(Reading time: 6 - 12 minutes)

நான் இந்த  எவென்ட்ட மூணு பிரிவா பிரிக்க்கலாம்னு யோசிச்சு இருக்கேன்.. டலேன்ட், கலை நிகழ்ச்சிகள், ஸ்போர்ட்ஸ் எவென்ட் அப்படின்னு பிரிச்சு இருக்கேன்.. எல்லா department லேயும்.. மூணு பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு காலேஜ் லெவெலில் போட்டிகள் நடத்தலாம். அது என்ன மாதிரியான போட்டிகள் அப்படி என்பதை சுற்றறிக்கை மூலமா கொடுக்கலாம்..

அடுத்து சீப் guest அழைச்சு பண்ற ப்ரோக்ராம் தனியா ஒருத்தர் பொறுப்பெடுத்து நடத்தனும்..  அதிலே என்ன என்ன நிகழ்ச்சிகள் அப்படிங்கறத தனி அறிக்கை கொடுக்கப்படும்..

வேற எதாவது கருத்துக்கள் இருந்தா சொல்லலாம்..”

மலர் எழுந்து..

“சார்.. ஓல்ட் students அலுமினி மீட்டிங் தனியா ஒரு நாள் வைக்கலாம்.. அதற்கு சீப் guest அவங்களில் ஒருத்தரையே போடலாம்..”

“அதுதான் நம்ம காலேஜ் லே நடத்தறோம் தானே.. இதில் என்ன புதுசா இருக்கு”

“இல்லை சார்.. இது வந்து இப்போ இருபது வருஷத்துக்குள்ளே படிச்சா students தான் வராங்க.. நான் சொல்றது முடிஞ்சவரை ஐம்பதாவது வருஷம் படிச்சவங்க இருந்தா நல்லா இருக்கும் இல்லியா?”

“அது பெரிய வேலையா இருக்குமேமா.. முதலில் அவங்கள எப்படி கண்டு பிடிக்கிறது..”

“சார்.. அந்த பொறுப்ப students கிட்டே விட்டுடுலாம்.. அவங்க சோசியல் மீடியாலே போட்டு அவங்கள கண்டு பிடிப்பாங்க அப்படின்னு தோணுது..”

“ஹ்ம்ம்.. செழியன் .. இது முடியுமா பாருங்க.. “ என,

செந்தில் எழுந்து “சார்.. அப்படியே இந்த ஆண்டு விழாவ சோசியல் மீடியாவில் விளம்பரபடுத்த நம்ம கம்ப்யூட்டர் department கிட்டே பொறுப்ப கொடுத்துடலாம்..”

இப்போது செழியன் “சார்.. அப்படியே ஆண்டு விழா மலர் தயாரிக்கும் பொறுப்பை நம்ம literature department கிட்டே கொடுப்போம்..”

மீண்டும் மலர் எழுந்து “சார்.. அந்த மகசின்லேயும் நம்ம ஓல்ட் students பேட்டி இருக்கிற மாதிரி பார்த்துக்கலாம் “ என்றவள்

“சார். நம்ம கிட்டே இருக்கிற ரெகார்ட் ரூமில் இருந்து ஒரு ஐம்பது வருஷம் முன்னாடி உள்ள files கிடைச்சா ஒரளவு பழைய students விவரங்கள் தெரிய வரும்”

“ஓகே professors ...உங்க எல்லோர் கருத்துக்கள செழியன் கிட்டே சொல்லிடுங்க .. அவர் அத தொகுத்து என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம்.. இந்த பொங்கல் holidays முடிஞ்சதும் சீப் guest பார்த்து அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு நாம மேற்கொண்டு விவரங்கள் பேசலாம்.. “

என்று பேசிமுடித்து விட்டு நிறுவனர் கிளம்பி விட, செழியன் மனதில் அவர் சொல்லி விட்டு சென்ற பொங்கல் லீவ் பற்றிய எண்ணமே மேலோங்கி இருந்தது.. தன் அப்பா சொல்லியபடி பொங்கலுக்கு ஊருக்கு செல்ல வேண்டுமே.. என்ன செய்வது என்ற யோசனையாக இருந்தது..

அவன் ஏதோ யோசனைக்குள் சென்றதை பார்த்த மலர் விழிகளாலே என்ன ஆச்சு என்று விசாரிக்க, அவன் கண்ணை மூடி தலையை ஒன்றுமில்லை என்பதாக ஆட்டினான்.

தொடரும்!

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.