(Reading time: 12 - 24 minutes)

இருள் சூழ்ந்த இரவென்பதால் சுஜனின் கண்களுக்கு முதலில் ஒன்றும் தெரியவில்லை..

நீருக்குள் தன்னை சிறிது நேரம் பழக்கப்படுத்தியவன், நீருக்குள் அன்று மாலை தான் கண்ட கல்லை தேடத் தொடங்கினான்..

குட்டையின் ஓரத்தில் அவன் மாலையில் கண்ட கல் பல்லிளித்த படி இருப்பதை கண்டுபிடித்தவன் தன் பலம் கொண்ட மட்டும் அதனை குட்டை மண்ணிலுருந்து வெளியில் எடுத்து வெளியே தான் விரித்து வைத்திருந்த துணியின் மேல் தூக்கிப் போட்டுவிட்டு குட்டையை விட்டு வெளியேற ஒற்றைக் காலைத் தூக்கினான்..

அந்தோ பரிதாபம் அவன் அக்காலைத் தூக்கிய வேகத்தில் மற்றொரு கால் குட்டையில் சிக்கிக்கொண்டு வெளி வர மறுத்தது..

தன் பலம் முழுதும் பிரயோகிக்க துவங்கிவனுக்குத் தான் புதைகுழியில் மாட்டியிருப்பது அப்பொழுது தான் மண்டையில் உரைத்தது..

“ஐயோ.. யாராவது காப்பாற்றுங்கள்...”,என்று சத்தமாக அலறத்துவங்கினான் சுஜன்..

இவனது அலறல் சத்தம் கேட்டும் மரத்திற்கு பின் மறைந்திருந்தவர்கள் அசையாமல் நின்றிருந்தனர்..

“ஐயோ அம்மா.. ரொம்ப இழுக்குது.. யாராவது காப்பாற்றுங்களேன்..”,என்று மீண்டும் கத்திய சுஜனை காப்பாற்றுவது போல் ஒரு கயிற்போன்ற ஒன்று வந்து விழுத்தது அவன் கையில்..

பிடிப்பொன்று கிடைத்த மகிழ்ச்சியில் அதை கெட்டியாக பிடித்தான் சுஜன்..

அவனது பிடிப்பு இறுக அவன் கையிலிருந்த பாம்பு சீறிக்கொண்டு அவன் நெற்றிப் பொட்டில் கொத்து விட்டு விட்டுக் கரையில் ஏறி சருகுக்குள் மறைந்து போனது சுஜனின் உடல் அந்த குட்டைக்குள் மூழ்கிப்போனது போல்..

சுஜன் மூழ்கியவுடன் அங்கு வந்த மறைந்திருந்த நால்வரும் அந்த குட்டையின் அருகே வந்தனர்..

சுஜன் தூக்கிப் போட்ட அந்த கல்லை கையில் எடுத்த ஒருவன்,”உன்னை வைத்து இந்த விலைமதிப்பில்லா கல்லை எடுத்தது போல் மற்றவர்களை வைத்து அந்தப் புதையலை எடுத்துக் காட்டுவேன்..”,என்று பலமாக சிரிக்கத் துவங்கினான்..

இவனது எண்ணம் நிறைவேறுமா..??

வணக்கம் நண்பர்களே..

அவரச அவரசமாக் எழுதிய பதிவு.. எழுத்துபிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்..

பதிவு எப்படி இருக்கிறது என்பதை படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

இந்த பதிவில் குறையோ நிறையோ எதுவாக இருந்தாலும் தயங்காமல் குறிப்பிடுங்கள்..முடிந்த வரை குறைகளை சரி செய்து  கொள்கிறேன்..

உங்கள் கருத்துக்களுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்..

நன்றி..!! 

வியூகம் வகுக்கலாம்...

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.