(Reading time: 27 - 54 minutes)

அப்படி ஒரு நாள் உன்ன ஃபாலோ பன்னும்போது தான், நீ மிஸ் பன்னுன உன்னோட பர்ஸ் எனக்கு கிடைச்சுது, அத வச்சு என்னை அறிமுகப்படுத்திகலாம்னு நான் உன் விலாசத்த பார்க்கும்போது அதில இருந்து உன்னோட ஃபேமிலி ஃபோட்டோ ஒன்னு எனக்கு கிடைச்சுது!.. இப்போது அவன் நிறுத்திவிட்டு ரிஷியின் முகத்தைப்பார்த்தான்.

தன் நண்பனைப்பார்த்து புன்னகைத்தான் ரிஷி, கண்களில் அவன் அனுமதியைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்தான் விக்னேஷ்.

“உன்னோட அப்பா, கர்பிணியான உன்னோட அம்மா. சின்னவயசு இளமாறன், உங்க யாரையும் எனக்கு அடையாளம் தெரியல ஆன, ரகு மாமாவ எனக்கு நல்ல தெரியும்! அவங்க வேறு யாருமில்ல செல்வி, நம்ம அருந்ததி அத்தையோட கணவர் தான்”

செல்வி உண்மையில் அதிர்ந்து தான் போனாள். தன் கண்களால் பார்த்தறியாத களையான அப்பாவின் முகம், இளமாறனிடம் மின்னும் அதே களையான முகம், சிசுவாக பூமியில் இவள் வந்து விழும் முன் உறவை அருத்ததாக சொல்லப்பட்ட அந்த முகம், அவள் பார்த்து பார்த்து திளைத்து, தனக்கே தனக்கென பொக்கிஷமாக பாதுகாத்த தன் குடும்ப புகைப்படம், எத்தனையோ முறை தன் அம்மாவிடமும் இளமாறனிடமும் கேட்க விரும்பி அவளிடம் சொல்லப்படாத அவள் தந்தையின் தோற்றம், அறிமுகம் தனக்கு தெரியும் என்கிறான் ஒருவன், அவனை தான் இவ்வளவு நாள் இவள் வெறுத்தாள், உள்ளம் வெதும்பியது, ஏற்பட்ட சலனங்கள் யாவும் மறைந்து, தன் தந்தையைப்பற்றி கேட்கவிரும்பி அவள் விக்னேஷின் முகத்தைப்பார்த்தாள், அதிலிருந்த ஆர்வம் அங்கிருந்த நண்பர்கள் இருவருக்குமே புரிந்தது.

“அருந்ததி அத்தை, ரகு மாமா கல்யாண ஃபோட்டோ நான் பார்த்திருக்கேன், அது மூலமா அவங்களை எனக்கு அடையாளம் தெரிஞ்சுது, இன்னும் சொல்லப்போனா அருந்ததி அத்தையோட பல கேள்விகளுக்கு எனக்கு பதில் கிடைச்சுது.. அருந்ததி அத்தைக்கும் இது தெரியும், அத்தை தான் உன்னோட வீடு பத்தியும், இளமாறன் வனிதா அத்தைபத்தியும் விசாரிச்சு சொல்ல சொன்னாங்க, உன்ன நெருங்கிறது அவ்வளவு எளிதானதில்லைனு தோனுச்சு, ரிஷிக்கும் காவ்யாவுக்கும் கல்யாணம் பேசாம இருந்திருந்தா அத்தை உன்னைதான் ரிஷிக்கு பாத்திருப்பாங்க, அவங்களுக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும்!”

செல்வி இப்போதும் விக்க்னேஷை தான் பார்த்திருந்தாள், அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுள் பல அலையை எழுப்பியது.

“அத்தைக்கிட்ட உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குனு சொன்னேன், அத்தை தான், உன்னோட பயோடெட்டாவ தரகர்கிட்ட இருந்து வாங்கி, எங்கவீட்டுல கொடுத்து கல்யாண ஏற்பாடு பன்னினாங்க, அவங்களைப் பத்தி தெரிஞ்சா, வனிதா அத்தை இதுக்கு ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் அவங்ககிட்ட நான் சொல்லல, ஆனா நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே அத்தை உங்க வீட்டுக்கு வர்றதா தான் இருந்தாங்க, அது மட்டுமில்ல, இளமாறனுக்கு தகுதியான வேலையை ரிஷிகிட்ட சொல்லி ஏற்பாடு பன்னினதும் நான் தான். நம்ம நிச்சயதார்த்ததிற்கு முன்னாடி நீ யாருனு ரிஷிகிட்ட சொல்லியாச்சு, ஆனா உங்களுக்குள்ள இப்படி ஒரு சந்திப்பு இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை, ரிஷியும் அதை பத்தி எதுவும் எங்கிட்ட சொல்லல”

“அந்த சம்பவம் நடந்த அன்னிக்கே நான் செல்விய மறந்துட்டேன்டா..உன்னோட சேர்த்து செல்விய பார்க்கும்போதுதான், எனக்கு இவ தான் அந்த பொண்ணுனு தெரிஞ்சுதுடா.. !”

செல்விக்கு இன்னும் அது வேதனையாய் இருந்தது, அவள் வருந்தக்கூடும் என விக்னேஷிற்கு தோன்றியது!”

“பொய் சொல்லாதடா, ஒரு தரவ பார்த்தா மறக்க கூடிய முகமா அது!”

செல்வி நிமிர்ந்து விக்னேஷைப்பார்த்தாள், அவன் கூர்மையான கண்கள் அவள் மீது தான் இருந்தது. ரிஷி மெதுவாக நடந்து விக்னேஷின் தோளைத்தொட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், அவர்களுக்கிடையான புரிதல் தெளிவாய் இருந்தது. ரிஷியின் மீது மெல்லிய ஒரு கோபம் விக்னேஷிடமிருந்ததை அவனால் உணர முடிந்தது.

“லேட் ஆயிடுச்சு கிளம்புங்க..” ரிஷியின் குரலுக்கு இருவரும் அனிச்சையாய், இயங்க, “செல்வி” என அவன் அழைப்புக்கு அவனைகடந்து சென்றவள் திரும்பாது அங்கேயே நின்றாள்.

“செல்வி, இந்த விசயம் எதுவும் எங்கப்பாக்கு தெரியாது அத்தையும் சரி, வனிதா அத்தையும் சரி அவங்க வாழ்கையில நடந்ததை இன்னும் முழுமையா யார்கிட்டேயும் சொல்லல, அப்படி இருக்கும்போது இப்போதைக்கு இது நமக்குள்ளேயே இருக்கட்டும், உங்க கல்யாணம் முடியுற வரைக்கும்!”

திரும்பாது தலையசைத்தாள். விக்னேஷும் விருட்டென்று வெளியேறினான். அவனை மௌனமாக அலைக்கழிக்கும் உள்ளத்தோடு பின் தொடர்ந்தாள் செல்வி!

இருண்டிருந்த வானம் மின்னல் கீற்றோடு தூர தொடங்கியது…சன்னலின் வெளியே மழையைப்பார்த்திருந்தான் ரிஷி.. கொட்டும் ஒவ்வொரு துளியிலும் காவ்யாவின் முகம்.. “காவீ ஐ லவ் யூ … இந்த விசயம் தெரிஞ்ச நீ தாங்குவியாடீ” அவன் மனம் தத்தளித்தது.. மழை நீரில் ததும்பும் காகித கப்பலைப்போன்று…

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1120}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.