(Reading time: 10 - 19 minutes)

“அது வந்துங்க.. அந்த மலைக்கு சுள்ளி பொறுக்க ஆம்பளைங்க பொம்பளைங்கன்னு வித்யாசம் பார்க்காமல் போறது வழக்கம்.. பத்து பதினைந்து வர்ஷங்களுக்கு முன்னால் அப்படி போனவங்கள்ள ஒன்னு இரண்டு பேர்ன்னு அடிக்கடி காணாமல் போனாங்க..”

“...............”

“எங்க ஊர்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா குறி கேட்கறது வழக்கம்.. இந்த மாதிரி காணமல் போவது அடிக்கடி நடந்தததால கருப்பங்கிட்ட (கருப்பணசாமி – ஊர் எல்லையின் காவல் தெய்வம் – மலைமக்களின் குலதெய்வம்) குறி கேட்டாங்க..”

“...............”

“அப்போ ஒரு பெரியவருக்கு சாமி வந்து மலைக்குள்ள யாரும் இருபத்தைந்து வருடங்களுக்கு போக கூடாதுனும்..மீறி போனால் அசம்பாவிதங்கள் நடக்கும்ன்னும் சொல்லிருக்கார்.. அவரது வாக்கை மீறி நிறைய பேர் போனாங்க.. ஆனால் யாரும் திரும்பி வரல..”,என்றான்..

“இதெல்லாம் எப்போ நடந்தது..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“இது நான் பிறக்கறது முன்னாடி நடந்துச்சு..”

“அப்படீன்னா இருபத்தி ஐந்து வருடத்துக்கு மேல் ஆகியிருக்குமே..?? அப்புறம் ஏன் யாரும் அங்க போறதில்லை..?”,என்று கேட்டாள் தியா..

“இந்த மலைக்கு போனவங்க பாதி பேர் பொழப்புக்காக வெளியூர் போயிட்டாங்க.. மீதி இருக்கறவங்க எல்லாம் வயசானவங்க..”,என்றான்..

“வயசானவங்க யார்க்கிட்டயாவது கேட்டா அந்த மலையைப் பற்றி ஏதாவது தெரியுமா..??”,என்று கேட்டாள் மயா..

“பெருசா தெரியாதுன்னு நினைக்கறேன்.. ஒரு நிமிஷம் இருங்க..”,என்றவன் அவனது வீட்டிற்கு எதிரில் உள்ள வீட்டிற்குள் சென்று ஒரு மூதாட்டியுடன் திரும்பினான்..

“இந்த பாட்டி பேர் செங்காயி.. அலறி மலையைப் பற்றி நல்லாத் தெரிஞ்சவங்க..”,என்றான்..

அவரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவர்கள் அந்த மலையைப் பற்றி கேட்கத் துவங்கினர்..

“பாட்டி அந்த மலையைப் பற்றி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன்..”,என்றாள் க்ரியா..

“அது மலைன்னு சொல்றதை விட வனம்னு சொல்றது தான் பொருந்தும் பிள்ளைகளா.. ரொம்ப அடர்த்தியானது.. சூரிய வெளிச்சம் பெருசா அந்த வனத்துக்குள்ள விழாது.. அதுக்குன்னு கருகும்முனும் (இருட்டாக) இருக்காது.. வெயில் காலத்திலும் சாரலடிக்கும்..”,என்றார்..

“அங்க தங்கறது வசதி இருக்குமா..?? அதாவது வெட்டி வெளி மாதிரி..??”,இது தியா..

“காட்டுக்குள்ள வெட்ட வெளியெல்லாம் இருக்காது பிள்ளைங்களா.. பாதி மலைக்கு மேல தான் பாற பாறையா கொஞ்ச தூரம் இருக்கும்னு சொல்லுவாங்க..”

“யானை நடமாட்டம் இருக்குமா..??”,என்று கேட்ட தியா கேள்வ்வியாக நோக்கியவர்களைக் கண்டு,”என்ன மாதிரி விலங்குகள் இருக்குன்னு தெரிஞ்சுதானாத் தான் அதுக்கு ஏற்றார் போல் ப்ரிப்பேர் பண்ண முடியும்..”,என்றவள் எதிரில் அமர்ந்திருந்த அந்த முதியவரிடம் அதைப் பற்றி வினவவும் செய்தாள்..

“யானை மட்டும் இல்லம்மா சிறுத்தை பாம்பு சின்னச் சின்ன விஷப்பூச்சீன்னும் நிறைய இருக்கு..”,என்றார்..

“பாட்டி அந்த மலையில் ஏதாவது சிவன் கோயில் இருக்கா..?”,இது ரிக்கி..

“ஒரு சின்ன முருகன் கோயிலொன்னு மட்டும் தான் அடிவாரத்துல இருக்கு பேராண்டி.. எனக்குத் தெரிஞ்சு சிவன் கோயிலெல்லாம் இல்லை..”,என்றவர்,”வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..??”,என்று கேட்டார் மூச்சு வாங்கியபடியே..

அவரின் நிலைமையை உணர்த்தார் போல் இல்லை என்று தலையசைதவர்கள் அவரிடமிருந்தும் வேலனிடமும் விடைபெற்று வாஞ்சிமாங்கூடலுக்கு பயணப்பட்டனர்..

நிலவின் கிரணங்கள் தன் மேல் விழ அதை ரசித்தவாறு க்ரியாவுடனும் வ்ருதுஷுடனும் பேசிக்கொண்டிருந்தாள் தியா..

“தாத்தாகிட்ட நீங்க இரண்டு பேரும் இங்க இருக்கறதை சொல்லிட்டீங்களா..??”,என்று கேட்டான் வ்ருதுஷ்..

“சொல்லி நல்லா வாங்கியும் கட்டிக்கிட்டோம் டா..”,என்ற க்ரியா,”நான் குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வரேன்..”,என்றபடி கீழே சென்றாள்..

“தியா எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..”,என்றான் வ்ருதுஷ்..

“ஹ்ம்.. கேளுங்க வ்ருதுஷ்..”

“மர மேப்பை நீங்க எடுத்து வெச்சுட்டு மயா தொலைச்சுட்டாங்கன்னு ஏன் பிளேட்டை திருப்பிப் போட்டீங்க..??”

வியூகம் வகுக்கலாம்...

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.