(Reading time: 27 - 54 minutes)

14. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

ட்காரும்மா” அருந்ததியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அவர் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் செல்வி. சற்றுமுன் அவள் ஆராய்ந்து முடித்த மருத்துவ குறிப்புகள் அவள் அருகே உள்ள மேசையில் இருந்தது. “என்னம்மா, இந்த ஆப்ரேஷனோட என் கதை முடிஞ்சுதா என்ன?” சிறிது சிரிப்பும் கிண்டலும் கலந்து அருந்ததி சொன்ன வார்த்தைக்கு அதிர்ந்து செல்வி அவர் முகத்தைப்பார்த்தாள். “அப்படிலாம் ஒன்னுமில்லம்மா உங்களுக்கு நூறு ஆயுசு, இந்த ஆப்ரேஷன் ஓபன் சர்ஜரிதான் ஆனா இப்பெல்லாம் இது ரொம்ப ஈஸி, நீங்க பயப்பிடுற மாதிரி ஒன்னுமில்ல” – செல்வி

“நீ என்னம்மா படிச்சிருக்க?” – அருந்ததி

“எம்.எஸ்.சி நர்சிங்க்” – செல்வி

“என்ன பொறுமையா எல்லா விஷயத்தையும் பார்க்கிற, நல்ல பாந்தமான பொண்ணு, அதான் விக்னேஷுக்கு உன்ன அவ்வளவு பிடிச்சிருக்கு! உன் பேர சொன்னாலே கடந்து உருகிறான் பையன்” அருந்ததி சிரித்தார், அவர் அருகே இருந்த வேலைக்கார அம்மாவும் ஆமாம் என தலையசைத்தார். அந்த தருணத்தை எப்படி எதிர்கொள்வதென தெரியாது தவித்தாள் செல்வி, அங்கிருந்து ஓடிவிட தோன்றியது செல்விக்கு.

“நான் கிளம்புறேன்மா, சாய்ந்திரமா வந்து உங்கள பார்க்கிறேன்!” – செல்வி

“ஏய், அதுக்குள்ளயேவா, கொஞ்சம் பொறு, விக்னேஷ் வரட்டும், கீர்த்தனா கூட வர்ற நேரம் தான், இந்த ரிஷி தான் எங்க தொலஞ்சானு தெரியல!” அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, வீட்டிற்குள் கீர்த்தனாவின் கார் நுழைந்தது. அடுத்த ஐந்து நொடியில் படிகளில் தாவி அருந்ததியின் அறைக்குள் வந்தாள் கீர்த்தனா. “அத்தை..” என ஓடி வந்து கட்டிலில் சாய்ந்திருந்த அவரை அனைத்துக்கொண்டாள். “இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? மீட்டிங்க் செம தூள்!” என கூறிகொண்டே எதிரே அமர்ந்திருந்த செல்வியைப் பார்த்ததும் அமைதியானாள்.

“செல்வி, இவ சரியான வாலு. பாரு செல்விகிட்ட இருந்து கத்துகோ, அவளும் பொண்ணு தான் இருக்க இடம் தெரியல, நீ வந்து ஒரு நிமிஷம் ஆகல வீடே இரண்டு படுது!” அத்தை அலுத்துகொண்டாலும் கீர்த்தனா இன்னும் அத்தையின் வாஞ்சையான பிடியில் தான் இருந்தாள்.

“ஓ, நீங்க செல்வி, விக்னேஷோட.. வுட் பீ மாறனோட தங்கை”, வாங்க, வாங்க.. – கீர்த்தனா

“மாறன உனக்கு தெரியுமா கீர்த்தனா?” – அருந்ததியின் வார்த்தையில் ஒரு நொடி திகைத்து நின்றாள் கீர்த்தனா

“மாறன் அண்ணா, ரிஷி சாரோட வொர்க் பன்றாங்க” – செல்வி

“ம்ம்.. தெரியும் எனக்கு உன்னையும் தெரியும் மாறமையும் தெரியும், ரிஷியும் கொஞ்ச நாள் ஊர சுத்தாம இருக்கானா, அதுக்கும் அந்த பையன் சவகாசம் தான் காரணம்.” – அருந்ததி.

செல்வியும் கீர்த்தனாவும் சிரித்துகொண்டனர்.

“நீங்க வாங்க செல்வி, உங்களுக்கு வீட்ட சுத்தி காட்டுறேன், விக்னேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாரு!” செல்வியை யோசிக்க விடாது அவளது கையைப்பற்றி இழுத்துபோனாள் கீர்த்தனா. அவளுடைய குழந்தைத்தனமான முகமும் வெகுளியான பேச்சும், திமிரற்ற நல்ல குணத்தாலும் செல்விக்கு அவளை பிடித்துப்போனது.

“இங்க பாருங்க செல்வி, இந்த ஸ்விம்மிங்க்பூல் நான் பிறந்தப்ப என்னோட அப்பா கட்டினாரு, ஆனா எனக்கு தண்ணீனா பயம் ஒரு நாள் கூட கால வச்சது இல்ல, எனக்கும் சேர்த்து ரிஷி தான் தண்ணீனா நல்ல ஆட்டம் போடுவான்!”. செல்விக்கு வீட்டை சுற்றிக்காட்டினாள், கூடவே அந்த இடங்களில் பதிந்திருந்த ஞாபகங்ளையும் பகிர்ந்து கொண்டாள்.

“என்னதான் வீட்டுகுள்ள ஊஞ்சல் இருந்தாலும் இந்த வேப்பமர ஊஞ்சல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆன அத்தை அதில் ஊஞ்சல் ஆடுனா கயிரு அருந்துரும்னு ஆட விட மாட்டாங்க, வாங்க இப்ப யாருமில்லல கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடலாம்” செல்வியின் கையைப்பிடித்து தோட்டத்து ஊஞ்சலை நோக்கி இழுத்துப்போனாள்.

“நீங்களும் உங்க அண்ணாவும் ரொம்ப க்ளோசா?” மெதுவாக கேட்டுவிட்டு செல்வியைப்பார்த்தாள் கீர்த்தனா. அதை மிக இயல்பாக செல்வி எடுத்துகொண்டதன் அறிகுறி தென்பட்டவுடன் இயல்பானாள்.

“ஆமா, அண்ணா தான் எல்லாம், அப்பா இல்லாததால நாங்க க்ளோஸ்!” – செல்வி

“உங்களுக்கு நேர் எதிர் நாங்க, வாயத்திறந்தாலே சண்டைதான், ஆனா நான்னா அவனுக்கு உயிர், அம்மா இல்லாததால, நான் அத்தைகிட்டயும், ரிஷி அப்பாகிட்டயும் இருக்கிற மாதிரி ஆயிட்டு, அதனால சின்ன வயசில நாங்க எலியும் பூனையும் தான், இப்போ தான் திடீர்னு சாஃப்ட் ஆயிட்டான்! உங்க வீட்டுல மாறன் ரொம்ப சாஃப்ட் இல்ல?”

“ஐயோ அவனா? நீங்க வேர அவனுக்கு துர்வாசர் அளவுக்கு கோபம் வரும், கோபம் வந்தா கையில கடச்சதல்லாம் பறக்கும். கையில சிக்கினா கன்னத்த பேத்துருவான், அவன் கோபப்பட்டா நான் ஓடிருவேன், அம்மாதான் அவன சமாதானப்படுத்துவாங்க”

“ஆனா, உங்கண்ணாவ பார்த்தா அப்படி தெரியலேயே?”

“நீங்க அவன பார்த்திருக்கீங்களா கீர்த்தனா?”

“ஆமா… போர்டு மீட்டிங்க்ல!”

“இன்னிக்கு ஒரு நாள் பார்த்தத வச்சு முடிவு பன்னிடாதீங்க, அவன் கூடவே இருந்தா தெரியும், சரியான அழுத்தமான ஆளு, ஆனா ஒன்னு பொண்ணுங்களுக்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது, என்னோட ஃப்ரண்ட்ஸ் யாராவது வீட்டுக்கு வந்தா, தெரிச்சு ஓடுவான்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.