(Reading time: 10 - 19 minutes)

14. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

வான்மகன் வானை முத்தமிட அழகாய் விடிந்தது அக்காலைப் பொழுது..

ஒரு சிறு மர இருக்கையில் அமர்ந்தவாறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ண ஆச்சார்யா..

“சார்..”,அவரின் கூடாரத்தின் முன்னின்றபடி அவரை விளித்தான் எழில்..

அவனது குரலைக் கேட்டு முதலில் திகைத்தவர்,”எஸ் கம் இன்..”,என்றார் கம்பீரமாக..

“சார் நேற்று சருகு காட்டில்..”,என்று தொடங்கியவனை தடுத்தவர்,”சுஜன் அதைப் பற்றி சொல்லிட்டுத் தான் கிளம்பினான்..”,என்றார்..

“ஓ கே சார்..”

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்,“அந்த ஓலைச்சுவடி எங்க..??”

“தியாக்கிட்ட இருக்கு சார்..”

“சுவடியை கோயிலுக்குக் கொண்டு வரச் சொல்லு எழில் தியாக்கிட்ட.. அடுத்து என்னனு முடிவு பண்ணனும்..”

“ஓ கே சார்.. இப்போவே கொண்டு வர சொல்றேன்..”,என்றபடி கிளம்பியவனை தடுத்தவர்,”எழில்.. பத்து மணிக்கு எல்லாரும் அசம்பிள்..”,என்றபடி அந்த இருக்கையில் சாய்ந்து கண்களை மூடினார்..

கோயிலின் முகப்பில் மயாவுடன் தியாவும் எழிலும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்..

“என்ன மயா சொல்ற..??”,சற்று அதிர்ச்சியாக எழில் கேட்டான் என்றால்,தியாவோ,”இப்படியா பொறுப்பில்லாம இருக்கறது..??”,என்று கோபம் கொண்டாள்..

“நான் என் டேபிளுக்கு உள்ள தான் அந்த மேப்பை வெச்சிருந்தேன்.. ஆனால் அது எப்படி காணமல் போச்சுன்னே தெரியல..”,அழுதுவிடுபவளைப் போல் சொன்னாள்..

“டேபிளுக்குள்ள வெச்சது எப்படி மயா காணமல் போகும்..??”,எழிலும் அவளிடம் கோபம் கொண்டான்..

“அநேகமா இவ அதை தூக்கக்கலக்கத்தில் எங்கையோ வெச்சிருப்பான்னு நினைக்கறேன்..கண்டுபிடுத்து விடலாம்..”,என்ற தியா,”ஆனால் இப்போ சார் அந்த மேப் எங்கன்னு கேட்டா என்னனு சொல்றது..??”

“அவர் கிட்ட நான் அதைப் பற்றி இன்னும் சொல்லல தியா..”,என்றான் எழில்..

“ஏன்..??”,என்றாள் மயா..

“அப்போ அந்த மேப் நமக்குக் கிடைத்தது ஸ்ட்ரைக் ஆகல..”,என்றான்..

“விக்கி ரிக்கி அவர்கிட்ட சொல்லிருந்தாங்கனா..??”,தியா யோசனையாக..

“என்ன எங்க தலை உருளுது..??”,என்று கேட்டான் அவர்களது பேச்சை அரைகுறையாக கேட்ட விக்கியும் ரிக்கியும் வ்ருதுஷ் மற்றும் க்ரியாவுடன்..

“அது வந்து..”,என்று தொடங்கிய எழில் எல்லாவற்றையும் அவர்களிடம் கூறினான்..

“ரிலாக்ஸ் காயஸ்.. அந்த மேப்பை தியா சொல்றது போல் அப்புறம் தேடிக்கொளாலாம்.. தி மேப் இஸ் இன்கம்ப்லீட்.. சோ அதனால் இப்போ நமக்கு அதை வைத்துக் கொண்டு எந்த யூஸ்ஸும் இல்லை..”,என்றான் ரிக்கி..

“நானும் அதான் நினைத்தேன்”,என்ற தியா,”அகிலனைப் பற்றி சார்க்கிட்ட..”,என்று துவங்கியவளைத் தடுத்த க்ரியா,”அகிலனைப் பற்றியும் இப்போ அவர்க்கிட்ட சொல்லவேண்டாம்..”,என்றாள் க்ரியா..

“ஏன் அப்படி சொல்றீங்க க்ரியா..??”,என்று கேட்டான் ரிக்கி..

“அவர் அகிலனை நேரடியாக பார்க்காமல் அவனைப் பற்றி நாம் கூறினால் கண்டிப்பாக நம்ப மாட்டார்..”

“ஆமா ரிக்கி க்ரியா சொல்றது சரிதான்..பெரியப்பா நாம சொல்றதை கண்டிப்பா நம்பமாட்டார்..”,என்றான் விக்கி..

“இதில் இன்னொன்றையும் யோசிக்க வேண்டும்.. அகிலன் அவ்வளவு எளிதாக அவரிடம் பேசும் என்று எதிர்பார்க்க முடியாது..”,என்றாள் க்ரியா..

“ஏன் அப்படி சொல்றீங்க..??”,இது ரிக்கி..

“எனக்கு அகிலை என்னோட நாலு வயதில் இருந்து தெரியும்.. எத்தனையோ முறை அவனை நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட இன்ட்ரோ பண்ண ட்ரை பண்ணியிருக்கேன்.. பட் நோ யூஸ்..”

“உங்களுக்கு அகிலை எப்பொழுது தெரியும்...??”,வ்ருதுஷிடம் கேட்டாள் மயா..

“நயன்த் லீவிலிருந்து தெரியும்..”,என்றான்..

“ஓ.. அப்போ இதை பற்றி சார்க்கு சின்ன க்ளூ கூட கொடுக்க வேண்டாமா..??”,என்று கேட்டான் எழில்..

 “இப்போதைக்கு வேண்டாம்..”என்ற தியா,”எழில் சுஜன் அண்ணா கால் பண்ணாங்களா..??”

“காலையில் டெக்ஸ்ட் பண்ணார் தியா.. ரீச் ஆகிட்டாராமா..அப்புறம் அவர் ஒரு டூ மந்த்ஸ்க்கு லீவ்”,என்றான்..

“என்னடா சொல்ற..?? டூ மந்த்ஸ் ஆ..??”,என்று கேட்டாள் மயா..

ஆமாம் என்றவன்,”அங்க பாருங்க சார் வர்றார்..”,என்றபடி அமைதியானான்..

சிற்பக் கோயிலின் கல் மண்டபத்தில் சுவடியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆச்சார்யாவையே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.