(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 20 - தேவி

vizhikalile kadhal vizha

லரின் திகைத்த முகத்தை பார்த்தவன், சட்டேன்று அவளின் கைகளை விட்டு விட்டான்.

பின் அவளை இயல்பாக்கும் முயற்சியாக

“மலர் .. இந்த வேலை உங்களுக்கு புரிஞ்சுதா ? ஈஸியா பண்ண முடிஞ்சுதா ?”

மலர் மனதுக்குள் என்னடா இது.. இப்போ தான் ரொமாண்டிக் ஹீரோ மாதிரி கையெல்லாம் பிடிச்சார்... அதுக்குள்ளே ப்ரோபாசர் ஆ மாறிட்டார்... இவருக்குள்ளே ஒரு வேளை அந்நியன் யாரும் ஒளிஞ்சுட்டு இருப்பங்களோ.. என்று எண்ணினாள். ஆனாலும் அவன் கேள்விக்கு பதிலாக

“ஒன்னும் கஷ்டம் இல்லை சார்.. நீங்க கொடுத்த போன வருஷ ரிப்போர்ட் பார்த்து பண்னினதாலே சீக்கிரம் முடிச்சுட்டேன்..”  என்றாள்.

இவர்கள் பேசிக்கொண்டே மீட்டிங் ரூமிற்கு வந்து விட,

அவளின் ரிப்போர்ட் வைத்து எல்லோருமாக கலந்து பேசி ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்து அதை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அவளின் வேலை திறமையை எல்லோரும் பாராட்டினர்.

அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு முதல் முதலாக தனியாக செய்யும் வேலை.. அதற்கு கிடைத்த பாராட்டு அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது.

அன்றைய மீதி பொழுது வகுப்புகள் எடுக்கப்பட்டு கழிய, மாலையில் வீட்டிற்கு கிளம்பினாள் மலர். சரியாக அவள் வண்டி எடுக்கவும் , செழியனும் கிளம்பினான்.

காலையில் சீக்கிரமாக வந்ததால் இருவர் வண்டியும் முதலில் இருக்க, பின்னால் உள்ள வண்டிகள் எடுப்பதற்காக காத்து இருந்தார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் கவனியாத வண்ணம் செழியன் மலரிடம்.

“மலர்.. எப்படி இருக்க? இந்த நாலு நாள் என்னை மிஸ் பண்ணினியா?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்.. “

“நானும் தாண்டா.. எப்போ உன்னை பார்ப்போம் என்று இருந்தது.. அதான் காலையில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு கையை பிடிச்சுட்டேன்.. சாரி..”

“ஹ்ம்ம்.. பரவா இல்லை.. ஆனால் காலேஜ்லே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.. “

“புரியுதடா.. இனிமேல் இந்த மாதிரி நடக்காது.. “

“ஹ்ம்ம்.. சரி,..”

“தினமும் இந்த டைம்லே இங்கே சந்திக்கலாம்... ஒரு பிப்டீன் மினுட்ஸ் பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம் சரியா..?”

“சரி...”

மற்ற ஆசிர்யர்கள் இருவரும் காத்து இருப்பதை பார்த்து,

“என்ன ரெண்டு பேர் வண்டியும் உள்ள மாட்டிகிட்டு இருக்கா?” என்று வினவ,

“ஆமாம் சார்.. அதான் வெயிட் செய்யறோம்” என்றா செழியன்..

எல்லோரும் சென்றதும் இவர்கள் வண்டியின் அருகில் செல்ல, மலர்

“உங்க ட்ரிப் எப்படி இருந்தது..?”

“நல்லா இருந்துதுமா.. எதிர்பார்த்த வேலை நடந்தது.. இனிமேல் அதை ரிப்போர்ட்டா மாத்தற வேலை தான் பார்க்கணும்.”

மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்தவர்கள், தங்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

தினமும் இதே போல் பார்கிங்கில் பேசிக் கொண்டு இருந்து விட்டு வீட்டிற்கு செல்வது வாடிக்கையானது..

கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்ற நிலையில், மானேஜ்மென்ட் சார்பாக பேராசிரியர்களுக்கு மீட்டிங் போடப்பட்டது..

அதில் பேசிய காலேஜ் நிறுவனர்,

“எல்லோருக்கும் வணக்கம். நம்ம காலேஜ் ஆரம்பிச்சு நூறு வருஷம் முடிய போகுது.. அதனாலே இந்த வருஷம் ஆண்டு விழாவ சிறப்பா நடத்தனும்நு நம்ம மானஜ்மென்ட் முடிவு பண்ணிருக்கோம்.. உத்தேசமா ஒரு ப்ரோக்ராம் லிஸ்ட் போட்டு வச்சுருக்கோம். இதில் மாற்றங்களோ, இல்லை வேறு எதுவும் சேர்ப்பதோ பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.. நாம ஒரு முடிவு செஞ்சு students கிட்டே இதை கொண்டு போனால், அவங்க கருத்துக்களும் கேட்டுக்கலாம்.. இதோட ஒட்டு மொத்த பொறுப்பும் நம்ம செழியன் சார் கிட்டே கொடுக்க முடிவு பண்ணிருக்கோம்.. இதில் எல்லா department லேர்ந்தும் ஒருத்தர கமிட்டி மெம்பெர் ஆ போட்ருக்கோம்.. எல்லா ப்ரோக்ராமும் ஒழுங்கு படுத்த வேண்டிய பொறுப்பு செழியன் சார் வேலை..

இப்போ செழியன் அவர்கிட்டே இருக்கிற அந்த ரப் லிஸ்ட் வாசிப்பார்... கேட்டுட்டு உங்க கருத்துக்கள் சொல்லுங்க..”

செழியன் எழுந்து

“எல்லோருக்கும் வணக்கம்.. நம்ம நிறுவனர் பேசியத எல்லோரும் கேட்டுருப்பீங்க.. நூறாவது வருஷம் அப்படிங்கறது மிக பெரிய விஷயம்.. அதனால நாம ஒரு நாளில் இந்த கொண்டட்டத்த முடிக்க முடியாது. சோ ஒரு வாரம் பூரா கொண்டாடலாம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.