(Reading time: 27 - 54 minutes)

“மிரட்டாதீங்க ரிஷி, நீங்க விக்கியவிட பலமடங்கு நல்லவர் தான்!”

“அது சரி, முதல்ல உனக்கு விக்கியப்பத்தி என்ன தெரியும்?”

“ஏன் தெரியாது, ஒரு தரவ பார்த்துட்டு காதல் கீதல்னு பின்னாடியே சுத்துர அவரபத்தியும் தெரியும், அடுத்தவங்க அந்தரங்ககத்தை கற்பனையில ஏதெதோ நினைகிற அவங்க அம்மாவ பத்தியும் தெரியும்!”

“ஷட் அப் செல்வி!” விக்னேஷோட லவ் அ தயவுசெஞ்சு கொச்சைப்படுத்தாத..

“நீங்க என்னோட காதலை மட்டும் இப்படி சொல்லலாமா?”

“ஹையோ செல்வி.. உனக்கு எதுவும் புரியாது…!”

“ஆமா ரிஷி, நானும் வசதியான வீட்டுல பிறந்திருந்தா என்னோட காதலை தைரியமா வெளியே சொல்லலாம், ஏழ்மைக்கு எங்கேயும் மதிப்பு கிடையாதே!” இப்போது செல்வியின் வார்த்தைகளில் வருத்தம் இருந்தது.

“செல்வி, உன்னை நீயே தாழ்திக்காத, உன்ன மாதிரி பொண்ணுங்க இப்படி பேசுறது அழகில்ல.. அப்புறம் விக்கியபத்தி நீ என்ன நினைச்சுகிட்ட இருக்கிற, அவங்க அப்பா பெரிய பிஸ்னஸ்மேனா இருந்தவரு, இன்னிக்கு அவன் இங்க வேலைப்பார்க்கலாம் ஆனா அவன் வசதியில்லாதவன் கிடையாது!”

“ப்ளீஸ் ரிஷி, விக்கி விக்கி விக்கி, நான் அவரைப்பத்தி பேசல, அவருக்கு எனக்கும் நடுவுல எதுவும் இல்ல!”

“ஆமா ரிஷி.. செல்விக்கு விக்னேஷ் மேல காதல் கீதல் எதுவும் இல்ல !” குரல் வந்த திசையில் அதிர்ந்து இருவரும் திரும்ப, கண்கள் சிவந்து வேதனையை முகம் பிரதிபலிக்க நின்றிருந்தான் விக்னேஷ். அவனைப்பார்த்ததும் ‘மடார் மடாரென தன் நெற்றியில் அடித்துக்கொண்டான் ரிஷி! கோபமும் வேதனையும் கலந்து அவன் செல்வியைப்பார்க்க அவள் குனிந்திருந்தாள்.

“டேய் நீ ஏண்டா தலையில அடிச்சிக்கிற, செல்வியோட மனசு தெரியாம நான் தான் அவளை கஷ்டப்படுத்திட்டேன்…தலையில அடிச்சுக்க வேண்டியவன் நான் தான்!”

“டேய்..!” என ஏதோ சொல்ல வாயெடுத்த ரிஷியை “ஷ்ஷ்” என்று தன் வாயின் மீது விரலை வைத்து தடுத்தான் விக்னேஷ்.

“நாம ஒரு பெண்ண விரும்புறதும் அதே பெண் நம்மள விரும்புறதும் எவ்வளவு அற்புதமான விசயம் எல்லாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறதில்லடா! .. ம்ம் செல்வி உன்னோட வார்த்தைகள் ஞாயமானதுதான், உன்னோட சந்தேகங்களை தீர்க்கிற பொறுப்பு எனக்கு இருக்கு!

செல்வி நிமிர்ந்து விக்னேஷைப்பார்த்தாள், அவனை காயப்படுத்தியது அவள் மனதை வருத்தியது, முதன் முறையாக விக்னேஷிற்காக அவள் மனம் வருந்தியது.

“அம்மா, அவங்க உன்னபத்தி தப்பா நினைக்கிறாங்கனு நான் சொன்னது உண்மைதான்.. ஏனா உங்க அப்பாபத்தின முழுமையான விபரத்த சொல்ல அத்தையோ இளமாறனோ விரும்பல, உங்கப்பாவால கஷ்டப்பட்டதால அவரோட அடையாளத்தை நீங்க சொல்லவிரும்பல..இது எனக்கு தெரியும் ஆனா அம்மாக்கு தெரியாதில்லையா?”

செல்வி அவனைப்பார்த்து தலையசைத்தாள். அவள் அருகே வந்து மார்புக்கு நடுவே கைகளைக்கட்டிக்கொண்டு ஆளமாக பார்த்தான் விக்னேஷ்.

“ஆனா உன்னோட அடையாளம் என்னனு உன்ன விட எனக்கு தெரியும் செல்வி.. !”

செல்வியின் கண்கள் மிகுந்த வேதனையைப் பிரதிபலித்தது.

“கொடுமையான, ஆபத்தான நிலைமையில் இருந்து நம்மளை காப்பாத்தினவங்களை நம்ம மனசு விரும்புறதுதான் இயல்பு, அப்படிப்பார்த்தா ரிஷிமேல உள்ளக் உன்னோடக் காதல் உன்னோட உயர்ந்த குணத்தைதான் காட்டுது செல்வி!”

“மண்ணாங்கட்டி.. திஸ் இஸ் இன்ஃபேக்ஷுவேஷன்!” - ரிஷி

“ப்ளீஸ் ரிஷி, கொஞ்ச நேரம் என்ன பேசவிடு!” சத்தமான விக்னேஷின் வார்த்தைகளிக்கு ரிஷி மௌனமானான்.

“செல்வி, ஒரு வருஷத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுகிட்ட நடந்த மோசமான விபத்தில, ஆபத்தான நிலையில என்னோட அப்பாவ ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம், ஓ நேகடிவ் பிளட், கிடைக்காமா நாங்க கஷ்டப்பட்டப்ப, அங்க நர்ஸா இருந்த நீதான் அவருக்கு ப்ளட் கொடுத்த, உன்ன நேரடியா சந்திக்க முடியாத அந்த சூழ்நிலையில, கொஞ்சம் பணத்தை நான் டிரைவர்கிட்ட கொடுத்து அனுப்பினேன்,ஆனா நீ அதை மறுத்துட்ட செல்வி, முகம் தெரியாத உன்ன அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சுட்டு, நீ சொன்னயே “ஏழ்மைனு!” விலைமதிப்பில்லாதா என்னோட அப்பவோட உயிர நீ காப்பாத்திருக்கிற, எங்க எல்லாத்தையும் விட நீ தான் உயர்ந்தவ, அப்படிதான் எனக்கு அப்பவும் தோணுச்சு இப்பவும் தோணுது!”

விக்னேஷ் அவள் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான காதலுக்கு அர்த்தம் அப்போது அவளுக்கு புரிந்தது. கன்னியமான அவன் காதலுக்கு தான் தகுந்தவள் இல்லை என தோன்றியது செல்விக்கு!

“நீ தான் அப்பாவ காப்பாத்தினேனு இன்னிக்கு வரைக்கும் அப்பாக்கும் சரி அம்மாக்கும் சரி நான் சொல்லல, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அத சொல்லனும்னு நினைச்சேன்.. இனிமேல் அத சொல்லி ப்ரயோஜனம் இல்ல. ஹான் உன்னை தேடிட்டு நான் நீ வேலைபார்க்கிற ஹாஸ்பிட்டலுக்கு நிறைய தரவ வந்தேன், கொஞ்ச கொஞ்சமா என் மனசு முழுக்க நீ நிறைஞ்சுட்ட அவ்வளவு நல்ல பொண்ணு நீ!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.