(Reading time: 6 - 12 minutes)

23. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

ன்னை கேட்டு நான் உன்னை காதலிக்கல வருண். இப்போ நீ விட்டுட்டு போன்னு சொன்னதும் உன்னை காதலிக்கிறத நிறுத்தவும் முடியது. என் மனசு, என் உணர்வு, என் காதல் அது எனக்கு சொந்தமானது. மறந்துடு..இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ உளறிட்டு இருந்த மரியாதை கெட்டுரும்!” என்றபடி எதிரில் அமர்ந்தவனின் முகத்தில் தண்ணீரை ஊத்திவிட்டு வேகமாய் எழுந்தாள் அர்ப்பணா.

“கட்.. ஷாட் ஓகே.. சூப்பர் அர்ப்பணா” என்று இயக்குனர் சொல்லிவிட்டு தனது அருகில் நின்ற உதவி இயக்குனரிடம் பேச தொடங்கினார்.

“அடுத்த சீன்ல அந்த சோக பாட்டு வரும்..காஸ்டியூம், லோகேஷன் எல்லாம் இன்னொரு தடவை பார்த்துக்கோங்க.. இப்போ எல்லாரும் லன்ச் ப்ரேக் எடுக்கட்டும்!” என்று அவர் கட்டளை இட அந்த படப்பிடிப்பு இடமே அவரின் கட்டளைக்கு ஏற்ப இயங்கியது.

தனது கேரவனுக்கு ஏற எத்தனித்த அர்ப்பணாவை அவளது மேனஜர் தடுத்தார்.

“அர்ப்பணா மேம்..”

“ சார்..சொல்லுங்க என்ன விஷயம்..”

“அது…”

“என்ன எதுவும் பிரச்சனையா?”

“அப்படி இல்லைங்க மேடம்.. ஆனா..”

“எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க ..”

“ உங்கள பார்க்க உங்க அப்பா அம்மா வந்துருக்காங்க..”என்று தயங்கியபடி அவர் சொல்லவும் ஒரு கணம் சர்வமும் அடங்கி போனது அர்ப்பணாவிற்கு!

ஏன் வந்தார்கள் ? அன்பு பாராட்டவா? தங்களது தவறை உணர்ந்து விட்டார்களா? அல்லது மீண்டும் தன்னை காயப்படுத்த வந்தார்களா? பெற்ற கடனைஅடைத்துவிட்டு போ? என்பார்களா? ஆயிரம் கேள்விகளை இதயம் ஈட்டியை போல எறிந்தது.

“ப்ரஸ் யாராச்சும் இருக்காங்களா? அவங்க இந்த வந்த விஷயம் யாருக்காவது தெரியுமா?” பதட்ட்த்துடன் கேட்டாள் அவள்.

“இல்லம்மா.. அவங்க வெளில ப்ளூ கலர்கார்ல இருக்காங்க..”

“நீங்களே அவங்க்கிட்ட பேசி அனுப்பி இருக்கலாமே சார்?” என்றாள் அர்ப்பணாஇயலாமையுடன்.

“உங்ககிட்ட சொல்லாம நான் அப்படிபண்ணுறது சரி ஆகுமாம்மா?” தயக்கமான தொனியில்கேட்டார் அவர்.வயதில்  இளையவள் என்றாலும் அர்ப்பணாமீது அதீத மரியாதையும்  அன்பும் கொண்டுள்ளார்  அந்த மேனஜர். தன்னுடைய மகளிடமே, “நானும் அம்மாவும் உங்கூட கடைசிவரை வர மாட்டோம் பாப்பா..அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது நீ அர்ப்பணாமேடம் மாதிரி தைரியமான பொண்ணாக இருக்கனும்”என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார். அவர் கண்ணுக்கு எப்போதுமே துணிச்சலின் மறு ரூபமாய் இருப்பவள், இன்று தயங்கி நிற்பதும் ஏனோ? என்ற குழப்பம் அவருக்குமே இருந்தது.

“உங்களுக்கு என்ன பேசத் தோணுதோ அதை பேசுங்கம்மா” என்றபோதே அவளின் செல்போன் சிணுங்கியது.புதிய எண்ணை திரையில் பார்த்தவள், சந்தேகமான தொனியில் அழைப்பை எடுத்தாள்.

“ஹ..லோ..”

“அபி..” அன்பில் கனிந்த ஆண் குரலில் ஒன்று அவள் செவிகளுக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது. யாரிது? என்று அவளது மூளை யோசிக்க தொடங்க, அவன் தொடர்ந்து பேசினான்.

“அபி.. ஏன் தயங்குற? நீ கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்த தைரியத்தை இப்படி ஈசியா இழக்கலாமா? உனக்கு ரெண்டு சாய்ஸ் இருக்கு.. ஒன்னு, நடந்ததை ஒருதடவை நினைச்சு பார்த்து அதே வேகத்தில் அவங்ககிட்ட பேசி திருப்பி அனுப்பிடு.. அப்படி இல்லன்னா,மனசுல எதையும் சுமக்காம ரொம்ப இயல்பா அவங்களுக்கு என்னத்தான் வேணும்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி முடிவெடு!”. அவளுக்கு தேவையானது இந்த வார்த்தைகள் தான்.! எதையும் சமாளிக்கும் திறன் நிச்சயம் இருக்கிறது அவளுக்கு. இருப்பினும் உன்னால் முடியும் என்ற நம்பிக்கையும் அவ்வப்போது தேவைப்பட்டது.

“தேங்க்ஸ்..நீங்க ராகவேந்திரன் தானே?” சின்ன சிரிப்புடன் வெளிப்பட்ட்து அந்த கேள்வி.

“ஹேய்.. எப்படி கண்டுபிடிச்ச?”

“ஒரு ஃபோன் பண்ணவே இவ்வளவு நாளாகுதா உங்களுக்கு?”

“அது….”

“எப்போ மீட் பண்ணலாம்?” மீண்டும் அவனை ஆச்சர்யபடுத்தினாள் அர்ப்பணா.

“இப்படியே ஷாக் மேல ஷாக் கொடுத்தா என்னை நீ ஹாஸ்ப்பிட்டலில் தான் மா பார்க்கனும்!”

“இதுக்கு மேலயும் கண்ணாம்பூச்சி ஆடுனீங்கன்னா, கண்டிப்பா நானே அனுப்பி வெச்சிடுவேன்” என்று மிரட்டியவளின் பேச்சினை ரசித்து சிரித்தான் ராகவேந்திரன்.

“சரி..நான் அவங்களைபார்த்துட்டு வந்து பேசுறேன்..இது உங்க  நம்பர் தானே ஏசீபி சார் ?”என்று அவள் பவ்யமாக கேட்க,

“ ம்ம் ஆமா.. நானும்  கொஞ்சம்பக்கத்துல நின்னு உங்களை பார்த்துட்டு தான் இருப்பேன்..தைரியமா இரு !”என்று அவன் சொல்ல, புன்னகையுடன் ஃபோனை வைத்தான் ராகவேந்திரன்.

“இதுக்கு மட்டும்  எதுவும் குறைச்சலில்லை! நிரூ எல்லாம் உன் ஆசிர்வாதம்!”என்று தோழியை மனதிற்குள் பூஜித்துவிட்டு தன் பெற்றோரை தேடி போனாள்  அர்ப்பணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.