(Reading time: 10 - 19 minutes)

நிமிடங்கள் நத்தையாய் கரைய,”இந்நேரத்திற்கு இதன் அர்த்தத்தை ஓரளவிற்கு கெஸ் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..”,என்ற ஆச்சார்யா தனது வலது கையை அவர்களை நோக்கி நீட்டினார்..

அதனை புரிந்து கொண்டார் போல் ஒரு காகிதத்தை பதிலாக அவரிடம் நீட்டினாள் க்ரியா..

அந்த காகிதத்தை சில நிமிடங்கள் பார்த்தவர்,”இட்ஸ் டைம் பார் பாக் அப்.. கெட் ரெடி டூ அலரி மலை..”,என்று எழுந்து சென்றார்..

இரண்டு வாரங்களுக்குப் பிறகு..

அலரி மலையை அடுத்த வஞ்சிமாங்கூடல்

ழமையும் புதுமையும் நிறைந்த சிற்றூர்.. ஒரு பக்கம் இயற்கை விவசாயம் என்றால் மறுப்பக்கம் இயற்கை விவசயாத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களையும் பொருட்களையும் கணினி மூலம் எக்ஸ்போர்ட் செய்யும் இளைஞர் கூட்டம்..

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மக்கள் அனைவரும் சுற்றிக் கொண்டிருக்க எழிலுடன் அந்த ஊரிலுள்ள பெரிய வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர் நமது ஆச்சார்யா அண்ட் கோ..

வண்ண வண்ண கோலங்கள் முற்றத்தை அழகுபடுத்தியிருக்க மெல்லிய தென்றலானது அவர்களை வரவேற்பது போல் மரத்திலுள்ள மலர்களை அவர்கள் மேல் தூவி இரைத்தது..

காரை விட்டு வெளிவந்தவர்களை வரவேற்ற எழிலின் பாட்டி அழகுநாச்சி அவர்களை அந்தப் பெரிய ஹாலில் அமரவைத்தார்..

பயண களைப்பு தீர அனைவருக்கும் இளநீரைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டவர் அனைவரிடமும் பொதுவாக,”எழிலோட அப்பாவும் அம்மையும் ஒரு கல்யாணத்துக்கு பெங்களூர் போயிருக்காய்ங்க.. வர இரண்டு இராவாகும்(நாள்)..”,என்றார்..

“எழில் சொன்னான் அம்மா..”,என்ற ஆச்சார்யா,”நாங்க அலரி மலைக்கு இன்னைக்கு கிளம்பிடுவோம்மா..”,என்றார்..

“என்னய்யா இப்படி சொல்லுதீக..?? நீங்க இங்க தங்குவீகன்னு எதிர்பார்த்தோம்”,என்றார் சிறிது அதிர்ச்சியாக..

“அங்க தான் மா நாங்க ஆராய்ச்சி பண்ணப் போறோம்..அதனால் எங்களுக்கு அங்க தங்குன்னா தான் வசதி..”,என்றார்..

சிறு அமைதிக்கிப் பின்,”அப்போ இன்னைக்கு ராவு இங்கன இருந்துட்டு நாளைக்கு கிளம்புங்க..”,என்றவரிடம் மறுக்க மனமில்லாமல் ஒத்துக்கொண்டார் ஆச்சார்யா..

மாலை நேரம்..

ருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்

இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்

எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்

மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்

இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்

நினைத்தது பலித்தது ஹோ...

லல... லா... லல... லலலா....

லல... லா... லல... லலலா...

பழைய ஜீப் ஒன்றை ஓட்டிய வண்ணம் பாடிக்கொண்டு வந்தான் எழில்..

“எழில்.. இப்போ எங்கடா எங்களை கூட்டிட்டுப் போற..??”,என்று கேட்டாள் மயா..

“மலைவாசலுக்கு..”

“மலைவாசல்லா..?? அங்க என்ன இருக்கு..??”,என்று கேட்டான் விக்கி..

“மலை ஜாதி மக்களோட ஊர் விக்கி அது.. அலரி மலையை பூர்வீகமாக கொண்டவர்கள் அங்க இப்போ இருக்காங்க..”,என்றான்..

“அப்போ அலரி மலையில் இப்போ யாரும் இல்லையா..??”,இது மயா..

“ஆமா மயா.. இப்போ அங்க யாரும் இல்லை.. சிக்ஸ்ட்டீஸ் செவென்ட்டீஸ்ல மலைவாசிகளை அந்த மலையை விட்டு காலி பண்ணி பக்கத்தில் இருக்கும் கிராமங்களுக்கு குடிபெயர ஆர்டர் கவர்மென்ட்ட இருந்து.. சில பல பிரச்னைகளுக்கு அப்புறம் அவங்களும் அங்க இங்கனு குடிப்பெயர்ந்தாங்க.. இப்போ அதிக மலைவாசிகள் வாழுற இடம் மலைவாசல்..”என்றான்..

“உனக்கு அந்த மக்களில் யாரையாவது தெரியுமா..??”,இது தியா..

“என்னோட கொஞ்சம் பசங்க ஸ்காலர்ஷிப்ல எங்க ஸ்கூல்ல படிச்சாங்க..அவங்களைப் பார்க்கத் தான் போறோம்..”,என்றான்..

ச்சை பசேலென பசுமை நிறைந்த ஒரு குக்கிராமத்த்தில் எழிலின் தோழனின் வீட்டுத் திண்ணையில் குளிருக்கு இதமாக தேநீர் அருந்தியபடியே அமர்ந்து தங்களது ப்ராஜெக்ட்டைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தனர்..

“வேலா.. அலரி மலைக்கு யாராவது இங்க கைய்ட் மாதிரி கிடைப்பாங்களா..??”,தன் நண்பனிடம் கேட்டான்..

“உனக்கே தெரியும்ல எழில்..யாருமே எனக்குத் தெரிந்து சில வருடங்களாக அந்த மலைக்குள்ள போவதில்லை..”,என்றான்..

“ஏன் அப்படி..??”,என்று கேட்டாள் மயா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.