(Reading time: 27 - 54 minutes)

செல்வியின் வார்த்தைக்கு கீர்த்தனா சிரித்தாள் மனம் முழுக்க இளமாறன் தான், அவனுடைய கன்னியமான பண்பு இன்னும் அவளை அவன் புறம் இழுத்தது. செல்வியை ஊஞ்சலில் வைத்து ஆட்டியவாரே, அவனைப்பற்றி மென்மேலும் கேட்டு தெரிந்துகொண்டாள், அவர்களுடைய நட்பு, நீ நான் என பேசும் அளவும் மலர்ந்துவிட்டது. தோட்டத்தை சுற்றி அவர்கள் நடந்துவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது விக்னேஷின் பேச்சுக்குரல் கேட்டது. “

அருந்ததியிடம் பேசிவிட்டு விக்னேஷ் களம்பும்போது, கீர்த்தனா குங்குமம் கொண்டு வந்து கொடுத்தாள், செல்வி புன்னகையுடன் எடுத்துக்கொண்டாள். “விக்னேஷ் நீங்க அடிக்கடி செல்விய கூட்டிட்டு வாங்க!” கீர்த்தனாவின் வார்த்தைகளுக்கு அவன் செல்வியின் முகத்தைப்பார்த்தான், “நீயும் வீட்டுக்கு வா கீர்த்தனா”

“கண்டிப்பாக, நீ கூப்பிடாட்டாலும் நான் நிச்சயம் வருவேன்” என புன்னகைத்தாள் கீர்த்தனா. அருந்ததியிடம் பேசிவிட்டு கீர்த்தனாவும் செல்வியும் வெளியேவர, விக்னேஷை தன் அருகில் அழைத்தார் அருந்ததி. “ஏண்டா, உன் கல்யாணம் இப்ப எந்த நிலைமையில இருக்கு?”

“அம்மா இன்னும் சம்மதிக்கல அத்தை!”

“என்னதான் சொல்லுறா அவ? அருமையான பொண்ணுடா செல்வி, உங்கம்மா வசதிபத்தாதுனு நினைக்கிறாளா என்ன?”

“இல்லம்மா அவங்க வசதிய பத்தி பெருசா ஏதும் யோசிக்கல, ஆனா அவ அப்பா பத்தி தான் யோசிக்கிறாங்க!”

“ம்ம்.. நிலைமைய எப்படி சமாளிக்கப் போற, நான் வந்து பேசவா?”

“இல்ல அத்தை நானே சரி பன்னிடுவேன்!”

சீக்கிரமா சரிகட்டி அவளை கல்யாணம் பன்னுற வழியப்பாரு!”

 “இது கொஞ்சம் பிரச்சனை தான், நேரம் வரும்போது நிச்சயம் பேசுறேன்.”

“ம்ம்.. வர வர ரிஷி மாதிரி ஆயிட்டடா நீ, அங்க என்ன நடக்குதுனு எதுவுமே சொல்ல மாட்டிக்கிற..!” அருந்ததியின் இந்த வார்த்தைகளுக்கு ஒரு புன்னகை மட்டும் தான் அவன் பதில்.

“எல்லாம் சரிடா, செல்விகிட்ட கல்யாணத்த பத்தி பேசும்போது ஒரு மலர்ச்சியே இல்லையடா, அவ விருப்பத்தை கேட்டியா நீ, இல்ல இந்த பிரச்சனையினால வருத்தப்படுறாளா?” இப்போது உண்மையான வலியை அவன் முகம் பிரதிபலித்தது. அதற்கும் அவனிடம் பதிலில்லாது கண்டு அருந்ததி, “சரி விடு சீக்கிரம் கல்யாண ஏற்பாடை பண்ணு எல்லாம் சரி ஆகும், இப்போ கிளம்பு” என சொன்னார். அவரிடம் விடைப்பெற்று விக்னேஷ் செல்வியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

சாலையை வெறித்துக்கொண்டிருந்தவளை, நொடிக்கொருமுறை பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவனுடைய பார்வை தன்னை அளப்பதை அறிந்ததால் அவன் பக்கம் திரும்பாது சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள் செல்வி.

“அம்மாகிட்ட சீக்கிரம் பேசுறேன் செல்வி! இன்னும் கொஞ்ச நாள் தான் அவங்கள பத்தி நீயெதுவும் யோசிக்க வேண்டாம்”.

அவனைத் திரும்பி ஒருமுறைப்பார்த்தாள் செல்வி, எதுவும் பேசாது மறுபடியும் சாலையை அவள் வெறிக்க..

“என் மேல நம்பிக்கையில்லையா செல்வி?” அவனுடைய அப்பவித்தனமான அந்தக் கேள்வி செல்வியின் மனதை அசைக்கத்தான் செய்தது. எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் அற்ற காதல், ஆனால் இவனுக்கு என் மேல் இப்படி ஒரு விருப்பம் வர அப்படி என்ன தான் இருக்கிறது என்னிடம் என்ற எண்ணமும் மேல் எழுந்தது.

“விக்னேஷ், உங்க அம்மாக்கு என்ன எதற்கு பிடிக்கலனு சொல்லுங்க?”

“பிடிக்கலையா, அப்படியெல்லம் ஒன்னும் இல்ல, அவங்க சம்மதம் சீக்கிரமா கிடைச்சிடும்!”

“நான் அத கேட்கல விக்னேஷ், அவங்க இப்போ எதுக்கு சம்மதிக்கலைனு கேக்கிறேன்!”

“அவங்க உன்னோட அப்பா பத்தி யோசிக்கிறாங்க செல்வி”

“ஓ அப்டினா எங்கம்மாவ அவங்க சந்தேகிக்கிறாங்க அப்படிதானே, அடிதளமே சரியில்லாதப்ப அதுக்கு மேல கட்டிடம் கட்ட நினைக்கிறது தவறில்லையா?”

“ம்ம்.. செல்வி அவங்க மனசில ஒரு சந்தேகம் இருக்கு, அதை எப்படி சரி பன்னனும்னு எனக்கு தெரியும்! என்னப் பொருத்தவரையில அன்பு தான் வாழ்கையோட அடித்தளம் அது நமக்குள்ள வலிமையானதாதான் இருக்கு! அம்மா என்னோட விருப்பத்திற்கு மாற ஒரு நாளும் நடந்ததில்ல, அவங்கள எப்படி சம்மதிக்க வைக்கனும்னு எனக்கு தெரியும்! ஆனா உன்ன தான் என்னால புருஞ்சுக்கவே முடியல, வீட்டுல சொன்னங்கான்னு சம்மதம் சொன்னியா என்ன?”

“சந்தேகத்தின் பேருல வாழ்கைய அமைச்சுக்க எனக்கு விருப்பம் இல்ல விக்னேஷ், அது ஒரு காரணம், நீங்க ஃபோர்ஸ் பன்னாம அம்மா கல்யாணத்திற்கு முழுமனதோட சம்மதிக்கனும், எனக்குனு சில சுய விருப்பங்கள் இருக்கு, என்னோட வாழ்கைய யாரோட வற்புருத்தலும் இல்லாம அமைச்சுக்க எனக்கு உரிமையிருக்கில்லையா?”.

அவளுடைய இந்த வார்த்தைகளுக்கு அவன் மௌனமானான், அதை யோசித்துக்கொண்டே மீண்டும் ரிஷியின் கெஸ்ட் ஹவுசிற்குள் அவனது கார் நுழைந்தது.

“செல்வி, ரிஷிய பார்த்துட்டு கிளம்பலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.