்கலாம்.. கரெக்ட்டா என்னென்னு தெரியவில்லை ரிக்கி..”,என்றான் எழில்..

“இனி அடுத்து என்ன பண்றது..”,என்றாள் மயா..

“எழிலின் ஊருக்குச் செல்லுங்கள்.. கண்டிப்பா அங்க உங்க எல்லோருக்கும் ஒரு முடிவு கிட்டும்..”,என்றது அவர்களது உரையாடலைக் அவ்வளவு நேரம் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அகிலன்..

 “நீ சொல்வது போல் சட்டுன்னு எதையும் ஆராயாமல் முடிவு பண்ண முடியாது அகிலன்.. ஆச்சார்யா சார் கிட்டை இதை பற்றி டிஸ்கஸ் பண்ண வேண்டும்.. அவர்தான் அடுத்த முடிவை எடுப்பார்..”

ஒரு மாதிரி முகத்தை சுழித்த அகிலன்,“உங்க ஆச்சார்யா சாரும் என் முடிவைத் தான் எடுப்பார்..”,என்றது அகிலன் திடமாக..

இவர்களின் உரையாடல் சண்டைக்கு அடித்தளம் போடுவது போல் இருந்ததால்,”அங்க போறதை பற்றி சார் வந்ததுக்கு பிறகு முடிவு செய்து கொள்வோம்.. இப்பொழுது போய் டின்னர் சாப்பிட்டு விட்டு தூங்கலாம்..”,என்ற தியா கூடாரம் நோக்கி செல்லத் துவங்கினாள் அனைவரையும் அழைத்தபடியே..

எழிலும் அகிலும் ஹீரோக்கள் வில்லன்களை போல் முறைத்துக்கொண்டு அவளை பின் தொடர்ந்தனர்..

மாவாசை இருள் செழுவூரை இருளடைய செய்திருக்க ஒரு டார்ச்சுடன் சருகு காட்டிற்குள் தன் பின்னால் ஒரு உருவம் நான்கு உருவங்கள் தொடர்வது தெரியாமல் நுழைந்தான் சுஜன்..

ஆந்தையின் சத்தமும் எங்கோ கேட்கும் ஓநாய்களின் சத்தமும் மனதிற்கு சிறு திகிலை  உருவாக்கினாலும் அதை வெளிக்காட்டாதவாறு கால்கள் சருகுகளில் புதையப் புதைய முன்னேறிக் கொண்டிருந்தான் அவன்..

அன்று மாலை அவன் விழுத்த குட்டையின் அருகில் வந்ததும் நின்றவன் சுற்றியும் முற்றியும் யாராவது இருக்கிறார்களா என தான் கொண்டு வந்திருந்த எமெர்ஜென்சி லாம்பை வைத்து பார்க்கலானான்..

அவனை தொடர்ந்து வந்துகொண்டிருந்தவர்கள் அவன் செய்யப் போகும் காரியம் உணர்ந்து அருகிலுள்ள மரங்களுக்குப் பின் ஒளிந்து கொண்டதால் அவர்கள் பின் தொடர்வது சுஜனுக்குத் தெரியாமல் போனது..

கொண்டு வந்திருந்த பெரிய இரும்பிலான ஒரு கம்பியை எடுத்தவன் அதனை தான் விழுத்த குட்டையில் விட்டு அதன் ஆழத்தை முதலில் அறிந்து கொள்ள விழைந்தான்..

கம்பி நனைந்திருந்த அளவை வைத்து அந்தக் குட்டை தனது நெஞ்சுப் பகுதி வரைதான் இருக்கும் என கணக்கிட்ட படி தான் கொண்டு வந்திருந்த டார்ச் லைட்டுடன் கூடிய காகில்ஸ் அணிந்தபடி குட்டைக்குள் மெதுவாய் இறங்கத் துவங்கினான்..

அடிக்கொரு சறுக்கல் ஏற்ப்பட்டாலும் தான் உள்ளிருந்து எடுக்கப் போகும் அந்த விலைமதிப்பில்லா ஒரு பொருளின் மேல் கொண்ட மோகத்தால் கவனமாக இறங்கினான் மிகவும் கவனமாக..

நீருக்கு அடியில் மூச்சை இழுத்து பிடித்தபடியே மூழ்கத் தொடங்கினான் அப்போருளுக்காய்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.