(Reading time: 12 - 24 minutes)

அகிலனை உதைக்க முடியாத கடுப்பில் தரையில் பலமாக காலை உதைத்த எழில்,”உங்களுக்கெல்லாம் ஏதாவது விளங்குதா..??”,என்றான் அதே கடுப்புடன்..

“கொஞ்சம் யோசிக்கன்னும் எழில்.. வித்யாசமான வார்த்தைகளாய் இருக்கு..”,என்றாள் க்ரியா..

“ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் புரியலையா..??”,இது தியா..

“நவம் அப்புறம் அலரி..இந்த இரேண்டுக்கு மட்டும் அர்த்தம் புரியுது..நவம்னா ஒன்பதுனு அர்த்தம், அலரி ஒரு வகை மலரின் பெயர்.. மற்ற வார்த்தைகள் கொஞ்சம் வித்யாசமா இருக்கு..”

“இறும்பூது அப்படீனா மலை தானே..??”,என்று கேட்டாள் தியா..

“யா..யா.. கரெக்ட் தியா..”,என்ற க்ரியா அவளுக்கு முத்தம் ஒன்று வைத்துவிட்டு மண்டபத்தின் ஓரத்திலிருந்த அவளது பேக்கிலிருந்த லாப்டாப்பை ஆன் செய்து எதுவோ செய்ய ஆரம்பித்தாள்..

“என்ன பண்றீங்க க்ரியா..??”,என்று கேட்டான் விக்கி..

“பழங்கால தமிழ் வார்த்தைகள் கொஞ்சம் நான் எனக்கு புரியும் வகையில் பீட் பண்ணி வைத்திருக்கேன்.. அதில் இந்த சுவடியில் இருக்கும் வார்த்தைகள் ஏதாவது இருக்கான்னு சேர்ச் பண்ணிப் பார்க்கிறேன்..”,என்றாள்..

“ஓ.. சூப்பர்..”,என்ற விக்கி,”நான் இந்த வார்த்தைகள் நெட்ல இருக்கான்னு சேர்ச் பண்றேன்..”,என்றபடி அவனும் தனது லாப்பை ஆன் செய்தான்..

“கெளரங்கன் பீஷ்மரோட இன்னொரு பெயர்..இங்க பாருங்க..”,என்றபடி விக்கி தனது லாப்டாப்பை மற்றவருக்கு காட்டினான்..

“சூப்பர் விக்கி..”,என்ற க்ரியா மற்றவர்களை பார்த்து,”கன்னப் பொறி அப்படீன்னா கோயில்ன்னு அர்த்தம்..”,என்றாள் க்ரியா..

“கோன் அப்படீன்னா..??”,இது ரிக்கி..

“கோன்.. இந்த வார்த்தைக்கு நிறைய அர்த்தம்..அரசன், ஆயர்கள் அதாவது ஆடு மேய்ப்பவர், அழகு, சூரியன், நாள் அதாவது டேட், வியாழன்..”,என்ற க்ரியாவை குறிக்கிட்ட மயா,“ஹே ஹே.. கம் அகைன் டார்லிங்..”,என்றாள்..

புரியாமல் ஒரு நிமிடம் விழித்தவள் தான் சொன்னதை கிளிப்பிள்ளை போல் திருப்பி சொல்லத் துவங்கினாள்..

அவளை ஒரு இடத்தில் நிறுத்தியவள்,“நவ கோன்ன்னு தானே சுவடியில் இருக்கு.. நவ மீன்ஸ்னா ஒன்பதுனு தானே அர்த்தம்.. அப்படீனா.. ஒன்பதிற்கு பக்கத்தில் நாள் அதாவது டேட் இதை சேர்த்தால் தான் அது முழுமையடையுதோன்னு ஒரு பீல்..”,என்றாள்..

“இருக்கலாம் மயா.. ஆகவ அப்படீன்னா என்னனு சரியா தெரிந்தா ஒரு க்ளூ கிடைக்கலாம்..”,என்றாள்..

“ஆகவன்னா போர்ன்னு தோணுது..”,என்றான் ரிக்கி..

“எப்படி அப்படி சொல்றீங்க..??”,இது எழில்..

“ஆகவ அப்படீங்கற வார்த்தையை மட்டும் விட்டுட்டு மத்த வார்த்தைகளோட அர்த்தத்தை மட்டும் சேர்த்துப் பாருங்க..”

அவன் கூறியது போல் மற்ற வார்த்தைகளை கோர்த்துப் பார்த்த க்ரியா,“வாவ்.. யெஸ் ரிக்கி.. செம்ம கெஸ்ஸிங்..”,என்றபடி அவனுக்கு ஹை பை கொடுத்தாள்..

ஒரு பேப்பரில் பாடலையும் அதன் பொருளையும் அனைவரும் கூறக் கூற எழுதி வந்த தியா,“ஒரு எழுத்துக்கு மட்டும் அர்த்தம் மிஸ்ஸிங்..”,என்றாள்..

“ஒரு எழுத்துக்கு மட்டுமா..?? என்ன சொல்ற..??”,என்றாள் க்ரியா..

“ஆமாம் ஒரு எழுத்துக்கு மட்டும் தான்.. மூன்றாம் வரியில் “உ” மட்டும் தொங்கிக் கொண்டி இருக்கிறது..”,என்றாள்..

“ ’உ’ ங்கறது ஏதோ ஒரு கடவுளைக் குறிக்கும் எழுத்தாக இருக்காலாம்..”,என்றான் எழில்..

“இருங்க பார்க்கிறேன்..”,என்ற க்ரியா ஏதோ தனது லாப்பில் தேடிவிட்டு,”சிவன் கோயில்..”,என்றாள்..

எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடிச்சிட்டோம் என்று ஒரு நிமிடம் குதித்த மயா தியாவின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டு,”எனி திங் ராங்..??”,என்று கேட்டாள்..

“முதல் இரண்டு வரிக்கும் கடைசி இரண்டு வரிக்கும் கனெக்ஷனே இல்லை..”,என்றாள் யோசனையாக..

“என்ன சொல்றீங்க...?? புரியலை..”,என்றான் ரிக்கி..

“முதல் இரு வரியின் அர்த்தத்தைப் பாருங்க “போரின் ஒன்பதாம் நாள் பீஷ்மரை அழிக்க” அப்படீன்னு வருது.. அடுத்த இரு வரிகளுக்கு “சிவன் கோயில் அலரிப்பூ மலை”னு அர்த்தம் வருது.. ஆனால் ஏதோ லிங்க் இல்லாத மாதிரி..”,என்றவள் சுவடி இருந்த பெட்டியை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பினாள்..

யாரும் எதிர்பாரா வண்ணம் அதிலிருந்து ஒரு மெலிதான சதுரமான மரப் பலகை விழுந்தது..

என்னதிது என்பது போல் அதனை கையில் எடுத்த ரிக்கி,”இதென்ன கோடு கோடா இருக்கு..”,என்றான்..

ரிக்கியிடமிருந்து அதனை வாங்கிய எழில்,”இது.. இது ஒரு வகை மேப்..”,என்றான்..

“ரொம்ப வித்யாசமா இருக்கு எழில்..”,என்ற மயா,”என்னடா யோசிக்கற..”,என்று கேட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.